Tuesday, October 12, 2010

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம்

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம் 


--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------




சுப்பிரமணியம் ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறு முகம் ஆனதற்கான காரணம் , ஒன்றும் இரண்டும் இல்லாத ஒப்பற்ற பரப்ப்ரம்ம சொரூபம் நம் பொருட்டுக் குழு உக்குறியாய் , பாவனைக்கு ஒன்றென்று நிச்சைக்கும் , பரகாரண நிமித்தம் ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள் .



சுத்தராஜசம் , சுத்ததாமசம் , சுத்த சாத்வீகமாகிய , மூன்று குணங்களின் விளக்கமே மூன்று முகம் .


பசு மனம் , சுத்த மனம் , உள் மனம் , சங்கலித மனம் , என்னும் நான்கு தத்துவங்களின் கூட்ட விளக்கமே நான்கு முகம் .



சுத்த அறிவின் மூலம் ஒளி அறிவின் மூலம் , சுவை அறிவின் மூலம் , பரிச அறிவின் மூலம் , வாசனை அறிவின் மூலம் , ஆத்மா அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம் .  



--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

2 comments:

  1. Dear Ayya,

    The explanations given by you are really splendid. But very few would understand this. Hence I request you to come to pamara makkal level of explanation so that it will be further more easier to digest your ideas

    ReplyDelete
  2. Muruga , kandipa will do it muruga ,

    enna siddharey nalamaa.

    ReplyDelete