Sunday, May 27, 2012

யாத்திரை - பர்வதமலை - 3


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

சமாதி லிங்கங்களை வழிபட்டுட்டு , அப்படியே நடக்க ஆரம்பிச்சேன் , அவ்ளோ அடர்ந்த வனம் இல்லை , மரங்கள் இருந்துது ஆனா அவ்ளோ குளிர்ச்சி இல்லை , ஒத்தை அடி பாதை , கரடு முரடான கற்கள் என்று வெறும் காலில் நடப்பது என்பது சற்று சிரமமான ஒண்ணா தான் இருந்துச்சு , ஆனா கிரிவலம் போறா மாதிரி இல்லை , அங்க நாம நடக்கும் போது , ஒரு பத்து நிமிஷத்துக்கு ஒருத்தரையாவது பாக்கலாம் , இங்க அப்படி இல்லை , துப்புரவா யாருமே இல்லை , நம்ம திரு . நாயார் இருந்தா கூட தேவலாம் போல இருந்துது , நடக்க நடக்க நல்ல வியர்வை வர ஆரம்பிச்சது , சட்டைய கழட்டி தோள்ள போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சேன் , வீரபத்திரன் கோயில் பூசாரி சொன்னா மாதிரி ஒரு இடத்துல மொட்டை பெரிய சைஸ் பாறை இருந்துது , பக்கதுலையே கொஞ்சம் போல ஊற்று மாதிரி தண்ணி வந்துட்டு இருந்துது , தண்ணி பட்டு பட்டு பாறையும் கொஞ்சம் போல சில்லுனு இருந்துது , மலை ஏற்றது முதல் அனுபவம் , அதுவும் இல்லாம தனியா காட்டுக்குள்ள போறது கொஞ்சம் த்ரில்லா இருந்துது , ஆனா கொஞ்சம் பயமாவும் இருந்துது , சரி கொஞ்சம் படுப்போம்னு படுத்துட்டு , பிறகு அவர் சொன்ன குழிகள தேடினேன் , அங்க அங்க இருந்துது , எல்லாமே கொஞ்சம் பச்சை கலரா இருந்துது , அது மூலிகையா இல்லை பாசியானு தெரியல , இருந்தாலும் கொஞ்சம் போல உறிஞ்சி குடிச்சிட்டேன் , மலைங்க , காடுகள் இங்க எல்லாம் போனா இத மாதிரி தண்ணிய மிருகங்க குடிக்கறது போல நேரா குடிச்சோம்னாஅதுவே ஒரு தனி சுகமாதான் இருக்கும் , சமீபத்துல பொதிகை மலை போனப்ப கூட இத மாதிரி குடிச்சி குதூகலமா இருந்தோம் நானும் நம்ம சிவாவும் .

ஒரு பத்து , பதினஞ்சி நிமிஷம் கழிச்சி , அங்க இருந்து திரும்பவும் மேல ஏற ஆரம்பிச்சேன் , இதுக்கு மேல ஏற்றது கொஞ்சம் சிரமமாதான் இருந்தது , இருந்தாலும் , பெரியவர் குடுத்த ஊக்கம் , சொன்ன இடங்கள் பாக்க ஆவலா இருந்ததால , மூச்ச புடிச்சி கிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன் , சீக்கிரமே வந்துடிச்சு முக்கூடல் , அங்க நின்னு மலைய பாத்து ஒரு கும்பிடு போட்டுட்டு அப்படியே திரும்பவும் அந்த நேட்டான பாதைல ஏற ஆரம்பிச்சேன் , அப்படி இப்படின்னு அசைஞ்சி , ஒரு வழியா கடப்பாரை நெட்டு ஆரம்பிக்கிற இடத்துக்கு வந்தாச்சு , வாழ்க்கைல முதல் தடவையா கடப்பாரை எல்லாம் புடிச்சிட்டு ஒரு சாகசமான பயணம் பண்ணபோரோம்னு , சுறுசுறுப்பாஆகிட்டேன் .

இங்க ஒரு சின்ன விஷயம் , இந்த முதல் பயணத்துக்கும் அடுத்து அடுத்து போனதுக்கும் , கொஞ்சம் வித்யாசம் இருந்தது , ஏன்னா இங்க இருந்த கடப்பாரை எல்லாம் முதல் முறையும் அடுத்து சென்ற ஒரு நான்கைந்து முறையும் தான் கடப்பாரை முனைல வேல் மாதிரி இருந்தது , அதுக்கு அப்பறம் போன பயணங்கள்ள , பக்த்தர்கள் எல்லாம் சேந்து இன்னும் நிறைய கடப்பாரைகளையும் , சங்கிலிகளையும் போட்டு இருந்தாங்க , அதே மாதிரி தண்டவாள படில எல்லாம் முதல்ல தண்டவாளம் மாதிரியான அமைப்பு மட்டும் தான் இருந்தது , ஏணி படினா , ஏணி மட்டும்தான் இருந்தது , அதுல ஏற்றது என்பது த்ரில்லாவும் இருந்தது , கொஞ்சம் ரிஸ்க்கும் கூட , அதுக்கு அடுத்த அடுத்த பயணங்களில் கொஞ்சம் மாற்றங்கல் இருந்தது , அது பாதுகாப்புதான் , இருந்தாலும் சாகச பயணம் , அப்படி இப்படின்னு என்ன மாதிரி சுத்த வர கோஷ்ட்டிகளுக்கு மிஸ் பண்ண மாதிரிதான் .

சரி கடப்பாரை நெட்டுக்கு வருவோம் , கடப்பாரை எல்லாம் முதல்ல பிடிக்கும் போது கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல இருந்துது , ஒரு நாலு அஞ்சு தாண்டின பிறகு எல்லாம் எட்டி பிடிக்கிறா மாதிரிதான் இருந்துது எட்டி கூட பிடிச்சிடலாம் போல மேல கால் வைக்க சின்ன குழி இல்லனா ஒரு க்றிப் கூட இல்லை , என்னடா இது சாகசமா நினச்சு வந்தா இப்படி நடு வழில மாட்டிகிட்டோமேனு ரொம்ப பொறுமையா க்றிப் கிடைக்கிற இடமா பாத்து பாத்து பிடிச்சி ஏர்றதுக்கு தடுமாற்றமா தான் இருந்தது , ஹ்ம்ம் ஏறியாச்சு ஒருவழியா , அடுத்து ஏணி , நல்லா துரு பிடிச்சி கொஞ்சம் அழுத்தி கால் வெச்சா உடைஞ்சிடும் போல இருந்துது , ஆனா கால் வெச்சி ஏறும் போது தான் தெரிஞ்சிது அது எவ்ளோ ஒரு உறுதியான இரும்புனு , ரொம்ப எடை அதிகமாவும் இருக்கும் போல , எந்த புண்ணியவான் தூக்கிட்டு வந்து வெச்சாருன்னு தெரியல , நம்ம ஏர்றதுக்கு பயன்படுது . கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறி போனோம்னா அதுக்கு மேல இருக்குற பாதை எல்லாம் ரொம்ப பாத்துதான் போகணும் கொஞ்சம் வழி தெரியாம முன்னேறினாலும் அதல பாதாளம் தான் .

தீட்டு காரி மண்டபம் , ஒரு சின்ன தண்டவாள படிய தாண்டினோம்னா வருது , பொதுவா அந்த மண்டபம் பத்தி சொல்றது என்னன்னா , மலைக்கு ஏறி வர பெண்கள் மாத விளக்கு ஆகின்ற நேரத்துல இங்க தங்கிக்கலாம்னு சொல்லுவாங்க , ஆனா இடம் பாத்தா வேற சில கோணத்துல யோசிக்க தோணும் , மாநன்னன் ஆண்ட காலத்துல இது வீரர்கள் , உளவு நோட்டமிடுபவர்கள் , அவர்களுக்கு சமையல் செய்றவங்க தங்கிற இடமா இருந்திருக்கலாம் , ஏன்னா இதுக்கு பக்கத்துல தான் பாதாள கிணறும் பாப்பாத்தி சுனைக்கு போற வழியும் இருக்கு , இந்த பாப்பாத்தி தெயவத்த பத்தி சொல்லாம விட்டுட்டனே .

அதாவது , பழங்காலத்துல ஒரு ஆச்சாரமான பிராமண தம்பதியர் திருவண்ணாமலைய்க்கு வந்தப்போ , பர்வதமலை பத்தி கேள்வி பட்டு இங்க வந்து இருக்காங்க , இப்பவே இப்படி இருக்கு ( நான் சொல்ற இப்பங்க்றது தொண்ணூறாம் வருஷம் ) அப்போ அதாவது ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எப்படி இருந்து இருக்கும் , ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி தரிசனம் பாத்துட்டு வரும் போது அந்த பிராமண பெண்ணோட கணவர் தவறி விழுந்துட்டு இருக்காரு , உயிர் பிரிஞ்சிடிச்சு , அந்த பெண் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்துல இருந்து வந்ததால சாவித்திரி போல சாமி கிட்ட சண்டையே போட ஆரம்பிச்சிட்டாங்களாம் , உன்னை பாக்க வந்து தான இப்படி ஆச்சு , ஒன்னு என்னோட பதிய உயிரோட திரும்ப குடு , இல்லைனா என்னையும் இங்கியே சாக அடிச்சிடுனு பெரிய வைராக்கியத்தோட கேட்டாங்கலாம் , சாமி கிட்ட இருந்து எந்த பதிலும் காணோம் , சரி இங்கியே உன்னோட இடத்திலையே என்னோட உசுரும் போகட்டும்னு கீழ குதிச்சிட்டாங்கலாம் , இத மாதிரி ஒரு கற்புக்கரசிய சாமி சும்மா விடுமா , இல்லை அத மாதிரி ஒரு பெண்ணோட சாபம்தான் சாமியையே ஆட்டி வெச்சிடாதா , சாமியும் , இறங்கி வந்து அவங்கள விழுந்த இடத்துல இருந்து உயிர் பித்து சொன்னாங்களாம் , " உன்னோட கணவரின் புண்ணிய பலம் தான் இங்க வந்து அவர் உயிர் பிரிய காரணம் , இங்க உயிர் பிரிஞ்ச தாள , அவருக்கும் மோட்சம் என்கின்ற பிறவா நிலை கிடச்சிடிச்சி , இதுல நீ துக்கமோ துயரமோ பட எதுவும் இல்லை , ஒரு பதிவிரதை கணவன் மோட்சம் அடையறதுக்கு பாடுபடுவது கூட அவளின் முக்கிய கடமைல ஒண்ணுதான் , அதனால நீ கலங்கி புலம்ப எதுவுமே இல்லை , உன்னுடைய விதியும் இங்க வந்துதான் எல்லா யோக முறையும் கற்று தேர்ந்து பிறவா நிலை அடையணும்னு இருக்கு , இங்கு இருக்கும் சித்த புருஷர்கள் உனக்கு எல்லாவற்றையும் கற்று கொடுத்து , உன்னை நன்னிலை அடைய வைப்பாங்க , அதுவரை நீ உன்னுடைய கணவரயும் சூட்சுமமா உணரலாம் " அப்படின்னு சொல்லி அருள் புரிஞ்சாங்கலம் அந்த பிரம்மராம்பிகை தாய் . அவங்களும் சித்த பெருமான்கள் கிட்ட முறையா எல்லாம் தெரிஞ்சிகிட்டாங்கலாம் , அதே மாதிரி பதினெட்டு சித்தருக்கும் அங்க லிங்க வடிவுல சிலை வெச்சி வழி பட்டாங்களாம் , கொஞ்சம் சமயோஜிதமா யோசிச்சி கொஞ்சம் பதிய உத்து பாத்து போனோம்னா அத நம்மளும் பாக்கலாம் , பொதுவா யாரும் இந்த விஷயம் தெரியாததால அந்த இடத்துல இத கவனிக்கறது இல்லை , அந்த அம்மா அங்கையே தங்கி இருந்ததால அந்த சுனைக்கும் அந்த இடத்துக்கும் , பாப்பாத்தி சுனைன்னு பேரு , அதுவும் இல்லாம அவ்ளோ கரடு முரடான இடத்துல கூட , என்னதான் வெய்யில் அடிச்சாலும் அந்த ஒரு இடம் மட்டும் அவ்ளோ ஒரு இதமா அமைதியா இருக்கும் , பல பேர் அத நல்லா உணர்ந்து இருப்பாங்க , ஆனா மேட்டர் தெரியாம இருந்து இருக்கும் . மலைல எங்க தண்ணி இல்லாம இருந்தாலும் இங்க கண்டிப்பா இருக்கும் .

அந்த பாதாள கிணறு , பேரு வெச்சாலும் வெச்சாங்க இப்படியா , பயங்கர ஆழம் , அனேகமா இதுவும் நன்னன் காலத்தியதாதான் இருக்கும் , இந்த காலத்துல அதுவும் அந்த இடத்துல கிணறு தோன்றது ரொம்ப கஷ்டம் , இதுலயும் ஒரு விஷயம் இருக்கு , கிணத்துக்குள்ள கீழ இறங்கினோம்னா , ஒரு சுரங்க வழி இருகரதாகவும் அதுக்குள்ள போனோம்னா பலவிதமான மலர்கள் , மூலிகைகள் , மரங்கள் , பழங்கள் கொண்ட பெரிய தோட்டமும் , அங்க சித்த புருஷர்கள் சாதனைல இருகர்தாகவும் கேள்வி பட்டு இருக்கேன் , ஒரு முறை நிறைய டூல்ஸ் , கயிறு எல்லாம் எடுத்துட்டு போய் , நண்பர்கள் ஒரு பத்து பேர் போய் இறங்கி பாத்தோம் , ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போக முடியல , கொஞ்சம் பயமும் காரணம் .

சரி நம்ம இதுக்கு மேல சந்நிதானத்துக்கு போவோம் . ஆகாய பாதை ரொம்பவே திகிலான இடம் தான் இது இடது பக்கம் கொஞ்சம் திரும்பி பாத்தாலும் ஒரு அடி எடுத்து வைக்க தோணாது , முழுக்க முழுக்க பள்ளம் , கொஞ்சம் கால் இடறினாலும் அவ்ளோதான் சீன் ஆய்டுவோம் , அதுவும் அப்போ சுத்தமா ஒரு சங்கிலியோ , இல்லை ஒரு சப்போர்ட்டோ இருக்காது , வலது பக்கம் இருக்குற பாறைய பிடிச்சிகிட்டு தான் மெல்ல நகர்ந்து போக முடியும் , இப்ப எவ்ளோவோ தேவலாம் ( நான் கடைசியா இங்க போனது இரண்டாயிரத்துல , இப்ப எப்படி இருக்குனு தெரியல ரொம்பவே மாறிட்டதா கேள்வி பட்டேன்) , அந்த கொஞ்ச தூரத்த கடக்கும் பாடு இருக்கே அப்பா சொல்லி மாளாது , இத தாண்டிட்டோம்னா , அப்பா....... மலை உச்சி , சும்மா நச்சுனு இருக்கும் , முதல்ல ஒரு குட்டி மலை மேடு அத தாண்டினா சந்நிதானம்.







KADAPARAI NETTU ( 1995 )


அடுத்த பதிவுல சந்நிதானம் , கோமண சாமியார் , அம்மாவோட அழகு எல்லாம் பாக்கலாம் .


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Hi Sankar,

    These pics reminds my visit during 2004 with my family members. The forest was so dense and one has to walk and climb rocks like crazy.After mid of 2005 lot of renovations happenned. Anyways, nice to the see the old pics.

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

    ReplyDelete
  4. Yoga can help you get fit for life. It helps you deal with stress, pick up your child, control your dog, carry groceries, or work in your garden. It also can help to prevent or ease back pain and muscle or joint injury, and give you self-reliance and self-esteem.Yet, one of the most important benefits of any yoga routine isn't physical — it's the quieting of the mind. The bottom line is learning to pay attention. You fine-tune your attention, beginning with the body, and then moving to the mind. As you get deeper into your practice over the years, you start to see the mental and spiritual benefits.
    yoga tips and images

    ReplyDelete
  5. Kaavidesam - Palani Murugan Statue finished of Navapashanam. Navapashanam term is derivative from nava+pashanam. Nava means 'nine' and pashanam means 'poisonous substance'. For more details about Navapashanam in tamil visit our website. Navapashanam Benefits

    ReplyDelete
  6. சார், வணக்கம். உங்கள் பதிவுகள் அருமை. ஏன் தொடரவில்லை. உங்கள் பதிவுகளை தற்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது

    ReplyDelete
  7. Benefits of NavaPashanam

    Navapashanam is known to contain extremely high positive energy or be considered as a master medicine. Navapashanam acts as a catalyst to awaken the Self that then knows how to transmute negative energy into positive energy.
    Navasanam increases the spiritual energy and vibrates the kundilini chakras.
    It helps in the awakening of Kundalini.
    Negative energy does not work due to wearing NavaPashanam. It provides complete security against free negative energy of enviroment.
    As per Goraksha Samhita (गोरक्ष संहिता), it can be used to remove many Dosha. Such as Mangal Dosha, Pitru Dosha, Kaal Sarp Dosha and many problems related to malefic planets.
    Wearing NavaPashanam gives full positive energy, intense brain and healthy body.
    It is especially fruitful in sadhana and brings about wishes and success.

    ReplyDelete