Saturday, February 19, 2011

பழனி

பழனி-1 

ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி







பழனி என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பழனி நவபாஷான சிலை , அதன் பிரம்மா அய்யன் குரு போகர் முதல் சித்தர் கூட இரண்டாம் பக்ஷமாகவே நினைவுக்கு வருகிறார் பலருக்கு , இது தான் கலி காலம் என்பது என்று நினைக்கிறேன் , உருவாக்கு பவனை விட அவன்  உருவாக்கிய பொருளுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது , பரவாஇல்லை அவன் உருவாக்கிய பொருளிலும் அவனே உறைகிறான் என்பது போக போக எல்லோருக்கும் புரியும் .

பழனி எனக்கு வெகு அருகில் நினைத்த உடன் இரண்டு மணி நேரத்தில் சென்று அடைய கூடிய இடமாகத்தான் உள்ளது , இருப்பினும் சிறிது நாட்களுக்கு முன்பு வரை அங்கே செல்ல தோன்றும் ஆனால் சென்றது இல்லை , காரணம் அங்கு எப்பொழுதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் , மேலும் என் மனம் எப்போதும் அமைதியான கூட்ட நெரிசல் இல்லாத இடங்களிலேயே லயித்துக்கொண்டு இருந்தது .

எனது நண்பர் திரு அவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை அங்கே கண்டிப்பான முறையில் சென்று வருவார் , கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து வருவது என்றால் ஒரு நல்ல அனுபவத்திற்காக தான் இருக்கும் , மனிதர் என்னைப்போலவே அமைதியான இடங்களுக்கு மட்டுமே செல்லக்கூடிய நபர் , அவர் இங்கு அடிக்கடி செல்வது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது , அவர் பட்டறிவிலும் படிப்பறிவிலும் மிக மிக உயர்ந்தவர் , அவர் ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால் கண்டிப்பாக அதில் சரியான காரணம் இருக்கும் என்று நினைத்து , சிறிது நாட்களுக்கு முன்பு பழனி செல்ல ஒரு மதிய வேலையில் கிளம்பினேன் , சுமார் நான்கு மணி அளவில் பழனியை அடைந்து வின்ச் மூலமாக மலையை அடைந்தாயிற்று , நூறு ரூபாய் கட்டி சிறப்பு தரிசனத்திர்க்காக token பெற்றுக்கொண்டு உள்ளே சென்று எம்பெருமான் குரு போக மகரிஷி செய்த ஆதி சித்தர் முருகரின் நவபாஷான சிலையை வணங்கி வெளி வந்து மனமும் உடலும் அய்யன் நிவிகல்ப சமாதியில் அமர்ந்த இடத்தை தேட ஆரம்பித்து விட்டது .

அந்த இடத்தை நெருங்க நெருங்க ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வட்டத்திற்குள் செல்வது போன்ற ஒரு உணர்வு , என் நிலை என்னிடம் இல்லை . நேராக சென்று அய்யன் இருக்கும் இடத்தை வணங்கி வெளியில் வந்து கண்மூடி அமர்ந்தேன் , ஒரு  ஐந்து நிமிடம் இருக்கும் கண் திறந்து பார்த்த பொழுது முற்றிலுமாக இருட்டி இருந்தது , சுமார் ஐந்து மணிக்கு அமர்ந்த நான் இருட்டுவது கூட தெரியாமல் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது , இந்த நேர இடை வெளியில் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை  .

இப்பொழுது முதன் முறையாக நான் கூட நெரிசல் அது இது என்று சொல்லிய பழனியம் பதியை மிகவும் ஈர்ப்பு வாய்ந்த ஒரு ஷக்தி மண்டலமாக பார்க்க ஆரம்பித்தேன் , அய்யன் குரு போகரின் அருள் மற்றும் அவரே அங்கு இன்னும் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது .


பழனி - ௨ 

இரண்டாவது முறையாக பழனிக்கு சென்றது , ஒரு மாலை வேலையில் , ஏறக்குறைய இருட்டி விட்டது , வின்ச் வழியாக செல்வதற்கு நின்ற பொழுது , ஒரு மூதாட்டி வந்து , தம்பி ஆணை அடி வழியா போங்க , அஞ்சு நிமிழத்துல மேல போய்ட்டு சாமி பாத்துட்டு , தங்க தேர் பாத்துட்டு எட்டு மணிக்கெல்லாம் கீழ வந்துடலாம்னு சொன்னாங்க , நானும் சரி விஞ்சுகான கூட்டம் நிறைய இருந்ததால படி வழியா ஏறலாம்னு ஏற ஆரம்பிச்சேன் .

