மனமிருந்தால் மார்க்கமுண்டு
மனமிருந்தால் மார்க்கமுண்டு , என்று எல்லோரும் சொல்வார்கள் , பொதுவான அர்த்தம் என்ன சொல்வார்கள் என்றால் , ஒரு விஷயத்தை அடைய திடமாக எண்ணினால் , அதை அடைவதற்கான வழி தானாக கிடைக்கும் .
ஆனால் இதையே நாம் வேறு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம் , ஏன் அதுவே கூட உண்மையும் ஆக இருக்கலாம் , அது
மனம் இருந்தால் மட்டுமே மார்கங்கள் தேவைப்படும் , மனம் இல்லை என்றால் எவ்விதமான மார்க்கமும் இருக்காது . தனியாக ஒரு மார்க்கத்தை பின் பற்ற தேவை இல்லை , மனம் எங்கு அடங்குகிறதோ அங்கே தான் இறையை காண , உணர முடியும் .மனம் என்னும் மாய குரங்கை அடக்க இருக்கும் வழிகள் தான் வேறே தவிர , மனம் அடங்கிய பிறகு , மனம் அடக்கியவர்களுக்கு எவ்விதமான தனி ஒரு மார்க்கமும்
தேவை படாது .
இங்கு மார்க்கம் என்று குறிப்பிடுவது , மத , இன , சமய , தனி முறை வழிபாடுகள். இவை எதுவும் மனம் என்று ஒன்று இல்லாத ஞானிக்கு தேவையே படாது .
ஆதாலால் மனம் என்ற குரங்கை , குதிரை என்னும் வாசி முறையை பயன்படுத்தியோ , அல்லது அன்பு என்னும் ஞான முறையின் மூலமோ ( அன்பு என்று நாம் நினைத்துக்கொண்டு இருப்பது வேறு , பரத்திடம் இருக்கும் அன்பு என்பது வேறு ) அடக்கி அல்லது இல்லாமல் செய்து இறையுடன் இறையாய் இருப்போம் அன்பர்களே .
No comments:
Post a Comment