Tuesday, December 14, 2010

சித்தர்களின் சமாதி மற்றும் இருப்பிடம் விபரம் - போகர் சித்தர்

சித்தர்களின் சமாதி மற்றும் இருப்பிடம் விபரம் - போகர் சித்தர் 






-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


ஆதி என்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடனே பதினேன்பேர் அதிலே ஆச்சு 
சோதி என்ற காலாங்கி நாதர் தானும் 
துலங்குகின்ற காஞ்சிபுரம் தனிலேயாகும் 
நீதியென்ற  நீதிஎல்லாம் வழுவராமல் 
நீநிலத்திற் பதங்கணிச் சயமாய் செய்வார் 
வேதி என்ற கும்ப முனி கும்பகோணம் 
விளங்கிநின்றா எந்நாளும் அந்த ஊரே 


ஊரான மயிற்றேச மச்சமுனியே ஆகும் 
முற்றதொரு சீர்காழி சட்டை முனியே ஆகும் 
பேரான வழுகண்ணிச் சித்தர்தானும் 
பெரிதான நாகப்பட்டணமே ஆச்சு 
வேரான விடைமருதூர் இடைக்காடராகும் 
விளங்கிநின்ற மதுரை சுந்தரருமாச்சு 
சீரான கமலமுனி அதுவே ஆச்சு 
சிறந்த துவாரகயிற் பாம்பாட்டியுமாமே 


ஆமென்ற புண்ணாக்கு ஈசர்தாமும் 
அழகான நாங்கனாசேரியில் ஆச்சு 
வாமென்ற கொங்கணர் தானிருந்தமூலம் 
வளர்ந்த திருக்கனங்குடியல் ஆகும் 
நாமென்ற நாதனாரிருந்த மூலம் 
நலமான விடைமருதூர் நாட்டமாச்சு 
ஓமென்ற வைத்தீசுரன் தனில் வசிட்ட 
உன்னதமா யுகந்துநின்ற மூலந்தானே 


கானென்ற  வால்மீகர் திருவைதனிலிருந்தார்
கருவூரர் காள அத்திரயுமாச்சு 
தேனென்ற காசியிலே விஸ்வாமித்ரர் 
திருவையார் தனில் அகப்பை சித்தராகும் 
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் 
வளமான திருக்காஞ்சிப் பதியில் ஆச்சு 
வேனென்ற புலத்தியர் தான் இருந்த மூலம் 
விதமான வாவுடையார் கோவிலாச்சு


ஆச்சென்ற கோரக்கர் கழுக்குன்ற மூல 
மதிசருத் திராச்த்தலத்திர் காசிபருமாச்சு 
நீச்சென்ற வருணகிரி தன்னிர்கேளு 
நிஜமான கெளதமரும் அதில் இருந்தார் 
காச்சென்ற கருவைநல்லூர் மார்க்கண்டர்தான் 
கருவான திரிகூடல் மூலராச்சே 
வாச்சென்ற பாவ விநாசந்தன்னில்
வளமான புலத்தியர் தம் மூலமாமே 


ஆமென்ற சுந்தர காலாங்கி நாதர் 
அதில் இருந்தார் திருக்கடவூர் அவர்தானாகும் 
போமென்ற திருப்பவனம் அவர் தான் ஆச்சு 
புகழ்ந்த திருக்கோவலூர் அவருமாச்சு 
நாமென்ற ஆடுதுறை விஸ்வாமித்ரர் 
நல்லதிரு வாலமுமே பாம்பாட்டி சித்தர் 
வாமென்ற திருப்பனந்தாள் வரரிஷியுமாகும் 
வளர் திரு பெருங்காவூர் தான் கன்னி சித்தர்தானே 


தானென்ற வானைக்காவ லதிலேகேளு 
சமஸ்த்தான மச்சமுனி  சமாதியாகும் 
தேனென்ற தென்மலையில் வரதனாகும் 
சேரைஎனும் சேத்தூர் மார்க்கண்டராச்சு 
வானென்ற  மலையில் நாடு நெடுன்குன்றூரில் 
மகத்தான திருமூலர் வாசமாச்சு 
நானென்ற மேலசிதம்பரத்தில் 
நாடி நின்ற திருமூலர் நாட்டம் தானே 


நாட்டமுடன் திருக்கோணம் தன்னிலே தான் 
நாட்டியதோர் கோரக்கர் அதன் மூலமாச்சு 
தேட்டமுடன் கொங்கணா தனிக்கோடி துறையதாகும் 
சிறந்த திருவாஞ்சியிர் கமலமுநியாகும் 
ஆட்டமுடன் பதினெட்டு சித்தரெல்லாம் 
அஷ்டாங்க யோகத்தால் எட்டு எட்டாகி 
கூட்டமுடன் ஒவ்வொருவர் சித்துக்காட்டி 
குவலயத்தில் லிங்கமதாய் முளைத்தார் பாரே .