வழி வெகு சுலபமாக இருந்தது , செல்லும் வழி எங்கும் நிறைய கேரளத்து மக்களை பார்க்க முடிந்தது , பொதுவாக கேரளத்து மக்கள் ஐயப்பன் வழிபாட்டை அதிகமாக விரும்பி செய்பவர்கள் , அதிக ஈடுபாடு ஐயப்பனிடம் கொண்ட மக்கள் இங்கு பழனிக்கும் வெகு பிரியத்துடன் வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு சம்மந்தம் இரு கோயில்களுக்கும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தேன் , இடை இடையே நிறைய சித்தர்களை சித்தரிக்கும் சிற்பங்களும்  , புராண நிகழ்வுகளாக கருதப்படும் சில சம்பவங்களையும் நன்றாகவே சிலை வடித்து இருந்தார்கள் , இயற்கை அழகும் அதாவது லைட் வெளிச்சத்தில் பழனி நகர் நன்றாகவே  இருந்தது , ஒரு பதினைந்து நிமிடத்திலேயே சந்நிதானம் இருக்கும் மேல் தளத்திற்கு சென்று விட்டாயிற்று .

ஆச்சரியமாக இருந்தது , விஞ்சிர்க்கு ஒரு மணிநேரம் காத்து இருந்து பிறகு அந்த இடுக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு செல்வதை விட இப்படி ஆணை அடி வழியாக செல்வது எவ்ளவோ மேல் , மனதிற்குள் நன்றியும் சொல்லிக்கொண்டேன் எம்பெருமானுக்கு முதன்முறையாக என்னை பழநியம்பதியியல் வெகு சுலபமாக ஏற வைத்ததற்கு .

வழக்கம் போல் நூறு ரூபாய் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சிறப்பு தரிசனத்தில் நுழைந்தேன் , கூட்டம் அவளவாக இல்லை , இருந்தும் கருவறைக்கு செல்லும் பொழுது அர்ச்சகர்களின் கூட்டம் வந்து மொய்க்க ஆரம்பித்து விட்டது , அர்ச்சனை , அது , இது என்று பணத்தை வாங்குவதற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் , கவனம் முழுவதும் ஆதி சித்தரான  அய்யன் படைப்பான முருகபெருமானின் மீதே இருந்தது , அந்த கர்ப்பக்ரகத்தின் முன் சென்று முருகரை தரிசனம் செய்ய ஒரு பத்து நிமிடம் கூட அனுமதிக்கப்படவில்லை , மனது சிறிது கஷ்டப்பட்டது , ஐயனிடமும் முறையிட்டு விட்டு , அய்யன் நிர்விகல்ப்ப சமாதியில் அமர்ந்த அமர்ந்து கொண்டு இருக்கின்ற இடம் நோக்கி மனமும் கால்களும் தானாக சென்றது , கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது , சுவர்களில் அங்கும் இங்கும் வரைந்து வைத்திருக்கும் சிற்ப்பங்களை பார்த்துக்கொண்டே சென்றேன் , அய்யன் அமர்ந்த இடத்தை அடைந்தவுடன் விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு நினைத்துக்கொண்டேன் அய்யன் அருள் முழுமையாக இந்த விபூதிஎன் வாயிலாக கிடைத்தது என்று , வெளியில் வரும் பொழுது அய்யன் நிவிகல்ப்ப சமாதியில் அமர்ந்து இருப்பது போன்று ஒரு சித்திரம் வரையப்பட்டு இருப்பது மிகவும் என்னை கவர்ந்தது , அப்படியே படத்தில் உள்ள அவர் பாதகமலங்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன் , ஏதோ ஒரு உணர்வு என்னை மீண்டும் அந்த படத்தை பார்க்க வைத்தது , பார்த்தல் ஆச்சரியம் மெத்த , அந்த படத்தின் மேல் இன்னொரு மனித வடிவில் சாதாரணமாக நாம் சித்தரித்து வைத்திருக்கும் சித்தர்களின் உருவத்தை போன்று ஒரு முகம் நீண்ட நாசிஉடனும் , நீண்ட தாடி , மீசை , தீர்க்கமான கண்களுடனும் காட்சி அளித்தது , எனக்கு மிக்க ஆச்சரியம் , நாயை விட கேவலமான எனக்கா இதைப்போல ஒரு காட்சி , என்ன தவம் செய்தோனோ இந்த காட்சி கிடைப்பதற்கு என்று கண்கள் தானாக குலங்களாக ஆரம்பித்து விட்டது , அதற்க்கு மேல் அந்த இடத்தை விட்டு நகர முடியுமா என்ன , அப்படியே அங்கேயே உட்கார்ந்து விட்டேன் . இதோ அந்த படம் கீழே. படம் பிடித்தது ஓரளவிற்கு விழுந்தது , என் மொபைலில் பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக இருக்கிறது .



சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து இன்னொரு படத்தை பார்த்தால் அய்யன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ஏதோ பேசுவதைபோல் இருந்தது அந்தப்படம் , மிக்க ஆச்சரியம்  இந்த குப்பைக்கும் இவ்வளவு கருணை காட்டுவார்களா என்று . அங்கேயே உடல் , ஆன்மா , ஆவி , அனைத்தையும் அய்யன் பதத்தில் சரண் அடித்துவிட்டேன் . இதோ அந்த படமும் கீழே .


பக்கத்தில் சிறிது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு கண்களை மூடி ஐயனை பிரார்த்தித்து விட்டு அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டேன் , நேரம் வெளியில் வெகு விரைவாக ஓடிக்கொண்டு இருந்தது போலும் , ஏதும் புரியவில்லை , மூளையில் வலப்புறம் ஒருவிதமான உணர்வு பெருகிக்கொண்டு இருந்தது , அது இதைப்போல என்று வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை , பிறகு மெல்ல கண்களை திறந்து , ஐயனை மீண்டும் தொழுது , நடக்க ஆரம்பித்தேன் , உடல் என்வசம் இல்லை , முழு உடல் எடையும் முற்றிலுமாக குறைந்தது போல் இருந்தது , நான் நடக்கிறேனா அல்லது மிதக்கிறேனா என்றே தெரியவில்லை , மிக புதுமையான விவரிக்கமுடியாத அனுபவம் அது , மனம் என்ற ஒன்றும் இல்லை , ஏன் நான் சுவச்சிகிறேனா இல்லையா என்றே தெரியவில்லை , அய்யன் அருள் முழுமையாக கிடைத்தது போல் ஒரு உணர்வு .

மெல்ல முன்னேறி நடந்து வந்தால் எதிரில் தங்க தேர் உலா , முகரின் அற்ப்புத ஓளிமயமான காட்சி கண்டு கீழ் இறங்கி வந்தேன் மீண்டும் என்முன்கர்மபலனை இந்த உலகில்  அனுபவிக்க .

பழனி - 3


பழனிக்கு மூன்றாவது முறை சென்றது எந்த வித முன்னேற்பாடோ அல்லது பிளான் செய்தோ செல்லவில்லை , நண்பர் பட்டினத்தார் பரம்பரையில் தீக்ஷை பெற்ற விரிவுரையாளர் பிரதீப்புடன் திடீர் என்று சென்ற பயணம் , அன்று நாங்கள் சுருளி மலையில் சந்திப்பதாக இருந்தோம் ஒரு சில காரணங்களால் (பின்னர் மற்றுமொரு சுருளி மலை அனுபவத்தில் பகிர்ந்து கொள்கின்றேன் அங்கு ஏற்பட்ட அனுபவங்களை ) திடீர் என்று பழனி செல்லும் நிலை ஏற்பட்டது , சமார் நான்கு மணிக்கு நாம் கம்பம் பகுதியல் இருந்து பழனியை நோக்கி புறப்பட்டோம் , இரவு சுமார் ஒன்பது முப்பதுக்கு பழனியை சென்று அடைந்தோம் , இரவு கோயிலுக்கு செல்ல முடியவில்லை , சிறிதும் எதிர்பாரா விதமாக அங்கு தங்க வெடிய சூழ்நிலை , தங்கினோம் , காலை மணி சுமார் எட்டிற்கு மலை மேல் சென்று அடைந்தோம் .......

