Wednesday, March 30, 2011

ஓதிமலை - 2

ஓதிமலை - 2


ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து

ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து

-------------------------------------------------------


ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------
 
 
ஓதிமலை புகைப்படங்கள் , நண்பர்கள் பார்வைக்காக ,
ஓதிமலை
  


ஓதி மலை அடிவாரம் அமைதியான விநாயகருடன் தொடங்குகிறது

ஓதி மலை அடிவாரம் , அமைதியான ஒரு நிசப்தமான சூழலுடன் அமைந்து உள்ளது , சுற்றிலும் ஆராவாரத்துக்கான எந்த அடையாளமும் இல்லை , அமைதி , நிசப்தம் இதை தவிர வேறு ஒன்றும் இல்லை , மனம் இங்கேயே அடங்கிவிட தொடங்கும் .

விநாயகர் கோவில் அருகில் சிமெண்ட் கல் , மணல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது , வரும் பக்தகோடிகள் முடிந்த அளவு மேலே தூக்கிக்கொண்டு சென்றார்கள் என்றால் அவர்களின் கைங்கரியம் என்றென்றும் ஓதியப்பரின் பாதங்களில் நிலைத்து நிற்கும்


இடையில் வரும் விநாயகர் ஆலயம்

சுமார் எட்நூறு நெட்டான படிகள் ஏறிய பிறகு ஒரு  அமைதியான  வியாயகர்  கோயில் ஒன்று  வருகிறது , மிக அமைதியான இடம் , மனித சஞ்சாரத்தில் இருந்து சிறிது விலகி வந்ததை நன்றாகவே உணரலாம். இன்னும் கோயிலுக்கு உள்ளே சென்று அமர்ந்தால் , அப்பா வெளியில் மட்டும் அல்ல உள்ளேயும் ஒரு அமைதி ஏற்ப்படும் , பலவிதமான் தினசரி அலுவலக பிரச்சனைகள் , தோல்விகள் , வெற்றிகள் , பல குடும்ப பிரச்சனைகளில் இருக்கும் பொழுது எல்லாம் இங்கே சென்று அமர்ந்து வருவது மனதிற்கு பல முறை ரணத்திற்கு மருந்து போடுவது போன்று இதமாக இருந்து இருக்கிறது .

ஒருமுறை நண்பர் அனந்துவுடன் சென்ற பொழுது , நண்பரும் நானும் இந்த கோயிலில் இருந்து வலது புறம் செல்லும் பாதையில் சென்றால் அய்யன் தவம் செய்த குகை ஒன்று வரும் , அதை பார்க்க சென்ற எங்களுக்கு ஒரு உள்உணர்வு மேலும்  மரங்களின் ஊடே  முன்னேறி செல்ல தூண்டியது , நாங்களும் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று சிறிது தூரம் நடந்தோம் , ஒரு இடத்தில் தானாக நிறுத்தவும் பட்டோம் , ஏதோ ஒன்று இதற்க்கு மேல் செல்லக்கூடாது என்பதை போல் உணர்ந்தோம்  , நின்ற இடத்தில் இடது புறம் பார்த்தால் ஒருவர் நன்றாக ஆசனத்தில் அமர்வது போன்ற ஒரு அளவான பாறை ஏறக்குறைய வட்ட வடிவமாக அழகாக இருந்தது , கிடைத்த வாய்ப்பை விடுவோமா என்ன? சிறிது நேரம் அதில் அமர்ந்து அமைதியாக உட்கார்ந்து இருந்து விட்டு திரும்பி செல்லலாம் என்று கிளம்பியபொழுது யாரோ பிரணவ மந்திரத்தை சொல்வது போல உணர்ந்தேன் , சரி நமக்குதான் பிரம்மை போல என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து , திரும்பி விநாயகர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் , நண்பர் அனந்து சிறிது உன்னிப்பாக எதையோ கேட்டு விட்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தார், திருபாவும் உன்னிப்பாக கேட்டு விட்டு , என்னிடம் திரும்பி , உங்களுக்கு என்ன கேட்துனு கேள்வி எழுப்பினார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஒன்னும் காதுல விழலன்னு சொன்னேன் , நண்பர் சொன்னார் , யாரோ ஒருவர் ஓம் என்று முதலில் கூறுகிறார் , பின் நிறைய நபர்கள் ஓம் என்று கூறுகிறார்கள் , ஏதோ பிரணவ மந்திரத்தை வகுப்பறையில் பாடம் எடுப்பதை போன்று இருக்கிறது அந்த சப்தம் என்று சொன்னார் ,  ம்ம்ம்ம்   மனிதருக்கு  பல  விஷயங்களை  கேட்க   குடுத்து  வைத்து  இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மேலே இன்னும் மீதம் உள்ள ஆயிரம் படிகளை ஏற ஆரம்பித்தோம்.

விநாயகர் கோவிலை அடுத்து ஏறும் நெட்டான படிகள்  

செல்லும் வழியில்
மேலே சென்றவுடன் வரும் நுழைவாயில்

நுழைவாயிலை  அடைந்தவுடன் இருக்கும் பிள்ளையார்

உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் பரமேஸ்வரி தாய்


கோவிலின் வெளி பிரகாரம்

இடும்பர் ஆலயம்

ஆலய மணி

ஆதி சித்தரின் வாகனம் , மயில்

ஓதியப்பர்

ஐந்து முகம் எட்டு கரங்களுடன் அருள் பாலிக்கும் ஓதியப்பர்

சின்ன பழனி என்று உணர்த்திய முகங்கள்

அய்யன் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மகரிஷி அமர்ந்து தவம் செய்த பாறை

பெயர் தான் பாறை ஆனால் பாறைக்கான எந்த அறிகுறியும் இல்லை , பூவை போன்று மென்மையான  ஒன்று

வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஷக்தி வாய்ந்த இடம்

ஐயனின் ஆசனத்தில் இருந்து கோயில் கோபுரம்

ஐயனின் ஆசனத்தில் இருந்து எதிரில்

அன்று நடந்த இன்னும் சில நிகழ்சிகளுடன் அடுத்த இடுகயியல் சந்திப்போம் .

-------------------------------------------------------------------
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து

ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து
------------------------------------------------------------------

3 comments:

 1. அன்புள்ள போகர் ஐயா,

  தங்களின் அனுபவம் உண்மையாக தான் இருக்ககூடும்.

  ஏனெனில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எனக்கு அந்த ஓதியாண்டவர்
  அவரின் மலையில் தான் கூறி எனக்கு தீட்சை கொடுத்தார்.

  அதுவும் மகா சித்தர் போகர் அமர்ந்த அந்த பாறையில் தான் எனக்கு பல வித
  அனுபவங்கள் கிடைத்தது.

  அதனைப்பற்றி நான் கூடிய் விரைவில் ஒரு கட்டுரை எழுதவுள்ளேன்.
  அந்த பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும்.

  http://gurumuni.blogspot.com/
  என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

  ReplyDelete
 2. HELLO..I AM DOING POOJA TO SHRI OTHIYAPPAR. I CAN FEEL MYSELF, A THING WHICH HAPPEN IN OTHIMALAI IS SURPRISE EACH AND EVERYDAY. YOU SAID ABOVE IS ONE OF I FELT AND KEEP ON PRAY OUR GURU OTHIYAPPAR... GOODLUCK.. YOURS KARTHI.S (SWAMINATHAN.S)

  ReplyDelete
 3. ஓம் குரு போகர் சரணாய நமஸ்து

  ReplyDelete