Sunday, February 5, 2012

பொதிகை மலை - அகத்தியர் -3

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


மதுரை நண்பர் என்மீது மோதி நின்றார் , மோதிய வேகத்தில் நான் சிவாவின் பக்கம் சாய அவர் என்னை தாங்கி பிடித்து கொண்டார் , சிறிது நிதானத்துடன் , நண்பரும் நானும் பார்வையை கூர்மை ஆக்கிக்கொண்டு சத்தம் வந்த இடத்தை பார்த்தோம் .
ஒரு கரும் குரங்கு , எங்களை பார்த்து மிரண்டு போய் மிரட்டிக்கொண்டு இருந்தது , அதை பார்த்த பிறகு தான் அப்பாடா என்று நிமதி மூச்சே விட முடிஞ்சுது , வழி நெடுக யானை லத்தியை பார்த்த எங்களுக்கு அந்த ஞாபகமே முழுமையாக இருந்ததால் யானை என்றுதான் நினைக்க தோன்றியது , நாங்கள் இவ்வளவு பெரிய வனத்தில் பார்த்த ஒரே குரங்கு இதுதான் , ஏறும் போதும் சரி , இறங்கும் போதும் சரி இந்த ஒரே ஒரு குரங்கு தான் கண்ணில் பட்டது , ஆனாலும் பயங்கர பீதியை கிளப்பிட்டு போய்டுச்சு . அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் , அகத்தியர் சாமி அருளோட ஏறுறோம் அவர் நம்மள கை விட்டுடுவாரா என்ன ? நினச்சு பாக்கும் போது எனக்கே கொஞ்சம் கூச்சமா இருந்துது , அகத்தியர் சாமிய நம்பி வந்துட்டு பயப்படலாமா என்ன , நீங்க யாராவது அங்க போனீங்கன்னா எங்கள மாதிரி தேவை இல்லாம பயப்பட வேண்டாம் , ஏன் யானையே வந்தாலும் பயம் வேண்டாம் , நம்மீது அகத்தீசர் அருள் போர்வை முழுமையா இருக்கு .

 சரி  இப்போ அதிரமலைக்கு ஏறுவோம் .

ஹ்ம்ம் , அருமையான சூழல் கொண்டது இந்த இடம் , ஆங்காங்கே ஈரப்பசை இருந்ததால் அட்டை பூச்சியை பற்றிய பயமும் இருந்தது , ஏறுவதற்கு சற்று சிரமமா இருந்தாலும் எங்கயும் உக்கார மனசு வரல , அப்படியே மேல் மூச்சு கீழ் மூச்சுமா ஏறினோம் , இப்படி மூச்சு வாங்கறதும் கொஞ்சம் நல்லதுதான் போல , மூச்சு வாங்க வாங்க ஒருவிதமான பச்சிலை காத்து உள்ள போகுது அதோட சேந்து அந்த மண் வாசமும் , மூச்சு ஒரு பக்கம் வாங்கினாலும் இது ஒரு பக்கம் ஆள கொஞ்சம் உற்சாகபடுத்தி வேகமா நடக்க வைக்குது , படிக்கறவங்க ஒரு முறை தயவு செய்து போயிட்டு வாங்க இந்த ஒரு அனுபவத்த நல்லாவே உணர முடியும் , இப்படியே நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு முக்கூடல் வருது ஒரு பெரிய மரம் அதுக்கு கீழ நகம் போல உருவம் , ஏன் வினயகர்னு கூட சொல்லலாம் அப்படி உருவத்துக்கு சின்ன கோயில் மாதிரி வெச்சி இருக்காங்க , அதுக்கு மேல பாத்தா அதிர மலைங்கற போர்டு , போட பாத்தா பிறகுதான் அப்பாடானு இருந்தது , கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது , காலைல 9 .45  இருக்கும் அப்பா ஏற ஆரம்பிச்சு கிட்ட தட்ட 2  மணிக்கெலாம் 14  கிலோமீட்டர் ஏறி வந்து இருக்கோம்னா , என்னால நம்ப முடியல , நண்பர்களுக்கும் அதே நிலை தான் , கிட்ட தட்ட எங்களுக்கு முன்னையும் பின்னையும் ஏற ஆரம்பிச்சவங்கள சேத்து 60  பேர் , இவங்க எல்லாரும் நாங்க வந்து சேர்ந்து இரண்டு , மூன்று மணி நேரம் கழிச்சு தான் வந்தாங்க, இத என்னனு சொல்றது , எனக்கு அவ்ளோ உடல் வலு இருக்கா என்ன , கண்டிப்பா இல்ல , இது முழுக்க முழுக்க அகத்தியரோட ஆசிர்வாதமே தவிர வேற ஒன்னுமே இல்ல , நம்பினார் கை விடப்படார் , அவ்ளோ தான் .

