Monday, February 28, 2011

போகருக்கு அர்ப்பணம்:


ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி




நண்பர் ஒருவரின் அற்புதமான குரு எம்பெருமான் போகரைப்பற்றிய படைப்பு .

போகருக்கு அர்ப்பணம்:

குரு வணக்கம் :
சிகாரத்தில் நிற்கும் சிவபாதம் போற்றி
வகாரத்தில் நிற்கும் சத்திபாதம் போற்றி
யகாரத்தில் எமையாளும் ஏகபாதம் போற்றி
இம்மூன்றையும் ஐந்தாகி யனையாட்கொள்வாய் போற்றி

யாப்பு:

சீனத்துப் பொக்கிஷம் தென்னகம் வந்தது
சித்தனாய் பித்தனாய் அத்தனாய் நின்றது
சித்தனாய் நின்றப்பின் சத்தியைக் கண்டது
சத்தியைக் கண்டு பரசிவனுமாய் ஆனது

போற்றும் நற்பொக்கிஷம் போயாங் என்றநாமமே
போற்றிப்போற்றி போகரென்று பெயரும் மருவியதே
போற்றி ஏற்றுவீரில் கடாக்ஷமும் கிட்டுமே
போகரென்ற நாமமே பிறப்பறுத்துப் போடுமே

உலகம் ஊய்க்க ஏழினைப் படைத்தான்
உரக்க ஓதி உழ்வினை யறுத்தான்
உழ்வினை யறுத்தப்பின் உலகமாய் நின்றான்
உலகமும் போகரென்று உரக்க ஓதியதே

அண்ணலின் நூல்களோ லக்கமென்று சுவடிச்சாற்றுமே
அண்ணலின் வரிகளோ கோடியென்று முரசுகொட்டுமே
அண்ணலின் நூலினைக் கற்றுணர்ந்த மாந்தரே
அண்ணலாம் போகரின் அருட்பெற்றச் சீடரே

போகர் என்ற நாமமே போகத்தையருக்குமே
போகர் என்ற நாமமே ஞானத்தைப்புகட்டுமே
போகரின் பெருமையை யவர் சொல்லஇயலுமோ
போகரே முதன்மை என்று கும்பர்சொல்லக்கேளுமே
============================================================
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
=====================================================

No comments:

Post a Comment