Wednesday, July 28, 2010

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - 2

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - ௨


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி


ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேருமென் மூலியது வதிகமுண்டு
ஜெயமான காத்தடிக்க சனனம்போகுஞ்
காருமென்ற கமண்டலத்தின் ஜலமும்போகுங்
கரையோரம் நின்றதொரு மூலிமெத்த
பேருமென்ற தாம்பிரவர்ணிக் கரையோரமெல்லாம்
பெரியோர்கள் கூட்டமடா பேசொணாது
ஏறுமென்ற தாம்பிரவர்ணி எழுகாதஞ்ச்செல்லும்
யோன்சொல்வே நெக்கியங்க லதிகம்பாரே

பாரென்ற தண்ணீரிர் ராம்பிரமுண்டாம்
பரிவான வயசெம்பு போலேகாணும்
வேரென்ற பொதிகையா மத்தியமாகும்
விளைந்ததொரு செப்பதுதா நுலாவிநிர்க்கும்
வாரென்ற வடக்குதிரி கூடமாகும்
வல்லதொரு மேற்க்குமிரு காதமாகும்
தேரேன்ற தென்முகந்தான் கடிகைபத்து
திறமான கிழக்கேழு காதமுன்டே

உண்டான பொதிகைக்கு வடக்கேயப்பா
வுயர்ந்ததொரு மூலவர்க்கச் சித்தர்கூட்டம்
நன்றடா நாகமலைப் பொதிகைமட்டும்
நாலுசகஸ் திரம்பேர்கள் வடவாற்கூட்டம்
அன்றடா வந்சுதலைப் பொதிகைதன்னி
லாயிரம்பே ரவர்பிள்ளை யதிலேயுண்டு
விண்டடா வீசானம் வென்சதுரகிரியல்
விளங்குசித்த ரொருநூறு பேராம்பாரே

பாரப்பா விந்திரனார் திக்குதன்னில்
பகரரிய பச்சையா ரோன்றுன்டப்பா
நேரப்பா வுண்ணாகுக்குச் சித்தருண்டு
நிறைவாகத் தைலத்தார் கிணறோன்றுண்டு
சீரப்பா சாத்தாவின் கோயிலுக்கு மேற்கே
சிறந்ததொரு மலைமேலே மலைதானொன்று
கூறப்பா சுனைமூன்று வெதிரேயுண்டு
குகையொன்று தென்முகமா இருக்கும்கானே

காணப்ப வெண்ணா வலைந்தாருண்டு
கருவான சுனையருகே மூலியுண்டு
சோணப்பா சுனைதனின் மண்டலமேமூழ்க
தோன்றுமடா வப்பவல்லோ மூலிதானும்
வீணப்பா சொல்லவில்லை மூலிதன்னில்
விதமான மூலிதன்னைச் சுனைநீராட்டி
பேணப்பா பழக்காஎ னளவுகொண்டார்
பேச்சுமில்லை மூச்சுமில்லை யடங்குன்தானே

தானென்ற தேகமெல்லாம் விரிந்துபோகுன்
தாப்பாம லூநேல்லாம் மடிந்துபோகும்
வானென்ற பயறுடனே சிருபயருன்காச்சி
வல்லதொரு பஞ்சிஇனால் வாயில்ஊட்ட
நானென்ற தேகமது பச்சையாகும்
நல்லதொரு வடுத்தசுனை ஸ்நானம்பண்ணு
கானென்ற கமண்டளநீர் நதிதானப்பா
காயசித்தி இதனாலே கண்டுக்கொள்ளே

கண்டுபார் ரத்தகர் ராழயுண்டு
கருநீலக் கொடிவேலி யதனருகேயுண்டு
உண்டுபார் குகையதிலே தெற்கேசென்றால்
உயர்ந்ததொரு நம்பிமலை யுண்டுபாரு
சென்றுபார் மலைமேலே நம்பிகோவில்
ஜெயமான கோவிலிக்கு மேற்கேசென்றால்
அன்றுபார் காதமதர் கப்பாலாக
வாச்சரியம் பாறைஎன்று வட்டமாமே

