போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - 1
பின் வரும் பாடலில் அய்யன் போகாப்பெருமான் சதுரகிரி மலை வளம் பற்றியும், திரிகூடம் , பொதிகை , சிவகிரி , மேலும் பல மலைகள் , அங்கு எந்த எந்த சித்தர்கள் (அகத்தியர் , பாட்டனார் திருமூலர் , ஐயா காலங்கி நாதர், கோரக்கர் மகரிஷி மேலும் பல .... ) , எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்றும் , எந்த எந்த மூலிகை எந்த இடத்தில் இருக்கிறது என்றும் , மேலும் இக்காலத்தில் பல மர்ம ஆசாமிகள் , பற்ப்பல பேறாசையுடன் தேடிக்கொண்டு இருக்கும் தைலக்கிணறு எங்கு எப்படி இருக்கிறது என்றும் , அதற்கு காவல் யார் என்றும் , தெளிவாக எடுத்து உரைத்து உள்ளார் .
உண்மையான ஞானம் வேண்டி இப்பாடலின் வழி சதுரகிரி மற்றும் பிற மலைகளுக்கு சென்றால் கண்டிப்பாக அய்யன் எம்பெருமான் போக மஹா முனி முதல் சித்தர் ஞானம் வழங்கி அருள் புறிவார்.
மேலும் சிறப்பு அவரின் இருப்பிடம் சதுரகிரியல் எது என்று தெளிவாக உரைத்து உள்ளார் . நான் கேள்விப்பட்டது வரை , தற்சமயம் போகர் குகை என்று சதுரகிரியல் நிறைய நபர்கள் செல்கின்றார்கள் , ஆனால் அது இல்லை என்பது விழயம் தெரிந்த நபர்களுக்கு இந்த பாடலை படித்த பின்பு புரியும் . இனி பாடலுக்கு செல்வோம் .
------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
---------------------------------------------------------------------------------------------------------------------
அறைகின்றே நேன்பதொரு தோனிப்பாரை
யதன்வழியே யாற்றினுல்லே சென்றாயானால்
நிறைக்கிறேன் கோரக்கர் குண்டாவுண்டு
நிச்சயமா யதனருகே கைதானொன்று
மறைகிறே நின்றதொரு மறைபுப்போட்டு
மைந்தருடன் கோரக்க ரதிலேவாழ்வார்
உரைகின்றே னென்றுசொல்லி உயரசென்றா
ளுத்தமனே பெருந்துரட்டி இளைக்காடாமே .
ஆமென்ற காடகத்தின் நடுவேசென்றா
லங்கைமே சாதிக்காய் தோப்புண்டப்பா
சேமென்ற செம்பாறை நடுவேயுண்டாஞ்
சேரவே சுனைஉண்டு பச்சைவர்ணம்
நாமென்ற குகையொன்று தெற்கேபார்த்து
நாதக்க ளோடுசட்ட முனிஉமுண்டு
ஓமென்ற கோயிலுக்கு வடக்குமாகும்
உற்றதோறு தோப்பிலந் தோப்புக்கானே.
காணப்ப குளுராத தோப்பினுள்ளே
கருநீலச் சுனையொன்று நெல்லியுண்டு
பூணப்பா குகையுண்டு பெண்களுண்டு
புகழாக நாமுமங்கே இருப்போம்பாரு
தோணப்ப சஞ்சீவி மூலிஎல்லாந்
துலையாம லதிருக்குந் தோணாதப்பா
நீணப்பா லிங்கத்து மேற்கேகேளு
நிலையான குகையுண்டு கிழக்கிற்றானே.
தானென்ற சுனையதிலே குகைதானொன்று
தாசித்த கஞ்சாவு மிகுதியுண்டு
தேனென்ற சுந்தரா நந்தருண்டு
திறமான மைந்தர்களு மவேற்கேயுண்டு
கானென்ற பலாவடிர் கருப்பனுண்டு
கண்ணெதிரே யொருபோது சென்றாயானால்
மானென்ற பாறையொன்று குருகேயுண்டு
மகத்தான பாதைஇல் சுனைமூன்றாமே
ஆமடா குகையொன்று உள்ளேய்போகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கர்ற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்ப்பமீந்தார்
உயர்ந்ததொரு தைலமெல்லா மங்கேஈந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
நல்லதொரு தைலமெல்லா மூடினேனே
மூடினேன் கருப்பனயுங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்கேல்லாம்
தேடினே நேன்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து இருக்குமிடஞ் செப்புமென்றேன்
ஆடினே னட்டமா சித்தெல்லா
மவரவரு மங்கிருந்துச் சித்திபெற்றார்
கூடினே நாயெரம்பேர் தங்களோடே
குடிஇருந்த நர்சதுர கிரயுமாச்சே.