நேராக அய்யன் நிர்விகல்ப்ப சமாதிக்கு சென்றோம் , நாங்கள் உள் நுழையும் போது இருந்த கூட்டம் , அய்யன் சமாதிக்கு நேர் எதிருக்கு செல்ல செல்ல முற்றிலுமாக குறைந்து யாருமே இல்லாத சூழ்நிலை , அங்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் , நான் மற்றும் நண்பர் பிரதீப் , எங்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான அனுபவம் , உடல் முழுவதும் காந்தித்தல்லியது , ஒருவித உஷ்ணம் எப்படி விரவிப்பது என்று தெரியவில்லை , நண்பர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டார் , எனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை , வேறு விஷயத்தை  நினைத்து பார்க்க முடியவில்லை , முழு அமைதி , அப்படியே இருவரும் நின்று விட்டோம் ,, நண்பர் பிரதீப் வாங்கிக்கொண்டு வந்த பூ அய்யன் சமாதிக்கு சாத்தப்பட்டது , சிறிது நின்று கொண்டு இருந்த எங்களுக்கு அந்த அர்ச்சகர் சென்று அபிஷேக பாலை கொண்டு வந்து கொடுத்தார் , பிறகு முதன்முதலாக அய்யன் பெயர் போட்ட அந்த பிரசாத கவரில் சமாதியில் வைத்து விபூதியும் , குங்குமமும் கிடைத்தது , மனதிற்கு முழு நிறைவாக இருந்தது , இதுவே போதும் போல் இருந்தது , வேறு எங்கும் நகர கூட விருப்பம் இல்லாமல் அய்யன் சமாதிக்கு உள் நுழையும் வழியில் நின்று விட்டேன் , சிறிது நேரம் கழித்து நண்பர் முருகரின் சன்னதிக்கு வருமாறு அழைத்து சென்றார் .
நண்பர் கோயில் ஊழியர் மூலமாக உள்ளே சுலபமாக முருகன் சன்னதிக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்தார் , நான் என்னமோ ஓரு நிமிட சிறப்பு தரிசனம் தான் என்று நினைத்து கொண்டு இருந்தால் , காலை அபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் முன்னே உட்கார வைக்கப்பட்டோம் ( அன்ற ஞாயிற்று கிழமை அதுவும் அன்று ஏதோ ஒரு மந்திரி கோயிலுக்கு வந்து இருந்தார் ), எனக்கு பயங்கர வியப்பு , சென்ற முறை சரியாக நின்று பார்க்க முடியவில்லயே என்று ஐயனிடம் வைத்த வேண்டுகோள் நன்றாகவே இந்த முறை நிறைவேற்றி வைத்துவிட்டார் யாரையும் கைவிடாத போக பெருமான் , அபிஷேகம் ஆரம்பித்தது , நவ பாஷான சிலையில் வைத்து விபூதி முதல் கொண்டு அனைத்தும் சுடச்சுட கிடைத்தது , நன்றி சொல்வதா அல்லது அவரின் கருணையை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை . முழு ஆசீர்வாதம் கிடைத்ததாக நினைத்துக்கொண்டு வெளியில் வந்தோம் .
 
கீழ் இறங்கி , தன்னாசி அப்பர் கோயில்லை விசாரிக்க ஆரம்பித்தோம் , ஓவ்வொருவரும் வேறுபட்ட வழியை சொன்னார்கள் , சிலர் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர்  சிலர் , நாற்பது கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர்  , என்ன என்று புரியாமல் திரும்பி சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்த பொழுது அவர் வெகு அருகில்; ஒரு இடத்தை காண்பித்து அங்கு சென்று பாருங்கள் அதுவாகத்தான் இருக்கும் என்றார் , , நண்பர் பிரதீப் காரிலேயே உட்கார்ந்துக்கொண்டு , என்னை அதுதான என்று பார்த்து அதுதான் என்றால் கூப்பிடவும் என்று கூறிவிட்டு காரில் இருந்தார் , நான் உள் சென்று பார்த்தேன் , எப்படி சொல்வது என்று தெரியவில்லை , அப்படி ஒரு மெய் சிலிர்ப்பு , வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்த இடம் , நண்பரை உள்ளே வர அழைத்தேன் , இருவரும் உள்ளே சென்று அய்யன் மற்றும் அகத்தியரின் முன்னாள் அமர்ந்தோம் , சிறிது கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு , போட்டோ எடுக்க ஆரம்பித்தோம் , எனக்கு மிக்க ஆச்சரியம் , போட்டோ எடுக்கும் பொழுது அகத்தியரின் சிலைக்கும் அருகில் இருந்த விளக்குக்கும் நேராக ஒரு ஓளி நீண்டது , அப்படியே போட்டோவும்  எடுத்து ஆயிற்று . கிழே உள்ளது அந்த போட்டோ .
 

 சிறிது நேரம் கழித்து அர்ச்சகர் வந்து எங்களை மட்டும் உள்ளே சென்று உட்ப்ரகாரத்தை சுற்றி வர அனுமதித்தார் , சிறிது நேரம் அவர்களுக்கு அருகாமையில் உட்கார்ந்து செல்லவும் சொன்னார் .

இந்த இடத்தில் தான் ஐயனுக்கு , அகத்தியமுனி நவபாஷான சிலை செய்வதற்கு ஒரு சில முக்கிய டிப்ஸ்களை கொடுத்தாராம் , இங்கே ஒரு சுரங்கம் இருப்பதாகவும் சொன்னார்கள் ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது ஐயனின் ஆட்சி இன்றும் அங்கு நீக்கமற நிறைந்து உள்ளது , வெளியில் வர மனதே இல்லை , யாரவது சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் குதிக்க ஆசைபடுவார்களா என்ன ? ஹ்ம்ம்ம் , நாங்கள் வந்தோம் அய்யன் இருக்கும் சொர்க்கத்தில் இருந்து இந்த வேறு ஒரு உலகத்திற்கு நம்பிக்கையுடன் , அவர் எங்களுடனே இருப்பதை உணர்ந்துக்கொண்டு .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவை உலகில் தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் படிக்க நேரிடும் , அப்படி படிப்பவர்கள் , பழனிக்கு நேரில் சென்று வர இயலாமலும் இருக்கலாம் , அப்படி முடியாதவர்கள் தயவு செய்து தங்களின் முழு விலாசத்தை இங்கு பதியவும் , அவர்களுக்கு கட்டாயமாக பழனி விபூதி பிரசாதம் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் .

என்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது அவ்வளவே .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எடுப்பதை விட கொடுப்பதில் ஆனந்தம் / திருப்தி அதிகம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி

20 comments:

  1. Hi, Your Experiences are really Great. You have got HIS total Grace... Pray for us to get such grace some day in any of our lives.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. Great article!!Awesome pictures- very realistic!!

    ReplyDelete
  3. R.RAJASIVAN
    67 rue Julian Grimau
    93700 Drancy FRANCE

    Nandri

    ReplyDelete
  4. R.RAJASIVAN , PLS MENTION YOUR PHONE NUMBER TOO , SO THAT THERE WILL NOT BE ANY CONFUSION WHILE DELIVERING THE PRASADHAM.

    ReplyDelete
  5. pirapanjam pathl sollum bhogar anumatithal anuppavum.

    nandri

    ReplyDelete
  6. Dear Friends ,

    I got only one persons address , guezz no others are intrested to recv the viboothi prasadham , if any one wants to keep confidential about their address and phone number pls send their info to my personal e-mail I.D. as follows : san_bright@yahoo.co.in .

    dear rajasivam sir , pls re-confirm your address is correct and proper , the prasadham will be deliver to your address latest by coming wednesday the parcel will contain , pazhani abhisheka viboothi+ sandhanam and oadhimalai murugar viboothi prasadham and sadhuragiri abhisheka viboothi .

    pls note , it's purely a service , just to share gud blessed things with every one in the world .

    ReplyDelete
  7. அன்புள்ள போகரே ,

    அருமையான தொண்டினை செய்கிறீர்கள் .
    தங்களின் பதிவினை படிக்கும் போதே மெய்சிலிர்கிறது . இது உண்மை தான்
    சித்தர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார்கள் என்பதற்கு தாங்களே உதாரணம் .

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  8. R.RAJASIVAN
    67 Rue Julian Grimau
    93700 Drancy
    FRANCE
    +33148354723

    Prasaadam Ethirpaakirein

    Nandri

    ReplyDelete
  9. Ramkumar Rengamani
    ASK.COM 343 Thornall St
    STE 730
    Edison NJ 08837
    United States
    mobile: 732-997-8481

    ReplyDelete
  10. Iyya Prasaadam kedaithathu
    Nandri

    Sithar panithodara vazhthukkal

    ReplyDelete
  11. /// யாரவது சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் குதிக்க ஆசைபடுவார்களா என்ன ///

    இந்த வரியில் என் கண் கலங்கியது ஏன்?

    ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    யாரறிவார் இந்த அகலமும் நீளமும்
    பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
    வேரறியாமை விளம்புகின்றேனே

    அருமையான உணர்பதிவு

    பகிர்ந்ததற்கு கோடி நன்றி ஐயா,

    ReplyDelete
  12. போகரின் சிடருக்கு, என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறென் பதிவுகள் அனைத்தும் அற்புதம் ஆன்மிகத்தை அள்ளி கொடுக்கும் அமுத சுரபி.

    ReplyDelete
  13. Sir,

    Please post the article about Suruli Malai.I am from Cumbum and i am eagerly waiting for the update.Please Please Please share those information.

    ReplyDelete
  14. Dear Sir,

    Please be good enough to send be the Vibhoothi prasaadam. I know this request comes after too long but if possible please send.
    Thanking you
    Kumaraguru

    ReplyDelete
    Replies
    1. Dear Mr. Guru ,

      Pls post your address , i'll try to send you as soon as possible.

      Delete
  15. M . Lakshminarasimhan,
    No47, eb colony,
    Tvs nagar,
    Coimbatore-641025.

    ReplyDelete
  16. Dear sir
    No words to say about your experience I am working in Egypt
    Last september I visited palani to see the bhogar ayya and I was having wonderful experience I sit in the place inside itself I feel very pleasant experience and I come down by winch and my wife called from chennai and tell me to have food in time there are good hotels I told OK OK after go down I will try but my mind feel not too eat in hotels I decided to go to busstand without eat but something pull me to go to padhavinayagar temple and I went there from the winch station
    In front of padhavinayagar my mind tells search for pulipani chitthar ashram am then I asked a flower seller next to the vinayagar temple after i walk some he told just open this gate and enter. I told it is closed he replied no problem enter it and he left. Slowly I open the gate I entered really I wondered there the all sadhus are sitting in the line for annadhhanam poojs is going the madadhibathi was standing and called me come in come in straight inside
    Really didn't expect this .then I gone inside there were seven peedam.then they did all poojas I was mesmarised and I was standing speechless then the madadhipathi called me and blessed and give prasad and told me to eat and leave
    This may be small incident but one man there was sit with me to eat and after eat I will take you some place u have to come with me
    I went with him he took me to the bramha theertham where there is an ancient temple where the Brahma siva vishnu moorthys sit on their vehicles in separate moorthys. This is wonderful thing we cannot see any where like this Siva parvathy sit on kalai vishnu sit ongaruda and Brahma sit on annam
    All are seperate moorthys
    I am really blessed on that day by ayya agathir and bhogar

    If possible send the prasadham to my chennai address I will collect from there
    K saravanan
    154, Revathypuram 4 the main, iyyanchery ,Urapakkam,chennai 603210 kancheepursm dt

    ReplyDelete
  17. அய்யா நீங்க சொல்லும்போதே என்னால இது போல வரவும்முடியல அனுபவிக்கவும் முடியலனு வருத்தமா இருந்த்சு ஆனால் இறைவன் திருவடி ல் இருந்து தாங்கள் விபூதி அனுப்புவது மூலம் அந்த இறைவனே என்னை தேடி வருவதாக நினைக்குறேன் எங்களுக்கும் இறைவன் உங்கள் மூலமாக அணுகிறகம் செய்து இருக்கார் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் தொண்டு இறை கண்ட

    உமது பாதம் பணிகிறேன் அய்யா நன்றி
    v.selvan s/o s.vellapandian
    3/2kali amman kovil street
    thippanam patti-627808
    tenkasi-t.k
    thirunelveli-d.t cell 9894912116,9942214714

    ReplyDelete
  18. v.selvan, s/o s.vellapandian
    3/2 kaliammankovil street
    thippanampatti-627808
    tenkasi-t.k
    tirunelveli-d.t cell;9894912116,9942214714

    ReplyDelete
  19. மிக்க நன்றி.
    மிக அருமை
    தாங்கள் உணர்ந்த உணர்வுகளை/ அனுபவத்தை எங்களையும் உணரச் செய்திருக்கிறீர்கள். நானும் கலங்கி மெய் சிலிர்த்து அய்யனின் அருள் உணர்ந்தேன்.
    மீண்டும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete