Friday, February 3, 2012

பொதிகை மலை - அகத்தியர்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


பொதிகை மலை , கிட்டத்தட்ட இரண்டு வருஷமா plan  பண்ணி பண்ணி போகமுடியாம போச்சு , மதுரைல இருந்து நான் நண்பர் ராம் அடிக்கடி plan போடுவோம் ஆனா போக முடியாது , முதல் காரணம் அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து  அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருகர்தால யார பாத்து எப்படி permission வாங்கரதுன்னு தெரியல .


இத எழுதும் போது அருள் பத்தி சின்ன ஞாபகம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கிட்ட ஒரு குடியானவன் கேட்டாராம் , ஸல் நீங்க எவ்ளவோ நல்ல காரியம் பண்றீங்க , அல்லாஹ் ( ஏக இறைவன் ) உங்களுக்கு சொர்கத்துல இடம் கண்டிப்பா குடுப்பார் தானேனு கேட்டாராம் , அதுக்கு ஸல் அவர்கள் இந்த காரியங்கள் எல்லாம் செய்யறதால அல்லாஹ் எனக்கு சொர்கத்துல இடம்குடுப்பார்னு இதை எல்லாம் நான் பண்ணல அப்படி கிடைக்கவும் கிடைக்காது , அதற்க்கு அல்லாஹ்வின் அருள் பார்வை என்மீது விழுந்தாள் போதும்னு பதில் சொன்னாராம் .
அத மாதிரி எங்களுக்கு அகத்தியரோட அருள் பார்வை இரண்டு வருஷத்துக்கு அப்பறம் கிடைச்சது .


அமெரிக்காவுல எனக்கு நண்பர் ராம்குமார்னு சுமார் ஒரு வருஷத்துக்கு முன்ன பழக்கமானார் , சிறந்த , தீவிர அகத்திய முனியின் பக்தர் , அவர் தான் எப்படி போகணும் யார பாத்து permision வாங்கனும்னு தெளிவா சொன்னார் , ராம்குமார் அவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .


முதல்ல எப்படி அங்க போறது யார் கிட்ட permission வாங்கரதுன்னு சொல்லிடறேன் , ஏன்னா நான் எல்லாம் இந்த information கிடைக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் பட்டேன் . கேக்கும்போதெல்லாம் இப்ப கிடையாது அப்போ போகணும் இவன பாக்கணும் அவன பாக்கணும் இவ்ளோ பணம் செலவாகும் அது இதுனு அழிச்சாட்டியம் பணிட்டாங்க .

இங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வன விலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளிய வரல , காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் proper permission கிடையாது . கேரளா வழியும் சும்மா இல்ல ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் .


சரி விஷயத்துக்கு வருவோம் , கேரளா திருவனந்தபுரம்ல , forest and wild  life அலுவலகம் P .T .P  நகர்ல ( வட்டியூர் காவு ) இருக்கு , அங்க போய்ட்டு , "அகஸ்தியர் கூடம் " போறதுக்கு permission வாங்கனும்னு சொன்னா போதும் , நேரா அந்த ஆபீஸ் உயர் அதிகாரியான வார்டன் ன பாக்க சொல்லுவாங்க , அங்க இப்போ இருக்கிற வார்டன் பேரு "திரு. ஜெயகுமார் ஷர்மா" , ரொம்ப நேர்மையான officer , சல்லி காசு லஞ்சம் வாங்கறது இல்ல , சீசன் நேரத்துல permission  கேட்டா , ஞாயமா இருந்ததுனா உடனே permission குடுத்திடுவாங்க .
ஒரு தலைக்கு ரூபாய் 350 /- . சீசன் நேரம் என்பது மகரஜோதி முதல் சிவராத்திரி வரை , ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அனுமதி உள்ளது , சில நேரங்களில் , அத்தியாவசியமாகின் அல்லது முன்னரே பதிவு செய்தவர்கள் யாரவது cancel செய்யும் பட்சத்தில் நாம் முன்பதிவு செய்யலைனா கிடைக்கும் , முன் பதிவு ஜனவரில முதல் வாரத்துல ஆரம்பிக்குது . சிவராத்திரிக்கு அப்பறம் ஏப்ரல் மாசம் வரைக்கும் package trip மாதிரி ஒன்னு இருக்கு , அதுக்கு ஒரு தலைக்கு ரூபாய் 750 /- ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 4 நபர்கள் ஆக ரூபாய் 3000 /- செலுத்தி செல்லலாம் . எந்த விதமான லஞ்சத்திற்கும் அங்கே இடம் இல்லை , தேவையும் இல்லை , அந்த அலுவலகத்துல எனக்கு பிடிச்ச ஒன்னு யாரும் லஞ்சம் கேக்கறது இல்லை .

போன் மூலமா பேசறத விட நேரா போன அனுமதி கண்டிப்பாக கிடைக்கும் , செல்லும்போது ஒரு photo I .D . எடுத்துட்டு போங்க , விண்ணப்பம் இலவசம் .

பொதிகை யாத்திரை செல்பவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னனா , மார்ச் மாசம் முதல் அல்லது இரண்டாம் வாரதுக்குள்ள போய்ட்டு வந்துடுங்க , அதுக்கு அப்பறம் நான் கேள்வி பட்டது வரைக்கும் யானை நடமாட்டம் வெகு சாதாரணமா இருக்கும் , அவ்ளோ தூரம் களைப்புல ஏறும்போது நம்மால ஓடி ஒளிய கூட முடியாது .

கேரளா வனத்துறை விலாசம் :

 forest and wildlife office 
 P .T .P NAGAR 
 VATTIYUR KAAVU  
PH : 0471 - 2360762   

அப்பறம் எப்படி பொதிகை ( அகஸ்தியர் கூடம் ) அடிவாரம் போறதுன்னு பாப்போம் .

அடிவாரம் வன இலாகா அலுவலகம் இருக்கும் இடம் பேர் போனக்காடு , திருவனந்தபுறத்துல இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ் பிடிக்கணும் , காலை 6  மணிக்கு முதல் வண்டி அடுத்து அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு வண்டி இருக்கு , அப்படி இல்லனா நாம நெடுமங்காடு போயிட்டு போகணும் , நேர் வண்டி கிடச்சதுனா 2 .30 மணி நேரத்துல அடிவாரம் போகலாம் , பஸ் நிக்கிற இடத்துல இருந்து 4  கிலோ மீட்டர் நடந்தா வன இலாகா அலுவலகம் வரும் .

நாளைக்கு எங்களுக்கு அங்க நேர்ந்த அனுபவங்கள பதிவு செய்றேன் , ரொம்பவே விறு விறுப்பாவும் , அருள் நிறைந்த ஒரு யாத்திரையாவும் இருந்தது , கொஞ்சம் திகிலாவும் இருந்தது . நிறைய புகைப்படங்களும் எடுக்கப்பட்டது அதையும் போடறேன் .

நாளைக்கு பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


4 comments:

  1. சரி நண்பரே சதுரகிரி வந்து இருக்கிறீர்களா ? என்னுடய சித்தர்கள் ரகசியம் blogs பாருங்கள் நன்றி .

    ReplyDelete
    Replies
    1. many times when ever mahalingam blessed me

      Delete
  2. Great information to sharing with us . Thanks lot i hope i will make it in near future..with the blessings of Maha Guru Sri Agastiar.

    OM AGASTHISAYA NAMAHA!!

    ReplyDelete