ஆச்சுதடா சஞ்சீவி மலயுமாகு
மதில்வீசுங் காற்றுவிறு காதமட்டும்
வாச்சுதடா விதன்தெர்கே சார்வோன்றுண்டு
வல்லசித்த ரதிலுருப்ப ரைந்துபேர்தான்
சாச்சுதடா சிவகிரிக்கு வடமேற்காகச்
சாடான மலையொன்று வுயரவோமெத்த
நீச்சுதடா காடொன்று நிலையாக்காடு
நிசமான தெப்பமொன்று குகயுமொன்றே
ஓன்றான குகைக்குள்ளே சித்தர்நூறு
வுறவாக வதிலிருப்பா ருகந்துபாரு
கன்றான சவரிமலை தன்னிர்கேளு
கறப்பான சித்தர்கள் ஆயிரம் பேருண்டு
நன்றான பாறையொன்று மூலிஉண்டு
நலமான குகை ஒன்று கீழேபோகும்
அன்றான சுனயுமுண்டு நதியும்உண்டு
வதன்கிழக்கே மலையொன்று மறிந்துபாரே
பாரப்பா வம்மளைமேர் பதினைந்துபேர்கள்
பரிவான விலக்குமியைப் பூசித்தோர்கள்
வேறப்பா வவர்களுக்கோ சித்துமெத்த
விரைவாக வதிலிருந்து தெற்கேகேளு
ஆர்பா திரிகூட மலைதானொன்று
வாச்சரியங் திருமூல ரதிலேவாசம்
பேரப்பா பிள்ளைகளு மனேகமுண்டு
பிசகாதே வதின்தேற்கார் ற்றோரங்கலே.
கேளப்பா வுயர்ந்ததோறு மலைதானுண்டு
கெடியான கும்பமது போலேகாணும்
வாளப்பா வம்மலைக்கு மப்பார்கேளு
வல்லவதின் வடபுரமாய்க் கடிகைசென்றால்
நீளப்பா பாறையொன்று பூங்காவொன்று
நிசமாக வதனருகே தெப்பமுண்டு
கேளப்பா சொல்லவில்லை மங்கைதானுங்
குளித்தமஞ்சள் வாசமது வீசுந்தானே.
தானென்ற சுனையொன்றில் மஞ்சநீராத்
தானுரைந்து நிற்குமடா பாருபாரு
மானென்ற கங்கைதனைக் கண்டாயானால்
மருத்தொன்று நினையாமற் பாதம்வீழ்வாய்
ஏனென்று மென்னவித மென்றுங்கேட்ப்பார்
வெளியனுக்கு வகஸ்தியரருள் வேண்டுமென்பாய்
கோனென்ற சித்தர்குகை காட்டுவிப்பார்
குடியாக வாயிரம்பேர் தோணும்பாரே
பாரப்பா வவர்களைநீ கண்டாயானார்
பரிவுடனே பாதமதைப் பணிந்துநிர்ப்பாய்
ஆரப்பா வென்றுசொல்லி உன்னைக்கேட்பா
ரகஸ்தியரை காணவந்தே நென்றுகூறு
சாரப்பா வவர்நூலின் சார்பைஎன்பார்
சார்ந்திருதே நென்நூலை யொன்றுசொல்லி
காரப்பா கனகமென்ற பொருளைக்காட்டிக்
காசினிர் போயெரென்று செப்புவாரே
செப்பவா ரதைவேண்டே நெனமருதுச்
செயமான வகச்தியரைக் காணக்கேளு
ஓப்பியே கற்பமெல்லா முனக்குவீந்து
வுன்னுடைய தேகமதைச் சித்திசெய்து
அப்புவார் மௌனமதை தீட்சைசெய்து
அகஸ்தியற்கண் முன்பாகச் சேர்பாரப்பா
நப்புவார் சந்தோஷ மாகப்பூசி
நலமான சித்திகளு மருளுவாரே
அருளுவார் கவனமுதற் கபயமியாவு
மாச்சரிய மஷ்டசித்து முடநேயீவார்
பொருளதுவாய் முடிந்ததேல்லாங் கேட்டுக்கொள்ளு
போட்டிருக்கு மிடங்கேட்டு வந்துசேரு
தெருளுவார் சித்தறேல்லாங் கூடிவந்து
தேவியுட பூசைசெய்து மௌனங்கேட்ப்பார்
சருளுவா ருன்னையவர் சருவிவந்தார்
சாஷ்டாங்கம் பண்ணியே வந்துசேரே
இரண்டு அல்லது மூன்று பாகமாக இடுகை இட உள்ளேன் , மன்னிக்கவும் ஒரே இடுகையல் கொடுக்க முடியாமைக்கு.
நன்றி .
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி
மிகவும் பயனுள்ளது. ஜனன சாகரத்தின் 550 பாடல்களும் கிடைக்க என்ன செய்ய வேண்டும், தயவு செய்து பகிரவும்
ReplyDelete