பாரப்பா இப்படியே சித்தரெல்லாம் 
பலவிதமாய் அகண்ட பூமியெல்லாம் 
ஆரப்பா அங்குமிங்கும் நிறைந்து நின்றார் 
அவரவர்கள் பிள்ளைகளும் அப்படியே நின்றார் 
சீரப்பா சித்தருட மூலம் காண 
செகத்திலே எவர் அறியப் போறார் ஐயா 
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம் 
நிலைக்காட்ட சித்தர்களும் மறைத்திட்டாரே 
மறைத்திட்டார் நதிமூலம் ரிஷிமூலமெல்லாம்
வகை விபரமாகவும் கான் சொல்லி வைத்தேன் 
நிறைத்திட்டேன் யானிருக்கும் மூலம்சொல்வேன் 
நிலையாரும் வரையாதுந்த் தலங்களாகி
அறைந்திட்டா ஆவினன்குடியும் பரங்குன்றமப்பா 
அழகான திருத்தணிகை கழுக்குன்றோடு 
பரைத்திட்ட வேரகமும் செந்தூரமாகும்
பரிவான தலம் ஆறும் நாமதாமே .


ஆமென்ற தளங்கள் வழி இன்னம்சொல்வேன் 
அப்பனே கதிர்காமம் சுப்பிரமணியம் 
ஓமென்ற மரவருட கோவிலொன்று 
உருவான வேள்மலை வெள்ளியுராம் 
நாமென்ற சாமிமலை வேலூராகும்
நலமான சோலை மலை தென்னிலஞ்சியாகும் 
வாமென்ற காஞ்சிபுரம் முதலாய் உள்ள 
மலைதோறும் இருந்து விளையாடினேனே.




முடிந்த அளவுக்கு நாம் பெயர் அறிந்த சித்தர்களின் இருப்பிடமும் , சமாதிகளும் உள்ள இடங்கள் , மற்றும் எப்படி ஒரே சித்தர் பல இடங்களில் சமாதியாகி உள்ளார்கள் என்றும் , லிங்கங்களின் தோன்றல்கள் பற்றியும் மிக தெளிவாக அய்யன் எம்பெருமான் போக மகரிஷி மக்கள் அறிய உறைத்து உள்ளார் , மேலும் அவர் இருந்த இடங்களையும் கூறியுள்ளார் .


அறிந்து பயன் பெறவும் .


-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


5 comments:

  1. குறிப்பாக சித்தர்களின் ஜீவ சமாதி இருக்குமிடத்தையும் அந்த இடங்களின் முகவரியையும் தரமுடியுமா?
    அதாவது பதஞ்சலியின் ஜீவ சமாதி இராமேஸ்வரம் ஆலயத்தில் நுழையும்போது வலது புறமாக அமைந்து இருக்கும்.
    பாம்பாட்டி சித்ததின் ஜீவ சமாதி சங்கரன் குயில் ஆலயத்தில் இருந்து ௨ கிமி துரத்தில் அமைந்திருக்கும்.
    இதுபூல மற்ற சித்தர்களின் முகவரியை தர முடியுமா?

    ReplyDelete
  2. for sure can give you that particular details , time will come to publish that.

    ReplyDelete
  3. When it comes please let me know, I am on search!!

    ashokkingkumar@gmail.com

    ReplyDelete
  4. Dear Ashok ,

    Will start update today onwards , pls check after 7pm

    ReplyDelete
  5. ஓம் போக பெருமானே போற்றி
    ஓம் போக மகரிஷியே போற்றி
    ஓம் போக முதல் சித்தரே போற்றி
    ஓம் போக ஞான குருவே போற்றி

    ReplyDelete