Showing posts with label மகான்கள். Show all posts
Showing posts with label மகான்கள். Show all posts

Sunday, May 27, 2012

யாத்திரை - பர்வத மலை - 2


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

கொஞ்சம் சுதாரிச்சி , கொஞ்சம் பின்வாங்கி பாத்தா பச்சை கலர் துண்டு , வேட்டியோட ஒரு ஆளு , நல்ல கம்பீரமான குரலோட ஆனா கொஞ்சம் கனிவோட , " யாருப்பா அது , என்னவேணும் " கேட்ட பிறகுதான் , பயமே போச்சு , அப்பறம் பேச பேச தான் தெரிஞ்சிது அவர்தான் அந்த கோயில் பூசாரினு , நிறைய விஷயம் சொன்னாரு , இந்த பச்சை அம்மனும் , ஐயனாரும் தான் இங்க காவல் தெய்வங்க , ஊருல எல்லாரும் எல்லா விசேஷத்துக்கும் இங்கவந்து தான் எல்லாம் பண்ணுவாங்க , ரொம்ப சக்தி வாய்ந்த சாமிங்க , ராத்திரி ஆன இங்க உலவ ஆரம்பிச்சிடுவாங்க , எதாவது தப்பு தண்டா பண்ணா அவ்ளோதான் , இதுக்கு அப்பறம் கொஞ்ச தூரம் உள்ள போனா அங்க வீர பத்திரன் கோயில் ஒன்னு இருக்கு , அது இன்னும் உக்கிரமான சாமி , மலைக்கு உண்மைய கும்பிட வரவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியும் கூட , வேணும்னா அங்க போய் கும்பிட்டுட்டு இங்க திரும்ப வந்து இரவு தங்கிட்டு அதிகாலைல கிளம்புங்க , இப்ப கைல டார்ச் லைட் கூட இல்லாம ஏறது சிரமமான காரியம்னு சொன்னாரு , நான் அவர் கிட்ட , ஐயா இப்ப இங்க இருந்து அந்த வீரபத்திரன் கோயிலுக்கு போறதே , பெரிய விஷயமா இருக்கும் போல , நான் இங்கியே தங்கிட்டு காலைல கிளம்பறேன் , நல்ல பசிக்கிது , எதாவது கிடைக்குமான்னு கேட்டேன் , சரி கொஞ்ச நேரம் படுங்க , இப்ப வரேன்னு போயிட்டு ஒரு , ஒரு மணி நேரம் கழிச்சி சுட கஞ்சியோட வந்து குடுத்தாரு , காலைல இருந்து சாப்பிடாம இருந்ததுக்கும் அதுக்கும் , அப்பா சும்மா சூப்பரா இருந்துது கஞ்சி , நல்ல கட்டு கட்டிட்டு , வெளில இருந்த யானை சிலைக்கு பக்கத்துல போர்வைய விரிச்சு படுத்ததுதான் தெரியும் , காலைல சூரியன் முகத்துல அடிக்கும் போது தான் முழிப்பே வந்துது , அப்படி ஒரு தூக்கம் , அப்படி ஒரு சுறுசுறுப்பு காலைல எந்திரிக்கும் போது , எந்திரிச்சு பாத்தா பக்கத்துல பூசாரிய காணோம் . என்னடா இது திரும்ப பீதிய கிளப்ராறேனு சுத்தி முத்தி பாத்தா , கோயிலுக்கு உள்ள பூசைல இருந்தாபோல , நான் எந்திரிச்சி வரர்த பாத்துட்டு , தம்பி அப்படியே இரு வரேன்னு சொல்லிட்டு வெளிய வந்து குளத்துக்கு கூட்டிட்டு போனா போல , நல்ல சூப்பர் குளியல் , குளிச்சிட்டு வந்த பிறகு , பச்சையம்மன் கோயில்ல சாமி கும்பிட்டிட்டு , எல்லா அய்யனாருக்கும் சூடம் ஏத்தி கும்பிட்டிட்டு அப்படியே கில சுத்தி வீரபத்திரன் கோயிலுக்கு கிளம்பினேன் , பூசாரியும் வழி அனுப்பி வெச்சாரு .