முக்கூடல் அதிரமலை கேம்ப் ,ஏக பொதிகை ஏறும் வழி , கீழே செல்லும் வழி


forest canteen , சீசன் நேரத்தில் மட்டும்

தங்கும் விடுதி  - அதிரமலை

அதிரமலை காம்பில் இருந்து ஏக பொதிகை,நக பொதிகை,ஐந்தல பொதிகை


அதி காலை வேலையில் பொதிகை





அதிரமலை வந்ததும் forest dept  வெச்சி இருக்கிற ஒரு canteen  அப்பறம் யாத்ரீகர்கள் தங்க ஒரு பெரிய கட்டிடம் சுமார் 250 படுக்கற மாதிரி இருக்கு , இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னனா , கிட்ட தட்ட ஒரு 15 ல இருந்து 20 கழிப்பறை மற்றும் குளியல் அறை இருக்கு , இத septic  tank எல்லாம் வெச்சி பக்காவா பராமரிகறாங்க , பாக்கும் போது அந்த வனத்துறை இலாக்காவ பாராட்டாம இருக்க முடியல , அந்த கேரளா மக்களும் ரொம்ப நல்ல மனுஷங்க , கழிப்பறையை மட்டுமே பயன் படுத்துறாங்க , காத்தாட அப்படி இப்டின்னு எங்கயும் வெளியல அசிங்க படுத்தல , கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது , ஆஹா நாம போற சதுரகிரில இத மாதிரி இருந்த எவ்ளோ நல்ல இருக்கும்னு தான் தோனுச்சு , இது மட்டும் இல்லாம வர வழி முழுக்க அங்க அங்க மூங்கில் கூடை , குப்பையை போடறதுக்காக வெச்சி இருந்தாங்க , மக்கள் அங்கயும் சரி சரியாய் குப்பய போடறதுக்கு அதா மட்டும் தான் பயன் படுத்தறாங்க , ரொம்ப நல்ல ஒரு நடை முறை நல்ல ஒரு ஒழுக்கமும் கூட , இது மாதிரி சதுரகிரி இருந்ததுனா , நினைக்கும் போதே நல்ல இருக்கு , எல்லாம் மகாலிங்கத்துக்கு தெரியாதா என்ன .

நல்ல பசி , சாப்பிடலாம்னு கான்டீன் உள்ள நுழைஞ்சோம் , ஒரு சாப்பாடு ரூபாய் 75 /- , அந்த இடத்துக்கு அத குடுக்கலாம் , நல்லாவே இருக்கு , கூட்டு பொரியல் , சாம்பார் , ரசம் , என்ன சாப்பாடுதான் கேரளா அரிசி , பாக்கதான்  மொச்சகொட்ட சைஸ்ல இருக்கு , சாப்பிட்ட நல்லாதான் இருக்கு. சாப்பிட்டுட்டு அல்லுக்கொரு பாய் அங்கையே வாங்கிகிட்டோம் , ஒரு பாய் ரூபாய் 5 /- , திரும்ப இறங்கும் போது குடுத்தா போதும் . பெரிய ஹால் இருக்கு அதுல போயிட்டு பாய விரிச்சி படுத்தோம்னா போதும் அடுத்த நாள் காலைல தான் எந்திரிப்போம் , குளுருக்கு நல்ல கதகதப்பான இடம் , நல்ல அகத்தியர் இருக்கிற ஏக பொதிகையை பாத்தா மாதிரி இருக்கு ,கேம்ப்  சுத்தி அகழி வெட்டி விட்டு இருக்காங்க , யானை , கரடி , காட்டெருமை , காட்டு பன்னி எதுவும் உள்ள திடுதிப்புன்னு வர முடியாத அளவுக்கு , நல்ல ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் .இதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம் அந்த இடம் சீசன் அல்லாத நேரத்துல எப்படி இருக்கும்னு .

இந்த காம்ப்ள இருந்து மேல ஏக பொதிகை ஏறனும்னா 6 .5  கிலோமீட்டர் , நாங்க கணக்கு போட்ட படி ஏறனும்னா 2  மணி நேரம் போதுமானதாக இருந்தது , ஏன் என்றால் வந்த 14 கிலோமீட்டர் ஏற நான்கு மணி நேரம் மட்டுமே , தேவை பட்டது பாதிக்கு பாதி கூட இல்ல , இரண்டு மணி நேரம் அதிகபட்சம் என்றுதான் நினைத்தோம் , நடந்தது வேறு .

நாளைக்கு பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------

No comments:

Post a Comment