ஆமென்ற பாறைலே குழிதானுண்டு
வதுதனிலே கெந்தகத்தின் தைலமுண்டு
வேனென்ற தைலமதைச் செம்பிற்ரேய்க்க
விளைந்ததடா தங்கமது வயசுபத்தாய்
வாமென்ற தைலத்துக்கு வடுகன்காவல்
வல்லதொரு விருக்ஷமது வதிலேயுண்டு
தாமென்ற குகைஉண்டு சித்தருண்டு
தப்பாமல் லொருநூற்றுப் பத்துபேரே

பேராக வதிளிருவர் பெரியோரப்பா
பிசகாதே நாற்ப்பதுதான் முழமேயாகும்
ஆரான வகஸ்தியற்கு முன்னேயுண்டு
வாஇஎரத்தெந் காதமொரு மூச்சிற்செல்ல
வீரான குளிகையொன்று விருக்குமப்பா
விதமான கமண்டலமுங் கன்னியோடு
வாரான விபிஈஷனந்தான் வைத்ததாகும்
வகையாக நிதானித்தால் தோணும்பாரே

தோணப்பா தங்கக்கொடி தானுண்டு
துலங்கவே யதன்கீழ்மா வலியும்நூறாம்
காணப்பா வின்னமோ ராச்சரியமுண்டு
களங்கமற்ற மைந்தானோ தரியவாங்கு
ஆணப்பா மண்டூக வேந்தாவென்று
வதிலிருப்பான் கொங்கணவன் பிள்ளைகேளு
நீணப்பா வருநூற்றி யைம்பதேழ்பேர்
நிலையாக வதிலிருப்பார் நயந்துகேளே

கேளப்பா மஎந்திரத் தினப்பாலாகக்
கெடியான நதியொன்று மூலிகயுமொன்று
வாளப்பா வங்கிருந்து மேலேசென்றால்
வழியான சோதிப்புல் சோதிவிருக்ஷம்
ஆளப்பா வதன்வழியே சென்றாயான
லாச்சரிய மங்குமொரு குகைதானுண்டு
நீளப்பா கிழக்குமுக மாகக்கானும்
நிலையான கருநெல்லி நிற்குந்தானே

தானென்ற குகைஎர் கொங்கணவர் தாமுங்
தப்பாம லிருப்பர்கமன் டலமுங்க்கொண்டு
வேனென்ற நிருமன்னா மலைதானொன்று
விளங்கியதோர் குகையொன்று மேற்கேபாரு
வானென்ற சங்கிலிச் சித்தரெல்லாம்
வாழ்ந்திருக்குங் குகையதுதான் பிளந்துபாரு
ஊனென்ற பேர்கலுந்தா நேரப்போகா
ஊனமிலாக் கதனிகளு வேயலாமே

ஆமென்ற விக்குகைஇ நடுவேயப்பா
வாச்சரியச் சுனையொன்று வதிகம்பாரு
வேமென்ற சுனையருகே வெண்சாரையுண்டு
வேகுசுருக்குத் தாடகைமா மலையைகேளு
நாமென்ற சுனையொன்று கற்றோட்டியென்று
நல்லசுனைக் கரையோர மால்போனிற்கும்
வாமென்ற தொட்டிஎலே சைத்தந்தன்னில்
மகத்தானவக் கினிநக்ஷத் திரத்திர்பாரே

பாரப்பா தைலமது சிவந்துகாணும்
பதனமாய்ச் சீசாவி லடைத்துக்கொண்டு
காரப்பா காசிடைதா நுல்லேகொண்டால்
கதிரவனா ருள்ளவரை இருக்கும்பாரு
சாரப்பா தேகமது சட்டைதல்லுங்
சஞ்சார வெண்சாரை யங்கேகாணும்
வீரப்பா வதர்கடுக்கக் குகைதானொன்று
விதமான சித்தர்கள் நானூறுபேரே

பேரான மருந்துமா மலைதனிலே யொன்று
பெரிதான சுனையொன்று பாறையொன்று
வாறான வடமுகமாய்க் கைதானொன்று
வல்லசித்த ரன்பதுபே ரதிலேயுண்டு
வீரான தைலம் பாஷானமுண்டு
விதமான மூலிஎல்லா மதிலேயுண்டு
கூறான பொன்மலைதான் மேற்கேயுண்டு
குடிஇருப்பா ராயிரம்பேர் சித்தர்தானே