நல்ல புதர்கள் மண்டிய ஒரு சின்ன ஒத்தை அடி பாதை , கரடு முரடா இருந்துது , சுமார் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் போனோம்னா , வலது கை பக்கம் ஒரு பாதை பிரியும் , அந்த வழி போய் முடியற இடம் வீரபத்திரன் கோயில் , கொஞ்சம் சின்ன கோயில் தான் , ஒடஞ்சு விழறா மாதிரி இருக்கும் , இங்க எந்த பூசாரி பீதிய கிளப்ப போறார்னு நினைச்சிகிட்டே செருப்ப வெளில விட்டுட்டு உள்ள நுழைஞ்சா , கொஞ்சம் சடை பிடிச்ச தலையோட , காவி துண்டு மட்டும் கட்டிட்டு , ரொம்ப மெலிஞ்ச உடம்போட , கை எல்லாம் கொஞ்சம் கோணல் மாணலா இருந்தாரு பூசாரி , அவர் நம்மள பாத்தா உடனே , நல்லா ரொம்ப நாள் பழகனவுங்கள போல வாங்க வாங்க சாமி , என்ன மலை ஏறவானு , ரத்னா சுருக்கமா கேட்டாரு , ஆமாங்கனு சொன்னேன். வாங்க முதல்ல சாமிய கும்பிடுவோம்னு சொல்லிட்டு , ஆரத்திய காமிச்சாரு , நல்ல அருமையான சாமி , வீராவேசத்தோட இருந்தது , அத பாக்கும் போதே நமக்கு ஒரு புது தெம்பே வந்துடும் , அவ்ளோ ஒரு வீரம் அந்த சாமிகிட்ட , அதான் வீரபத்திரன்னு பேர் போல , கண்ணுல ஆரத்திய ஒத்திக்கிட்டு விழுந்து கும்பிட்டிட்டு , வெளிய வந்து ரெண்டு பேரும் உட்கார்ந்தோம் , நல்ல அமைதியான சூழல் , ஆள் அரவம் இல்லாத இடம் , ஓரளவுக்கு மனமும் அமைதியாதான் இருந்துது அங்க , கொஞ்சம் போல எனக்கும் அந்த சூழல் பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு , அப்படியே அவர் கிட்டயும் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன் , என்னங்க எத்தன மணிக்கு எல்லாரும் மலை ஏற ஆரம்பிப்பாங்கன்னு கேட்டேன் , அவர் என்னது எல்லாரும்னா வேற யாரவது உங்க கூட வந்தாங்களானு என்ன திருப்பி கேள்வி கேட்டாரு , நான் இல்லை யாரும் வரலைன்னு சொன்னதும் , சிரிச்சிகிட்டே ஓஹோ தம்பி இதுதான் முதல் முறையா வரர்துனு கேட்டுட்டு , இந்த ஒருவாரத்துல நீங்க தான் முதல் ஆளு இந்த வரர்து , போன வாரம் பௌர்ணமிக்கு நம்ம வேலூர் வைத்தியர் வந்துட்டு போனது அவ்ளோதான் அதுக்கு அப்பறம் யாரும் வரல , அதனால ஒன்னும் பயப்படாதீங்க , இங்க மாசத்துக்கு பத்து பேர் வந்தா பெரிய விஷயம் , வழி எல்லாம் சுலபமாதான் தெரியும் தைரியமா போலாம் , மிருக பயம் அவ்வளவா இல்லை சூரியன் இருக்கற அப்போ எதுவும் பாதைல வராது தைரியமா போய்ட்டுவாங்கனு சொன்னாரு , எனக்கும் அப்போ மிருகத்த பத்தி எல்லாம் ஒன்னும் பெருசா பயம் இல்லை , ஏன்னா நேரடி அனுபவம் எதுவும் இல்லை , எனக்கு தெரிஞ்ச ஒரே மிருகம் திரு . நாயார் அவர்கள் மட்டுமே , வழி நிறைய கல்லு இருக்கு , வழில போறதுக்கு நமக்கு என்ன பயம்னு , அவர் கிட்ட அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை , வேற என்ன பாத்து போகணும்னு கேட்டேன் .

அவரும் விளக்க ஆரம்பிச்சாரு , "அப்படியே ஏற ஆரம்பிசீங்கன்னா , வழில உரல் பாறைன்னு ஒன்னு வரும் , கொஞ்சம் பெரிய மொட்டை பாறை அது , சின்ன சின்ன குழிகள் இருக்கும் , அது சித்தர் சாமிகள் மருந்து அரைக்கிற இடம் , இப்ப மழை பெய்து இருக்கறதால அதுல எல்லாம் அனேகமா தண்ணி தேங்கி இருக்கும் , இருந்தா நமஷிவாயனு சொல்லிட்டு கொஞ்சம் போல எடுத்து குடிங்க , உடம்புக்கு நல்ல தெம்பு வரும் , அங்க இருந்து கட கடனு ஏறிடலாம் மேல , கொஞ்சம் போன பிறகு இடது கை பக்கமா ஒரு பாத பிரியும் அது மலை மேல வரர்துக்கான இன்னொரு வழி , அதாவது கடலாடி வழி , அந்த பக்கம் போகாம நேரா மலை மேல ஏறுங்க அது போய் முடியற இடம் கடப்பாரை நெட்டு , அதுக்கு மேல வழி எங்கயும் பிரியாது , அப்படியே கடப்பாரை நெட்டு மேல ஏறிநீங்கன்னா அது ஒரு தண்டவாலபடில போய் முடியும் , பாத்து நிதானமா ஒருமுறைக்கு இருமுறை கவனிச்சு போங்க , சேதாரம் எதாவது கண்ணுல பட்டுதுனா போகதீங்க , கீழவிழுந்தா எலும்பு கூட தேறாது , அதுக்கு அப்பறம் தீட்டு காரி மண்டபம் , அங்க தங்கி ஆசுவாச படுத்திகிட்டு மேல போனீங்கன்ன , பாதாள கிணறும் , பாப்பாத்தி சுனையும் இருக்கும் , அது ஒரு மகா புனிதமான இடம் , அங்க அந்த பெண் தெயவத்த வணங்கி கும்பிட்டிட்டு , பாதாள கிணறுல இப்போ தண்ணி மேல இருக்கும்னு நினைக்கிறன் , தண்ணிய ஒரு முடக்கு குடிச்சிட்டு , சித்த சாமிங்கள கும்பிட்டுகுங்க , ஏன்னா இதுக்குள்ள பல பல விஷயங்கள் , பல சக்தி விஷயங்கள் இருக்கு , அதுக்கு மேல நான் சொல்லவும் மாட்டேன் , நீங்க அங்க இருந்து ஏறிபோங்க , மேல போக போக , புள்ளையார் நெட்டுன்னு ஒன்னு வரும் ரொம்ப குறுகலான பாறை , அதை தாண்டி போனீங்கன்னா , ஆகாய பாதை ரொம்ப சின்ன வழி தான் இருக்கும் , பக்கத்துல பிடிமானம் இருக்காது , கரணம் தப்பினா மரணம் தான் அங்க , அந்த பாப்பாத்தி தெய்வமே இங்க கஷ்டப்பட்டுட்டா , நீங்க பாத்து நிதானமா தான் போகணும் , அத தாண்டிட்டா மேல உச்சிக்கு போய்டலாம் , இப்ப கொஞ்ச மாசமா அங்க ஒரு துறவி இருக்காரு , அரிசி எல்லாம் பொங்கி சாப்பிடலாம் , சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லை , கொஞ்சம் அப்படி ஏறி இறங்கிநீங்கன்னா கோயில் வந்துடும் , அங்க எல்லாம் ஏகாந்தம் தான் , போய் அனுபவிச்சிட்டு வந்து சொல்லுங்கன்னு " , சொல்லி ஒரு பெரிய விஷயத்த ரொம்ப சாதாரணமா சொன்னாரு . எனக்கு கேக்கும் போது நல்லா தான் இருந்துது , ஏன்னா இதுக்கு முன்ன இத மாதிரி த்ரில்லிங் அனுபவம் எல்லாம் இல்லை , அதனால நான் நல்ல உற்சாகமாவே கிளம்பினேன் , கிளம்பின என்ன கோயிலுக்கு பின்னாடி பக்கம் கூட்டிட்டு போனாரு , அங்க ஒரு சின்ன குளம் மாதிரி இருந்துது , கொஞ்சம் இந்த தண்ணிய குடிச்சிட்டு , அதோ அங்க அந்த வழியா போனீங்கன்னா அங்க ஒரு சிவலிங்கமும் , அதுக்கு அப்பறம் ஒரு பெண் தெய்வமும் இருக்கும் அதையும் சேவிசிட்டு போங்கன்னு சொல்லி திரும்பவும் வீரபத்திரன் கோயிலுக்கு உள்ள போயிட்டாரு , நான் அந்த வயசுல விவரம் தெரியாத நேரத்துல ஏதோ அதுவும் ஒரு சாமிதானணு போய்தான் கும்பிட்டேன் , பிறகு ஒரு சில வழிகாட்டுதல்கள் கிடச்ச பிறகுதான் தெரிஞ்சது அது ஒரு ஜீவசமாதி என்பது , நல்லதொரு அதீத அதிர்வலையும் அங்கு சாதாரணமா உணரலாம் , யாரவது பர்வதமலைக்கு போறவங்க படிச்சா இந்த இடத்த கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க , நல்லதொரு அனுபவம் இங்க கிடைக்க வாய்ப்பு இருக்கு....



POOSARI @ VEERAPATHIRAN TEMPLE ( 1995 )

VEERAPATHIRAN TEMPLE ( 1995 )


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------