Friday, August 13, 2010

குரு எம்பெருமான் போகர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர ஞானம் - 10

குரு எம்பெருமான் போகர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர ஞானம் - 10 








-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
--------------------------------------------------------------------------------------------------------

காணவே மூலமது அண்டம்போலக்
காரணமாய் திரிகோணமாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளையமாகும்
புறம்பாக இதழதுதான் நாளுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரத்தை
நவிலுவேன் வயநமசி றீறீ யாகும்
ஊணவே முக்கோணத்துள் ஓங்காரம்
உயர்சியாம் அதற்க்குள்ளே அகாரமாமே          

அகாரத்தின் மேலாக கணேசர் நிற்ப்பார்
ஆதியொரு கோணத்தின் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாள் சத்திநிர்ப்பால்
ஒடுங்கியதோர் முனையோன்றிர் கதலிப்பூவாய்
எகாராமாய் முகங்கீழ் குண்டலியாம் சக்தி
எனும் பாம்பு போல் உருட்டி சீறிக்கொண்டு
சிகாரமாய்ச் சுழுமுனையோடு உருவி நிற்ப்பாள்
திகழ் துரியா தீதமென்ற அவஸ்த்தைதானே

அவத்தைக்கு இருப்பிடமும் மூலமாகும்
அந்த கதலிப்பூ வெட்டிழதாய் நிற்கும்
நவத்தைக்கும் நந்தியனுள் வாய்இல் நிற்ப்பான்
நற்சிவமாம் சிகாரத்துக் கோடியானும்
வவத்தைக்கும் வாய்திறவான் மலராய்மூடும்
மைந்தனே எட்டிதழ் அதில் எட்டு சக்தி
பவத்தைக்கு சத்தி எட்டின் பேர் ஏதென்றால்
பாங்கான அணிமாவும் மகிமாத்தானே

தானான கரிமாவும் லகிமாவோடு
தம் பிரகாமியம் பிராத்தி ஈசத்துவம்
பேனான வசித்துவமா மென்றசத்தி
பேரெட்டு தேவதையும் தளத்தில் நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார்
ஏத்தமாய் நந்தியைத்தான் காணவிடாமல்
வானான வஸ்த்துவை நீ பானம் பண்ணி
வங்கென்று வாங்கியே கும்பிட்டூதே

ஊதினால் எனது சத்தி லகரியாலே
உலாவுவலா ரிதழெல்லாந் திறந்துவிட்டுப்
போதினால் ஆயி சொன்ன ஏவல் கேளு
பூந்து பார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருழத்துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக்கொள்வாள்
ஏதினால் இதுக்குள்ளே வாசி மாட்டு
இடத்தோடி வங்கென்று உள்ளே வாங்கே

வாங்கியே நந்தியிர் சிங்கென்று கும்பி
வலத்தோடி சிங்கென்று உள்ளே வாங்கி
தாங்கியே வங்கென்று இழுத்துக்கும்பி
தளமான தெளிவு வாரும் வெளியாய் காணும்
ஓங்கியே மாணிக்க ஓளி போல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி காணும்
சிறந்திருந்தால் பச்சைநிரமாகத்தானே

பச்சைநிற வல்லபையை பணிந்து போற்று
பாங்கான வாறுக்கும் பருவஞ்சொன்னால்
மொச்சையாய் மூலமது சித்தியானால்
மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சை நிற காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்று ஆறுதளம் தன்னிற் தோன்றும்
துச்சைநிற வாதம் சொற்படியே கேட்கும்
துரியத்தின் சூசகமெல்லாம் தோன்றும் பாரே

பாரென்று புரியட்ட நாலிர் சேர்க்கும்
பளிச்சென்று மூலத்திற் சோதிகானும்
காரென்ற தீபஒளி கண்ணோ கூசும்
கணபதியும் கண்முன்னிர் தனமே செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு உறுதி சொல்வார்
உற்பணமாம் வாதத்தின் உண்மை சொல்வார்
நேரென்ற சதாசிவத்தின் நிலையும் சொல்வார்
நீச்சென்று விட்டாக்கால் யோகம் போச்சே

போச்சென்று விடுகாதே மூலந்தன்னை
போகைலும் இருக்கைளும் மனத்தை ஊனு
பேச்சென்ற பிறர் சத்தம் கேளாப்பக்கம்
பிரத்திருந்து லட்சியத்தை பூட்டிவாங்கு
மாச்சென்று வாசியை நீ தவறோட்டாதே
மனந்தன்னை மூலத்தில் மருவிசேர்க்கும்
வேச்சென்று கடினம் போல் முன்னே காணும்
விடுகாதே மாச்சலதாய் விரைந்து உன்னே

உன்னியே பழகும் மட்டும் கடுசாய் காணும்
உட்புகுந்து பார்த்து வந்தால் உறுதி கூடும்
வன்னியே துலங்கும் மட்டும் மனம் சலிக்கும்
மாசற்ற ஒளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையும் இடைஇர் கூடும்
பேரான சுழினை தன்னில் நெட்டிட்டேரும்
நன்னியே நமன் வெருண்டு அப்பாற் போவான்
நாளெல்லாம் கடிகயுமாய் நாடமுற்றே.
------------------------------------------------------------------------
அய்யன் அருளால் சீர் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது , அனைவரும் அவர் அவர்கள் கருத்தை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளலாம் .

இந்த பத்து பாடலுமே ஞான மார்கத்திற்கு  மிக மிக முக்கியமானவை , எல்லா சூத்திரங்களும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது .

மிகபெரிய அன்பும் அருளும் எல்லா மக்களின் மேலும் கொண்டு அய்யன் முதல் சித்தர் குரு எம்பெருமான் போக மகரிஷி அருளி உள்ளார் , பயன் பெறுவோமாக .

நன்றி

---------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
---------------------------------------------------------------  

No comments:

Post a Comment