போக பெருமான் போகரை பற்றி அல்லது போகர் சொன்ன பேருண்மை
--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
தான் என்ற வாதியிலே நந்தி ஆனேன்
தவம் செய்து சித்தன் அயன் மாலும் ஆனேன்
வேனென்ற சுப்ரமணிய ரூபமானேன்
விண்ணவர் சேனாபதி இந்தரனுமானேன்
நான் என்ற கிருஷ்ணா வடிவாகிநின்றே
நபி ரூபமாய் உலகம் எங்குமானேன்
வானென்ற பராபரமாய் நின்று கொண்டேன்
மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே.
வாழ்ந்திட்டேன் எந்தனுட சித்தைக்கண்டு
வல்ல சித்தர் யாவரும் மலைத்தெழுந்து
தாழ்ந்திட்டார் அருள் வேண்டும் என்று கேட்டார்
தவம் செய்தால் அருள்வேன் என்று அருளிச்செய்தேன்
சூழ்ந்திட்டார் யானிருக்கும் பதியிலப்பா
சொல்லரிய தவம் செய்து இருக்கும் இருக்கும் நாளில்
வீழ்ந்திட்டு போரார்கள் மனிதறொன்று
விதி விலகி இருப்பதற்கு செப்பினேனே.
செப்புகிறேன் சித்தரெல்லாம் மறைத்தே வைத்தார்
செகந்தனிலே சொன்னதெல்லாம் கபடம் மெத்த
அப்புகிறேன் படமென்ற வினயைத்தள்ளி
அதி சுருக்காய் ஆச்சரியம் அடையசொல்வேன்
தப்புகிறேன் என்றாலும் தவறோட்டாது
தன்னிலே தூக்குமடா எந்தன் மூலம்
ஒப்புகிறேன் என்றனுட மூலம் காண
உயர்ந்ததொரு காயசித்தி செய்குவாயே.
அய்யன் எம்பெருமான் குரு போக சித்தரால் மிக பெரிய உண்மைகள் மிக சாதாரணமாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுளது .
புரிந்து படித்து உணர்ந்து கொள்ளவும் .
உதவிக்காக சீர் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது .
சர்வம் போக மயம் , சர்வம் சிவம் , போகம் தன்னை சிவமாக உணர்ந்து , சிவமாகவே
ஆனதால் சர்வம் போக மயம்
-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment