Thursday, July 29, 2010

சிருஷ்டிஇன் கலைகள் கூறல் மற்றும் ஞான யோக முறை

சிருஷ்டிஇன் கலைகள் கூறல் மற்றும் ஞான யோக முறை



====================================================================
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி


ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
=======================================================================
மூலம் எப்படி சிருஷ்டித்து ,   மூலத்தை எப்படி காண்பது , எப்படி அறிவது , ஞான யோக முறையை சூட்சுமமான முறையல் அய்யன் குரு எம்பெருமான் போக மகரிஷி கூறிவுள்ளார் , நன்கு ஒரு முறைக்கு பல முறை படித்து , பயிற்சி செய்து  உண்மையை உணரலாம்
=======================================================================
 பாரப்பா ப்ப்ரமமென்ற சோதிக்குத்தான்
பரிவான கலையதுவா இரத்தேட்டாகும்
சேரப்பா நான்பிறந்த கலைகள் தானுஞ்
சேர்ந்த தடாவன்பத்தி ஒன்றுங்க்கூடி
ஊரப்பா வானுமொரு பெண்ணுமான
வட்சரமுமது தானு மைம்பதொன்று
வேரப்பா வொன்றான வட்சரதால்
விதமெல்லா மறிந்ததடா யானுங்க்காணேன்

காணப்பா வைம்பத்தி யோன்றுகுத்தான்
கண்ணாகத் திறந்ததடா வொன்றுதானுந்த்
தோணப்பா வந்ததொரு கண்ணாலே
துலங்கவே யான்பிறந்த மூலங்கண்டேன்
நாணப்பா கருவிதா னாகாதேன்றும்
நாதமென்ற வோசையது வேணுமென்றும்
பூணப்பாவதிர் சிறிது கலைபிரிந்து
பூரண மாயுந்தனையுஞ் சிருஷ்டித்தானே

சிருஷ்டித்த களியதுதா நேத்தனையோ சொல்லுந்
திரண்டதொரு விபரமது தெரியசொல்லு
மட்டித்த கலையதுதா னைமூன்றப்பா
வதிகார மோகமதார் சிருஷ்டிசெய்தேன்
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததடா முகமைந்து கையும் பத்தாய்
எட்டித்த வுனக்கெனக்கு மூலமப்பா
யேகபறஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே

கொள்ளவே வைம்மூன்று கலைக்குத் தானுங்
குறியான வெளியொளிதா நெனதுதான் சொல்லும்
விள்ளவே வெளிதாநீ யல்லா லில்லை
விளங்கிநின்ற வெளியதுதான் என்னுகுள்ளே
நல்லவே யதையறிவ தேது மைந்தா
நானறியாச் சோதியென்ற கண்ணே வேணும்
வள்ளலே சோதியென்ற கண்ணே சொன்னால்
வகைமோச மெத்தவப்பா சொல்லோனாதே

சொல்லாதே சோதியது இல்லா விட்டாற்
சூட்சமது வறிவதுதா னேது யேது
கல்லான இருலதுதான் வந்துமூடுங்
கண்பத்து மிருந்ததனா லாவதேது
நல்லான சோதியது ஞானமாகும்
ஞானமென்ற கண்போனா லுஇரே இல்லை
வல்லான கன்னயுந்தான் வாயில் சொன்னால்
 வகையேது முனக்கில்லை வழங்கினேனே

அடுத்து சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்

====================================================================

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
=====================================================================

நானும் கிளிப்பிள்ளை சொன்னதை செய்கிறேன் . அவர் பாதக்கமலம் சரணம்

No comments:

Post a Comment