நூன்முகம் ஞானம் கூறல்
------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
---------------------------------------------------------------------------------------------------------------------
உரைகிறேனாதி சித்தனொரு வனப்பா
வொருவனுமே வல்லவடா பரமம்ப்ரம்மம்
கரைக்கிறே நதிளிருந்து கலைசிருதுக்
காலாகிப் பிரிந்துதிதி பிண்டமாகி
நிறைக்கின்ற வாணுமது பெண்ணுமாகி
நிறைவாக பதினாறு கலையும் பூண்டு
திறைக்கிரே னவலோருத்தி யல்லாலில்லை
தேவியுட சிருஷ்டிப்பைச் செப்பக்கேளு
கேளப்பா வவளுடைய தியானத்தாலே
கெடியாகத்தான் பிரிந்த மூலம்பார்த்து
ஆளப்பா வந்தவொரு மூலத்தாலே
வழகாக சிருஷ்டித்தா லோருவனைத்தான்
வாலப்பா வொருவனுந்தான் வஞ்சகத்தால்
வந்தவழி செல்லுமென்றான் வாலையைத்தான்
பாரப்பா வொருவனுமே யில்லைஇல்லை
பரப்பரம்ம மூலத்தார் பிறந்தேன் பாரே
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி
------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment