Monday, May 30, 2011

அபிராமி அந்தாதி - ஷக்தி

அபிராமி அந்தாதி  - ஷக்தி 



ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------





அய்யன் எம்பெருமான் குரு போகர் முதல் சித்தர் சிவா ஞான போதன் ( எம்பெருமானுக்கு கும்பமூர்த்தி சொன்ன பெயர் ) என்றுமே ஷக்தி பூஜை தவறியவர் இல்லை , சக்தியை பூஜித்து பூசித்தே அவள் அருள் முழுமையாக அடைந்தவர் , பின்வருமாறு ஜனன சாகரத்தில் சொல்கிறார் , 

வைத்திட்டேன் சத்திகளோ நாலுபேர்கள்
வகையான ஆதிசத்தி பராசக்தியோடு
மெயத்திட்ட ஞானசத்தி வாளைசத்தி
முதலான நால்வருக்கும் பாங்காயீந்து
சித்திட்ட முகம்நாலு மவரவற்குச்
சமபாகங் சேர்ந்துநா நங்கே நின்றேன்
ஓத்திட்டே நொருமுகமும் ப்ரம்மத்தோடே
யுறவாக ப்ரம்முக மானேன் பாரே

பார்க்குமென்ற பீடசத்தி ரூபந்தானும்
பரிவான கலையிருநூற் றிருபத்தி நாலாம்
எர்க்குமென்ற சத்திதான் ப்ரித்திவயுமானா
லென்ன சொல்வேன் அவளுடைய உடல் வளப்பம்
மார்க்கமென்ற அப்புவது  ரத்தமாச்சு
மைந்தனே தேயுவென்ற பிந்துமாச்சு
தீர்க்கமென்ற புல்பூடு விருட்சமெல்லாம்
திறமான ரோமமது வாய்வுமாச்சே

ஆச்சுதேன்றே யாவளுடனான் கலந்ததாலே
யாகாச முதலாக வஞ்சுமாச்சு
வாச்சுதென்ற பொன்மேரும் ரசிதமேரு
வல்லபையாள் தனமிரண்டு மாகுமாகும்
நீசுதேன்றே யானுமே சேர்ந்தபாகம்
நிருவாணி வெள்ளியிட மேருமாச்சு
காச்சுதென்ற சத்தகிரி சிவகிரியுமாகும்
கைலாசக் கொடிமுடியு மிதுதான் காணே

காணவே இரத்தின மாபரண மாச்சு
கனமான மேகமது வஸ்திரமாச்சு
பூணவே ஜெகச்சோதி சொல்லப் போகாப்
பூரணமாய் விளந்ததெல்லா மவளுக்குல்லே
ஆனவே யாதிசத்தி யாதிவஸ்த்து
வவலல்லா லதிகார மார்க்கு மில்லை
தோணவே யானுமிவள் மூலந்தன்னை
துலங்கவே கண்டதில்லை என்னாற்றானே

தானென்ற லட்சுமியு மிவள் தானாகுங்
தாங்கியதோ ரட்சரமும் அவ்வும் உவ்வும்
வேனென்ற பிராணசத்தி பிரியாசத்தி
நானென்ற மேருவதி லிருந்து கொண்டு
நாட்டினே னநேகவித சிருஷ்டிப்பாகத்
தேனென்ற ப்ரம்மம தாச்சரியம் பார்த்து
தேவியைப் போற்கலைபிரிந்து சிருஷ்டித்தேனே .

இதுக்குமேல அவர் எப்படி ஷக்தி மகா ஷக்திய பத்தி சொல்ல முடியும் , எல்லாத்தையும் முழுசா தெளிவா சொல்லிட்டாறு .

சரி நாமளும் ஷக்தி பூஜை பண்ணவேணாம? , அவங்க பண்ணதுல ஒரு இம்மி அளவாவது பண்ண வேணாமா ? குறைந்தபட்சம் உலக நன்மைக்காக இல்லன்னாலும் நம்ம சொந்த நன்மைக்காகவாவது பண்ண வேணாமா ? அவங்க அகத்துல பார்த்த , உணர்ந்த , பூசித்த அந்த மாஷக்திய நாம குறைஞ்ச பட்சம் இகத்துலையாவது பூசிக்க வேணாமா ? கண்டிப்பா பண்ணும் , பராபரித்தாய் கிட்ட அழுது இறைஞ்சி கேட்டா அனைத்தையும் சரிபன்னுவாங்க , அது என்ன சக்திக்கு மட்டும் அவ்ளோ அக்கறை நம்ம மேல ? குழந்தை அழுதா அம்மா தான முதல்ல பதறி போய் வருவாங்க ? குழந்தையும் அம்மாவ பாத்ததுதான அழும் , அம்மாவந்த பிறகு தான பால் கொடுத்து குழந்தைய சாந்தி பண்ணுவாங்க , நாமளும் குழந்தை தான , நிதர்சனம் என்னனு தெரியாம , இந்த மாயவனத்துல மாட்டிகிட்டு அனுதினமும் புலம்பற நம்மள அந்த அம்மாவந்து தான அவங்க மடில போட்டு தாலாட்டு பாடி , பாலூட்டி , உண்மைய காண்பிக்க முடியும் , அவங்களுக்கு நாம அழறது எப்ப கேக்கும் , எப்ப எல்லாம் குழந்தை அழுதோ அப்போ எல்லாம் அம்மாவுக்கு தெரியும் , சரி எப்படி அழலாம் , இதோ நமக்கு முன்னாடி அபிராமி பட்டர்ங்கற குழந்தை எப்படி அழுது , தொழுது அம்மாவை கூப்பிட்டு அவங்க மடில போய் படுத்து தூங்கியதோ , அதை போலவே நாமும் பண்ணுவோம் அதே அந்தாதிய .

அகத்தில் இருக்கும் ஷக்தி மாதேவியை , புவனம் காத்தவளை  , அகத்தில் இருந்து ஜகத்தில் ஜகன்மாதேவியாக உருசெய்து உருகி போற்றி துதித்து அவளுடனே இரண்டற கலப்போம் .

நிறைய இடங்களில் , நிறைய இணைய தளங்களில் கிடைத்தாலும் , இங்கும் இடுகிறேன் அந்த ஷக்தி மாதேவியின் , புவனேஸ்வரி தாயின் அருள்  அய்யன் எம்பெருமான் குரு போக மகரிஷியின்  தளத்தின் மூலமும் கிடைக்க என்று . 

ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஜெய் ஜகதம்பிகே , ஜெய் ஜகன் மாதா , சர்வம் ஏகம் , சர்வம் ஷக்தி மயம் . 

அகத்தில் அவளை இருத்தி இகத்தில் வழிபட சர்வம் ஜெயம் .

அபிராமி அந்தாதியில் உள் அர்த்தங்கள் பலவாறாக இருக்கும் புரிந்து படித்தல் நன்மை , புரியாமல் அவளே சரணாகதி என்று படித்தால் அதைவிட மிக்க நன்மை.


அபிராமி அந்தாதி 

காப்பு

தாரமர் கொன்றையூம் சன்பகமாலையும் சாத்தும் தில்லை 
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு எழும் பெற்ற 
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தயுல்லே 
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே 

நூல் 

ஞானமும் நல் வித்தையும் பெற 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே 

 பிரிந்தவர் ஒன்று சேர 

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்பூங் 
கணையும் கருப்புசிலையுமென் பாசாங்குசமும் கையில் 
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே 

குடும்பக்கவலையில் இருந்து விடுபட 

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு 
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப் 
பரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் 
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே 


உயர் பதவிகளை அடைய 


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி 
குனிதரும் சேவடிக்கோமலமே கொன்றை வார்சடைமேல் 
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே 


மனக்கவலை தீர 


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் 
அருந்திய நஞ்ச அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் 
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே 


மந்திர சித்தி பெற 


சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தயுல்லே
மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பென்னே 
முன்னியநின் அடி யாருடன் கூடி முறைமுறையே 
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே 


மலையென வரும்துன்பம் பனியென நீங்க 


ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் 
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் 
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும் 
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே 


பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட 


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலை மேல் 
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
சுந்தரிகைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே 


அனைத்தும் வசமாக

கருத்தனஎந்தைதன் கண்ணன வண்ணக்கனக வெற்பிற்
பெருந்தனபால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனபாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தென் முன்நிற்கவே

மோட்சசாதனம் பெற

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை 
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே எமையே இமயத்து 
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே  


இல்வாழ்க்கையில் இன்பம் பெற 

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் 
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் 
தானந்தமான சரணார விந்தம் தவள நிறக் 
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே 

தியானத்தில் நிலை பெற 

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி 
பண்ணியது உன் இரு பாதம் புயத்தில் பகல் இரவா 
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த 
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே 

வைராக்கிய நிலை எய்த 

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் 
காத்தவளே பின்கரந்தவலே கறைக்கண்டனுக்கு 
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே 
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே 


தலைமை பெற 

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் 
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தயுல்லே
பந்திப்பவர் அழியாய் பரமானந்தர் பாரில் உன்னைச் 
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின்தன்னளியே 

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற 

தன்னளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார் 
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம் 
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமளயாமலைப் பைங்கிளியே 

முக்காலமும் உணரும் திறன் உண்டாக 

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தோளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா 
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே 
அளியேன் அறிவளவிர்க்கு அளவானது அதிசயமே 

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய 

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் 
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி 
பதிசய மானது அபசயமாக முன் பார்த்தவர்தம் 
அதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே

மரண பயம் நீங்க 

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தயுல்லே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபோற்பாதமும் ஆகிவந்து 
செவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிர்க்கவே 

பேரின்ப நிலை அடைய 

வெளிநின்ற நின்திரு மேனியை பார்த்தென் விழியும் நெஞ்சும் 
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லைகருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமே 
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே 

வீடுவாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ 
அறைகின்ற நான்மறையின் அடியோடி முடியோ அமுதம் 
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ 
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

அம்பிகையை வழிபடாமல் இருந்தபாவம் தொலைய 

மங்கலையை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் 
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை 
பொங்கலைதங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலைநீலி செய்யாள் வெளியாள் பசும்பொற்கொடியே

இனிப்பிறவா நெறி அடைய 

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த 
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப் 
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே 
அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க 

கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை 
வில்லேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு 
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த 
கள்ளே களிக்கும் களியே அளிஎன் கண்மணியே 

நோய்கள் விலக 

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே 
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே 

நினைத்த காரியம் நிறைவேற 

பின்னே திறந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க 
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் 
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே 
என்னே இனிஉன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே 

சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக 

ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு 
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே  



நூறு பாடல்களையும் ஒரே மூச்சில் டைப் செய்ய முடியவில்லை , ஷக்தி அல்லவா , சோதித்து தான் பார்க்கிறார்கள் , முடிந்தமட்டும் விரைவில் முழுவதையும் இட்டுவிடுகிறேன் .


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி


-------------------------------------------------------


6 comments:

  1. unga kitta irunthu innum ethir paarkirom shankar ,.
    velai palu nu solli thappichirathinga thodarnthu idukaikalai podungal ,. ellame payanulla thagavalkal thane shankr

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. தனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே!

    ReplyDelete
  4. Arumai innum ethirpaakkurom..........

    ReplyDelete
  5. abirami battar padeeya padalgal alava ithu.

    ReplyDelete