Sunday, August 1, 2010

சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்

சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்
====================================================================

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
=======================================================================

வழங்கினேன் சீவநென்றுஞ் சிவன்தா னென்றும்
வல்லதோ ரட்சரமுன் ரிருக்கவே தான்
களங்கமற வென்னையும்நீ கேட்பதென்ன
கடைதலையு  மானதுவு மதுவே யாகும்
துலங்கவே நால்மூன் ரட்சரமே யானால்
தோன்றிநீ எதுவரைக்கு மட்சரமே சொல்லும்
விளங்கவே யைம்பத்தி யொன்றி லப்பா
விளங்கி நின்ற வட்சரந்தான் வொன்றுதானே.

தானென்ற வட்சரந்தா நெனதுதான் சொல்லாய்
தப்பில்லையோ இனிமே லட்சரம் வேறுண்டோ
வேனென்ற பிரம்மமதுக் காஇஎரதெந் கலைதான்
வீடுபோ லதுவுமொரு யுறு  மாச்சு
நானென்ற பிரம்மத்தின் கண்ணுமானேன்
நாட்டினேன் கால்தலயோ டுடலுள்ளந்தான்
ஊனென்ற வட்சரந்தான் வேணு மென்றா
லுஇரான பரமத்தி லூணிப்பாரே

ஊணியது பார்க்க வென்றார் கண்தாநேங்கே
யுடம்பதனைக் கண்ணாலே பார்ப்பதுண்டோ
ஆணியதா இருப்பிடத்தைச் சொன்னாயானா
லாரிந்துனா னந்தவழி திறந்து பார்ப்பேன்
தோனியதோர் காலாலே யறியவேனும்
துலங்கிவிடு மப்பவல்லோ மூலமெல்லாம்
வாணிஎன்ற காலாலே யறியா விட்டால்
வல்லினமும் மெத்தவடா தலைகானாதே

காணாது வென்றுசொல்லி யுரைத்தே விட்டாய்
காண்பது நானினி யேது எதைநான் காண்பேன்
தோணாது கபடமதாய் சொன்னாயானால்
துணையொரு  வரில்லைஇனி நீயுநானே
பூணாது இருந்து விட்டா லரிவதென்ன
பிழைமோசஞ் செயேனான் சும்மாசொல்லு
கோணாது கோணமாடா முக்கோனமப்பா
கொடிதான சுழிதானே கொளுத்தும் பாரே

கொளுத்து மென்ற வட்சரத்தை வாயாற் சொல்லக்
கூடாது வதுசொல்லக் கூச்சமெத்த
வழுத்து மென்ற வட்சரமே கொளுத்தும்போது
வந்தவழி கூச்சமது எங்கே எங்கே
பழுத்து மென்ற வட்சரத்தைச் சொன்னாயானால்
பாதியுட லுந்தனுக்கு தத்தஞ்செய்வேன்
தலுத்த தொரு வட்சரந்தா னிதுதானொன்று
தலைந்து தான் ஆயரதென் கலயுந்தானே

தானென்ற கலையதுவே யானுங்கண்டேன்
தப்பியது வதுதனிலே யொன்றே யுண்டு
வேனென்ற வட்சரத்தைக் கூடசேர்த்தல்
வேனென்ற வட்சரதைக் கூடசேர்த்தால்
வெண்மை நிறங் காணுமது விரைந்துபாரு
கோனென்ற வட்சரத்தை யங்கேவைத்து
குறியாக வரிவதற்க்கு இடத்தைச் சொல்லு
நானென்ற வீடுதனில் நாதவீடு
நயனத்தின் மேலான சுழினைபாரே

பார்க்கவே வட்சரத்தைச் சுழினைவைத்து
பரிவாகக் கண்டுதங்கே பிரம்மசோதி
ஏற்க்கவே யட்சரமோ ரஞ்சுசேர்க்க 
வெனதுமுக மைந்துமைந்து வருணமாச்சு
சேர்க்க வறியாத வாலைப் பெண்ணைநீதான்
செயமான வட்சரம்நீ சொன்னதல்ல
தாக்க பரப்ரம்மந்தான் எனக்குச் சொல்லத்
தட்டுருவி பாய்ந்துதந்த சோதிதானே

சோதியென்ற விழிதிறக்க வக்கினியுமாச்சு
சோம சூரியனக்கிநியு மூன்று மாச்சு
வீதி யென்ற வக்கினியான் விழியாற்றானும்
விழித்தங்கே பார்க்கையிலே பத்தித்தையோ
நாதியென்ற பேர்களுமே வொருவரில்லை
நானொருவன் தாந்தனித்தே நந்தவேளை
ஓதியென்ற பெண்ணையுன்தான் நானும்பார்த்து
வுடற்பாதி கொடுக்கவுந்தான் தேடினேனே

தேடினே னாதார மொன்று மில்லை
திரண்டுருண்ட பிரம்மத்தில் நின்றுகொண்டு
சாடினேன் திசைசத்தி சமைத்தே னப்பா
சலன மில்லாப் பீடமதாய் போட்டே னொன்றே
கூடினேன் வொருத்திதனை சிரசிற் கொண்டேன்
கூட்டோடே தானனைந்தேன் வொருத்தி தன்னை
நாடினேன் வொருத்தி தன்னை யேவற்காக
நாயகியாள் பாதமதில் வைத்திட்டேனே

வைத்திட்டேன் சத்திகளோ நாலுபேர்கள்
வகையான ஆதிசத்தி பராசக்தியோடு
மெயத்திட்ட ஞானசத்தி வாளைசத்தி
முதலான நால்வருக்கும் பாங்காயீந்து
சித்திட்ட முகம்நாலு மவரவற்குச்
சமபாகங் சேர்ந்துநா நங்கே நின்றேன்
ஓத்திட்டே நொருமுகமும் ப்ரம்மத்தோடே
யுறவாக ப்ரம்முக மானேன் பாரே

பார்க்குமென்ற பீடசத்தி ரூபந்தானும்
பரிவான கலையிருநூற் றிருபத்தி நாலாம்
எர்க்குமென்ற சத்திதான் ப்ரித்திவயுமானா
லென்ன சொல்வேன் அவளுடைய உடல் வளப்பம்
மார்க்கமென்ற அப்புவது  ரத்தமாச்சு
மைந்தனே தேயுவென்ற பிந்துமாச்சு
தீர்க்கமென்ற புல்பூடு விருட்சமெல்லாம்
திறமான ரோமமது வாய்வுமாச்சே

ஆச்சுதேன்றே யாவளுடனான் கலந்ததாலே
யாகாச முதலாக வஞ்சுமாச்சு
வாச்சுதென்ற பொன்மேரும் ரசிதமேரு
வல்லபையாள் தனமிரண்டு மாகுமாகும்
நீசுதேன்றே யானுமே சேர்ந்தபாகம்
நிருவாணி வெள்ளியிட மேருமாச்சு
காச்சுதென்ற சத்தகிரி சிவகிரியுமாகும்
கைலாசக் கொடிமுடியு மிதுதான் காணே

காணவே இரத்தின மாபரண மாச்சு
கனமான மேகமது வஸ்திரமாச்சு
பூணவே ஜெகச்சோதி சொல்லப் போகாப்
பூரணமாய் விளந்ததெல்லா மவளுக்குல்லே
ஆனவே யாதிசத்தி யாதிவஸ்த்து
வவலல்லா லதிகார மார்க்கு மில்லை
தோணவே யானுமிவள் மூலந்தன்னை
துலங்கவே கண்டதில்லை என்னாற்றானே

தானென்ற லட்சுமியு மிவள் தானாகுங்
தாங்கியதோ ரட்சரமும் அவ்வும் உவ்வும்
வேனென்ற பிராணசத்தி பிரியாசத்தி
நானென்ற மேருவதி லிருந்து கொண்டு
நாட்டினே னநேகவித சிருஷ்டிப்பாகத்
தேனென்ற ப்ரம்மம தாச்சரியம் பார்த்து
தேவியைப் போற்கலைபிரிந்து சிருஷ்டித்தேனே .

எல்லா ஞான யோக  உண்மைகளையும் தெளிவாக சொல்லிவிட்டார் அய்யன் மக்களுக்காக , அவர்கள் மேன்மை பெற , உண்மை உணர .

நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை , சும்மா இருந்து உன்னினால் போதும் .

நன்றி


==================================================================
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
==================================================================3 comments:

 1. Excellent Work! Please continue! It seems Bogar connects several things at a place

  ReplyDelete
 2. Tnx a lot for the ecouragment sir , But one thing i would like to say , here wt are all getting posted all by our mahaguru , mudhal siddhar , emperumaan Bhoga maharishi siddhars wish , and it seems the people having his blessings , they are only visiting this pages.

  I pray emperumaan Bhogar,all the peoples should visit this pages and to know about the siddha gnyanamaarkam.

  ReplyDelete
 3. Thank you....sir....bless and be blessed....

  ReplyDelete