Tuesday, October 12, 2010

சுப்ரமணியம் என்பது என்ன ?



சுப்ரமணியம் என்பது என்ன ?









-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------



சுப்பிரமணியம் என்பது என்ன ? 


நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள   ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் 


.இதன்றி , நமது மூலாதாரத்திற்கு  மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .

ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு  என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.

தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய 
குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .

மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன்  அசுத்தகேவலமாகிய  அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .

சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய  கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம் .

5 comments:

  1. அருமையான விளக்கம் அய்யா ., கோடான கோடி நன்றிகள் !!

    " சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய் ""!!

    முருகா முருகா முருகா

    இப்படிக்கு
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  2. அய்யா ,
    நேற்று அதிகாலை ஒரு கனவு, நான் ஒரு பெரிய கோவிலில் இருப்பது போலவும் இரண்டு நபர்கள் என்னுடன் இருந்தார்கள் , ஒருவர் கருவறையில் இருந்து வந்து என்னிடம் ஒரு மணியை கொடுதுதார்., நானும் மணியை அடிக்க ., பிறகு திடிரன்று " ஒரு வலைப்பூவில் பெரிய ஆறு தலை நாகம் படத்தையும் அததற்கு சில விளகங்களையும் கண்டேன் " .

    ஒவ்வொரு வலைப்பூவையும் ., பார்த்து இறுதியில் தங்களின் இந்த சுப்ரமணிய விளக்கம் தான் .,, அந்த கனவின் வெளிப்பாடு என்று புரிந்துகொண்டேன் ., (என்ன ஆறு தல நாகம் படம் தான் missing ... )

    ReplyDelete
  3. naagam - vaasi ,guezz u reaching right state , keep on pray GOD & Bhogar and all siddhas , they will show.

    u have already entered in karuvarai. so no issues will be there upto now in u r path.

    ReplyDelete
  4. நன்றி அய்யா .,
    போகரின் சிஷ்யராகிய உங்கள்டமிருந்து வந்த வார்த்தைகள் படிக்கும்பொழுது இந்த புலிப்பாணியின் சிஷ்யனுக்கு மெய் சிலிர்கிறது.

    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை

    ReplyDelete
  5. திருசீரலைவாய் பெயர் காரணம் எனக்கு புரியவில்லை. புரியும் படி விளக்குங்கள் ஐய்ய. 🙏🏽🙏🏽

    ReplyDelete