தானென்ற கற்குழிதான் கிணறுபோலத்
தப்பாம லதிளிருபார் கெவுளிபோல
வானென்ற பிள்ளையார் மலைதானொன்று
வடிந்திருக்குங் கல்மதங்கள் வெள்ளிபோலாம்
கானென்ற வர்மலையில் மலைதானொன்று
கர்கதவன் திறந்திருக்குங் கண்டுபாரு
நானென்ற ராமதேவ ரங்கேஉண்டு
நலமான மண்டலமும் நதிதாநோன்றே

ஒன்றான வைந்துபத்துச் சித்தருண்டு
வுத்தமனே யுதகசன்ஜீவிக் கிணறுமுண்டு
வென்றான வதன்வடக்கே கருமலைதானொன்று
விளங்கியதோர் சித்தர்களுஞ் சதந்தானுண்டு
அன்றான பொதிகைக்கு வாய்விலப்பா
வாச்சரியம் மலைசெம் மலைதானாமே
நன்றான போகளுந்தா னாயிரம்பேர்
நம்முடைய கருவூரார் பிள்ளைதானே

தானென்ற சூடன்மலை யோன்றிலப்பா
தப்பாமற் சித்தர்பத்துப் பேர்தானுண்டு
வேனென்ற விராமேச்வறாரு மருகிற்றானும்
விதமான கந்தமா தனமுமுண்டு
வாவென்ற வசிட்டருட பிள்ளையப்பா
வல்லவர்க லன்பத்தி யொருபேராரும்
ஊனென்ற வுவருப்பு வதிலேயுண்டு
வுத்தமனே நாரதமா மலைஇர்கேலே

கேளப்பா நாரதமா மலைஇற்றானுங்
கெடியான சுனையொன்று வதற்குலப்பா
வாளப்பா குகைவாச லுல்லேசென்றால்
வல்லதொரு வெண்கலத்தார் கதவுமுண்டு
நாளப்பா நாரதரு மதிலேவாழ்வார்
நற்புதல்வ ரறுபத்து நால்வரோடும்
நீளப்பா வெள்ளைஊர் தனிலேகேளு
நிஜமான வுப்புவாடைக் காரமமே
காரமென்ற தென்மேற்கே பிரான்மலைதானொன்று
கனமான சித்தரதிர் பதினாருண்டு
வீரமென்ற வெம்மலைக்கு மேற்கேகேளு
விதமான கருமலைதா னோன்றுண்டப்பா
சாரமென் மலைமீதிர் சென்றாயானார்
சஞ்சீவி மெத்தவுண்டு சொல்லப்போகா
பாரமென்ற குகையொன்று வதற்குளப்பா
பாம்பாட்டி சித்தருமுன் டதனிர்பாரே

பார்க்குமென்ற பிள்ளைகளோ வைந்துபத்து
பரிவான கண்ணியொடு கமண்டலமும்வைத்து
ஏற்க்குமென்ற பாம்பாட்டி சித்தருந்தான்
என்னாளு மதிலிருப்பா ரின்னங்க்கேளு
கார்க்குமென்ற கமண்டளநீர் பாலாராகுங்
கன்னிஎலே குமாரகுந்தி மலைதானொன்று
தீர்க்குமென்ற திரவியங்கள் கோட்டயுண்டு
திறமான சித்தர்களும் பதினேழாமே

ஆமென்ற வதன்மேற்கே மலைதானொன்று
வாச்சரிய மெத்தவடா வரையக்கேளு
நாமென்ற சுனையெனக்கு வடுத்துக்கேளு
நல்லசெரு மலையதுதா நிற்க்குனிர்க்கும்
ஓமென்ற மலையொன்று சுன்னயுமொன்று
வுத்தமனே விக்ரங்க லநேகமுண்டு
வேமென்ற குகையொன்று கண்ணிற்கானும்
விளங்குகின்ற குகைக்குள்ளே சென்றுகானே

காணப்பா  வழுகண்ணிச் சித்தருண்டு
கமண்டலநீர்  தொடிஎலே வந்துபாயும்
தோணப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு
துலங்கிடவே கன்னியொன்று வவர்பாலுண்டு
பூணப்பா வதன்அடிஈர் தெப்பமுண்டு
புகழான திரவியங்கள் அனேகமுண்டு





---------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி


ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி


---------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment