Monday, February 6, 2012

பொதிகை மலை - அகத்தியர் 4

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------

அடுத்த நாள் , வழக்கம் போல நான் எல்லாருக்கும் அப்பறம் late ஆதான் எந்திரிச்சேன் , கூட வந்த நண்பர்கள் என்ன ரெடி பண்ணி கூட்டிட்டு போறதுக்கே , மணி 7 ஆகிடிச்சு .

இந்த முறை மலை ஏறுவது என்பது துடக்கம் முதலே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது , நல்ல அடர்ந்த காடு , அங்க அங்க நிறைய மரங்கள் உடஞ்சி பாதைல குறுக்க விழுந்து இருந்துது , எல்லாத்தையும் எகிறி குதிச்சிதான் போகணும் , இல்லனா கீழ குனிஞ்சி போகணும் , நல்ல ஏத்தம் ஒவ்வொரு முறையும் இரண்டு அடி உயரம் எடுத்து வெச்சி போகணும் வழியும் ரொம்ப ஈர பதமா இருக்கு , ஈர பதம் இருக்கிற இடத்துல அட்டைகளும் அதிகமாதான் இருக்கும் , நம்ம கிருஷ்ணன் சாமி சுண்ணாம்பு எடுத்துட்டு போங்கனு சொன்னது இப்பதான் ஞாபகம் வந்தது , ஆனா ரொம்ப late அது , என்ன பண்றது எல்லாம் அகத்தியர் பாத்துக்குவாருனு ஏற ஆரம்பிச்சோம் , கொஞ்சநேரத்துக்கு எல்லாம் பாதையே சுத்தமா இல்ல , பெரிய பெரிய பாறைங்க தான் இருக்கு அது மேல தாவி தாவி தான் போகணும் . சுத்தி மூங்கில் , புள் ஒரு சில மரங்கள் அடர்ந்து இருக்கு அங்க அங்க யானை வந்துட்டு போன அடையாளம் வேற.

ஒரு அறை மணி நேரம் இருக்கும் கூட வந்த நண்பர்கள் வேகமா முன்னாடி போய்டாங்க , எனக்கு பயங்கர இருமல் வேற , இரும்பி இரும்பி தலை வலி பிணி எடுக்க ஆரம்பிச்சிடிச்சு , மேல் மூச்சு வேற பயங்கரமா இருந்துது , தனியாதான் ஏறிகிட்டு இருந்தேன் , அப்படி இப்படின்னு ஏறி பொங்கல் பாறைங்கற இடத்துக்கு போறதுக்கு சுமார் 1 .30 மணி நேரம் ஆகிடிச்சு , இங்கதான் கடைசியா தண்ணி நல்லா கிடைக்கும் , சிலர் குளிக்றாங்க பொங்கல் செய்து மேல அகத்தியர் சாமிக்கு படைக்றவங்க இங்க பொங்கல் பொங்கறாங்க , நாங்க அதிரமலைல இருந்த அன்னைக்கு எங்களுக்கும் பொங்கல் நிறைய கிடைச்சது , பஞ்சாமிர்தமும் கூட கிடைச்சது , அந்த தண்ணியோட சுவையோ என்னவோ அவ்ளோ அற்புதமா இருந்துது .

அபூர்வ மரத்துல இதுவும் ஒன்னு

ஏறும் வழி  !!!!!
ஈரப்பதம் நிறைந்த வழிக்கு ஒரு சின்ன உதாரணம் 

பொங்கல் பாறைல இருக்கிற ஒரு விநாயகர்
பொங்கல் பாறை

 இந்த இடத்துல இருந்து ஏறுவது என்பது மிக மிக சிரமமாதான் இருந்துதது , மொட்டை மலைகள் , அடர்ந்த சதுப்பு நிலம் போன்ற காடுகள் , நிறையவே கஷ்டபட்டுடோம் , கயிறு , கம்பின்னு தான் பிடிசிகிட்டு ஏற முடியும் , நாலுகால் பாய்ச்சல் தான் இந்த இடத்துல சாத்தியம் , போட்டோ பாத்தீங்கன்னா புரியும்னு
 நினைக்றேன் .

இவ்ளோ கஷ்டப்பட்டு ஏறி மேல போனா கிடைக்கும் பாருங்க ஒரு நிம்மதி , அப்பாடா , அகத்தியர நேர்ல பாக்கும் போது எல்லாம் எல்லாமும் மறந்து போய்டுது , ஏன் சந்தோஷம் கூட இல்ல அங்க , அப்படியே மேகத்துக்குள்ள இருப்போம் , அப்படி ஒரு chillness . மனச தனியா அடக்கனும்னு அங்க தேவை படவே இல்ல , blankness , ஒன்றும் இல்லா தன்மை , அதுகூட சொல்ல முடியாது , அது ஒரு விதமான நிலை இல்லாத நிலைன்னு தான் சொல்லணும் போல , போய் அனுபவிச்சு பாருங்க புரியவரும் , ரொம்ப நேரம் அப்படியே இருந்துட்டு , அங்க அபிஷேகம் பண்ண வந்த மத்த குழுவில இருந்த நண்பர்கள் கிட்ட நாங்க எடுத்துட்டு போன பன்னீர குடுத்தோம் , ஆச்சரியம் நீங்களே பண்ணுங்கனு சொன்னாங்க , உடனே கைல இருந்த விபூதிய அவரோட சிரசுல வெச்சு  அப்படியே கைல பன்னீர எடுத்து ஊத்தும் போது இருக்கே ஒரு உணர்வு , இதுக்காகவே இன்னொரு முறை போகணும்னு தோணுது , அவ்ளோ ஒரு pleasure , amazing and unrevealed  feeling , அனுபவிச்சா மட்டுமே உணர முடியும் , நம்ம கூட வந்த சிவாவுக்கு இன்னும் பெரிய பாக்கியம் சந்தன அபிஷேகம் பண்ணாரு . 
அபிஷேகம் எல்லாம் முடிச்சு தெரிஞ்ச அளவுக்கு அவரோட உடம்பு முழுக்க சந்தனம் பூசி ஆரத்தி காமிக்க போனாங்க , குங்குமம் மிஸ்ஸிங் , அதையும் கேட்டு வாங்கி நானே அவருக்கு போட்டு வைக்கும் போது அப்படியே உடம்புல ஒரு அதிர்வு , wow  கூட சொல்ல முடியல அந்த உணர்வுக்கு , கண்டிப்பா இது எல்லாருக்கும் கிடைக்குமுங்க , போய் ஒரு முறையாவது அனுபவிச்சிட்டு வாங்க , குடும்பம் , ஆபீஸ் , உலகம் , மக்கள் , பணம் , அது இது எதுவும் மனசுல இல்ல அந்த இடத்துல , அப்படியே குப்பையா இருந்த மனச பெனாயில் போட்டு கழுவி விட்டா மாதிரி இருந்துது .இதுக்கு மேல எனக்கு எப்படி நல்ல சொல்றதுன்னு தெரியல , எனக்கு தெரிஞ்ச வார்த்தைல சொல்லி இருக்கேன் அவ்ளோதான் . ஒரு குப்பைய அவருக்கு குங்குமம் வெக்க அனுமதிக்ரார்னா , அவர் எவ்ளோ பெரிய ஞானி , இந்த வார்த்தைலாம் சும்மா , நீங்களாவே புரிஞ்சிகோங்க , அவ்ளோதான் .
  
மேல அகத்தியர் ஐந்தல பொதிகை பாத்தா மாதிரி இருக்காரு , அங்க தான் அவரோட சீடர்களுக்கான வகுப்புகளை எடுத்ததாம் , நமது நண்பர் ஒருவர் சென்று வந்து உள்ளார் , அவர்கள் அமர்ந்த ஆசனங்கள் எல்லாம் இன்றளவும் சிறிது சிதைந்த நிலையியல் அப்படியே இருக்கிறதாம் , மேலும் நாக பொதிகை இன்றளவும் யாரும் செல்ல முடியாதாகவே இருக்கிறது .
 
அப்படியே அதே உணர்வோடயே கீழ வந்தோம் . திரும்ப அதிரமலை , அங்க இரவு தங்கிட்டு , காலைல கீழ இறங்கி வந்தோம் .

ஹ்ம்ம்ம் திரும்ப எப்போ அந்த நிலைக்கு போகப்போறோம் , அப்படியே நினச்சு பாக்கும் போதெல்லாம் உடம்பு கூட மறந்து போய்டுது .

முடிஞ்சவங்க போய்ட்டு அனுபவிச்சிட்டு வாங்க , இந்த மலைக்கு போய் சித்தர்கள் என்ன பண்றாங்க , ஊருக்குள்ளயே எல்லாம் இருக்கு , எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் , நான் ஊருக்குள்ள இருந்தே எல்லாத்தையும் பண்ணுவேன் அப்படி இப்படின்னு சொல்ல்றவங்களுக்கு எல்லாம் அங்க போயிட்டு வந்த பிறகு ஒரு நல்ல விடை கிடைக்கும் , விடை மட்டும் இல்ல அனுபவ பாடம் கிடைக்கும் .

கயிறு பிடிச்சுட்டு ஏறும் இடம்

அபிஷேகம் முடிஞ்ச பிறகு குரு முனி 


ஐந்தலப்பொதிகை






இதுக்கு மேல என்ன வேணும் , இது வெறும் சிலைன்னு நினைக்றீங்களா , நினைக்கதான் முடியுமா ?


பாத்துகிட்டே இருக்கலாம் 



நாலுகால் பாய்ச்சல்
இந்த போட்டோவ மட்டும் கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க எத்தனை சித்தர்கள் அங்க இருந்தாங்கன்னு தெரியவரும் மத்த போட்டோளையும்  பக்கத்துல ஊதுபத்தி எறிஞ்சிட்டு இருந்துது , ஆனா அதுல எந்த புகையும் சூழல , ஆனா இத எடுக்கும் போது முழுக்க புகை அதில பல காட்சிகள் சாட்சிகளாக .

 ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------



Sunday, February 5, 2012

பொதிகை மலை - அகத்தியர் -3

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


மதுரை நண்பர் என்மீது மோதி நின்றார் , மோதிய வேகத்தில் நான் சிவாவின் பக்கம் சாய அவர் என்னை தாங்கி பிடித்து கொண்டார் , சிறிது நிதானத்துடன் , நண்பரும் நானும் பார்வையை கூர்மை ஆக்கிக்கொண்டு சத்தம் வந்த இடத்தை பார்த்தோம் .
ஒரு கரும் குரங்கு , எங்களை பார்த்து மிரண்டு போய் மிரட்டிக்கொண்டு இருந்தது , அதை பார்த்த பிறகு தான் அப்பாடா என்று நிமதி மூச்சே விட முடிஞ்சுது , வழி நெடுக யானை லத்தியை பார்த்த எங்களுக்கு அந்த ஞாபகமே முழுமையாக இருந்ததால் யானை என்றுதான் நினைக்க தோன்றியது , நாங்கள் இவ்வளவு பெரிய வனத்தில் பார்த்த ஒரே குரங்கு இதுதான் , ஏறும் போதும் சரி , இறங்கும் போதும் சரி இந்த ஒரே ஒரு குரங்கு தான் கண்ணில் பட்டது , ஆனாலும் பயங்கர பீதியை கிளப்பிட்டு போய்டுச்சு . அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் , அகத்தியர் சாமி அருளோட ஏறுறோம் அவர் நம்மள கை விட்டுடுவாரா என்ன ? நினச்சு பாக்கும் போது எனக்கே கொஞ்சம் கூச்சமா இருந்துது , அகத்தியர் சாமிய நம்பி வந்துட்டு பயப்படலாமா என்ன , நீங்க யாராவது அங்க போனீங்கன்னா எங்கள மாதிரி தேவை இல்லாம பயப்பட வேண்டாம் , ஏன் யானையே வந்தாலும் பயம் வேண்டாம் , நம்மீது அகத்தீசர் அருள் போர்வை முழுமையா இருக்கு .

 சரி  இப்போ அதிரமலைக்கு ஏறுவோம் .

ஹ்ம்ம் , அருமையான சூழல் கொண்டது இந்த இடம் , ஆங்காங்கே ஈரப்பசை இருந்ததால் அட்டை பூச்சியை பற்றிய பயமும் இருந்தது , ஏறுவதற்கு சற்று சிரமமா இருந்தாலும் எங்கயும் உக்கார மனசு வரல , அப்படியே மேல் மூச்சு கீழ் மூச்சுமா ஏறினோம் , இப்படி மூச்சு வாங்கறதும் கொஞ்சம் நல்லதுதான் போல , மூச்சு வாங்க வாங்க ஒருவிதமான பச்சிலை காத்து உள்ள போகுது அதோட சேந்து அந்த மண் வாசமும் , மூச்சு ஒரு பக்கம் வாங்கினாலும் இது ஒரு பக்கம் ஆள கொஞ்சம் உற்சாகபடுத்தி வேகமா நடக்க வைக்குது , படிக்கறவங்க ஒரு முறை தயவு செய்து போயிட்டு வாங்க இந்த ஒரு அனுபவத்த நல்லாவே உணர முடியும் , இப்படியே நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு முக்கூடல் வருது ஒரு பெரிய மரம் அதுக்கு கீழ நகம் போல உருவம் , ஏன் வினயகர்னு கூட சொல்லலாம் அப்படி உருவத்துக்கு சின்ன கோயில் மாதிரி வெச்சி இருக்காங்க , அதுக்கு மேல பாத்தா அதிர மலைங்கற போர்டு , போட பாத்தா பிறகுதான் அப்பாடானு இருந்தது , கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது , காலைல 9 .45  இருக்கும் அப்பா ஏற ஆரம்பிச்சு கிட்ட தட்ட 2  மணிக்கெலாம் 14  கிலோமீட்டர் ஏறி வந்து இருக்கோம்னா , என்னால நம்ப முடியல , நண்பர்களுக்கும் அதே நிலை தான் , கிட்ட தட்ட எங்களுக்கு முன்னையும் பின்னையும் ஏற ஆரம்பிச்சவங்கள சேத்து 60  பேர் , இவங்க எல்லாரும் நாங்க வந்து சேர்ந்து இரண்டு , மூன்று மணி நேரம் கழிச்சு தான் வந்தாங்க, இத என்னனு சொல்றது , எனக்கு அவ்ளோ உடல் வலு இருக்கா என்ன , கண்டிப்பா இல்ல , இது முழுக்க முழுக்க அகத்தியரோட ஆசிர்வாதமே தவிர வேற ஒன்னுமே இல்ல , நம்பினார் கை விடப்படார் , அவ்ளோ தான் .

முக்கூடல் அதிரமலை கேம்ப் ,ஏக பொதிகை ஏறும் வழி , கீழே செல்லும் வழி


forest canteen , சீசன் நேரத்தில் மட்டும்

தங்கும் விடுதி  - அதிரமலை

அதிரமலை காம்பில் இருந்து ஏக பொதிகை,நக பொதிகை,ஐந்தல பொதிகை


அதி காலை வேலையில் பொதிகை





அதிரமலை வந்ததும் forest dept  வெச்சி இருக்கிற ஒரு canteen  அப்பறம் யாத்ரீகர்கள் தங்க ஒரு பெரிய கட்டிடம் சுமார் 250 படுக்கற மாதிரி இருக்கு , இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னனா , கிட்ட தட்ட ஒரு 15 ல இருந்து 20 கழிப்பறை மற்றும் குளியல் அறை இருக்கு , இத septic  tank எல்லாம் வெச்சி பக்காவா பராமரிகறாங்க , பாக்கும் போது அந்த வனத்துறை இலாக்காவ பாராட்டாம இருக்க முடியல , அந்த கேரளா மக்களும் ரொம்ப நல்ல மனுஷங்க , கழிப்பறையை மட்டுமே பயன் படுத்துறாங்க , காத்தாட அப்படி இப்டின்னு எங்கயும் வெளியல அசிங்க படுத்தல , கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது , ஆஹா நாம போற சதுரகிரில இத மாதிரி இருந்த எவ்ளோ நல்ல இருக்கும்னு தான் தோனுச்சு , இது மட்டும் இல்லாம வர வழி முழுக்க அங்க அங்க மூங்கில் கூடை , குப்பையை போடறதுக்காக வெச்சி இருந்தாங்க , மக்கள் அங்கயும் சரி சரியாய் குப்பய போடறதுக்கு அதா மட்டும் தான் பயன் படுத்தறாங்க , ரொம்ப நல்ல ஒரு நடை முறை நல்ல ஒரு ஒழுக்கமும் கூட , இது மாதிரி சதுரகிரி இருந்ததுனா , நினைக்கும் போதே நல்ல இருக்கு , எல்லாம் மகாலிங்கத்துக்கு தெரியாதா என்ன .

நல்ல பசி , சாப்பிடலாம்னு கான்டீன் உள்ள நுழைஞ்சோம் , ஒரு சாப்பாடு ரூபாய் 75 /- , அந்த இடத்துக்கு அத குடுக்கலாம் , நல்லாவே இருக்கு , கூட்டு பொரியல் , சாம்பார் , ரசம் , என்ன சாப்பாடுதான் கேரளா அரிசி , பாக்கதான்  மொச்சகொட்ட சைஸ்ல இருக்கு , சாப்பிட்ட நல்லாதான் இருக்கு. சாப்பிட்டுட்டு அல்லுக்கொரு பாய் அங்கையே வாங்கிகிட்டோம் , ஒரு பாய் ரூபாய் 5 /- , திரும்ப இறங்கும் போது குடுத்தா போதும் . பெரிய ஹால் இருக்கு அதுல போயிட்டு பாய விரிச்சி படுத்தோம்னா போதும் அடுத்த நாள் காலைல தான் எந்திரிப்போம் , குளுருக்கு நல்ல கதகதப்பான இடம் , நல்ல அகத்தியர் இருக்கிற ஏக பொதிகையை பாத்தா மாதிரி இருக்கு ,கேம்ப்  சுத்தி அகழி வெட்டி விட்டு இருக்காங்க , யானை , கரடி , காட்டெருமை , காட்டு பன்னி எதுவும் உள்ள திடுதிப்புன்னு வர முடியாத அளவுக்கு , நல்ல ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் .இதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம் அந்த இடம் சீசன் அல்லாத நேரத்துல எப்படி இருக்கும்னு .

இந்த காம்ப்ள இருந்து மேல ஏக பொதிகை ஏறனும்னா 6 .5  கிலோமீட்டர் , நாங்க கணக்கு போட்ட படி ஏறனும்னா 2  மணி நேரம் போதுமானதாக இருந்தது , ஏன் என்றால் வந்த 14 கிலோமீட்டர் ஏற நான்கு மணி நேரம் மட்டுமே , தேவை பட்டது பாதிக்கு பாதி கூட இல்ல , இரண்டு மணி நேரம் அதிகபட்சம் என்றுதான் நினைத்தோம் , நடந்தது வேறு .

நாளைக்கு பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------

Saturday, February 4, 2012

பொதிகை மலை - அகத்தியர் - 2

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


முதல்ல என்கூட கிட்டத்தட்ட பத்து பேர் வரர்தா இருந்துது , கடைசில யாருமே வரமுடியாத சூழ்நிலை , நாம அக்னிலிங்கம் க்ரூப்ல இருந்து சிவா மட்டும் கால் பண்ணி இருந்தாரு , கண்டிப்பா வரதாவும் சொன்னாரு , நானும் கேரளாவுக்கு போன் பண்ணி கேட்டேன் , அங்க யாரும் சரியான பதில் சொல்லல  , அதாவது நாங்க அகஸ்தியர் கூடம் போறதுக்கு permission கிடைக்குமா கிடைகாதானு தெளிவா யாரும் சொல்லல .

நண்பர் ராம் குமார் போன் பண்ணி சொன்னாரு , மனுஷங்களா நம்பாதபா , அகத்தியர நம்பி போன்னு , சரின்னு சிவாவுக்கு கால் பண்ணி சொன்னேன் , அவரும் அதான்  சரின்னு 24 ஜனவரி அவர் சென்னைல இருந்தும் நான் திருப்பூர்ல இருந்தும் கிளம்பினோம் , இதற்க்கு நடுவில் இன்னொரு நண்பர் , புதுசா guide  மாதிரி ஒரு வேலை ஆரம்பிச்சி இருக்காரு அவரும் வரேன்னு சொல்லி மதுரைல இருந்து கிளம்பினார் .

அப்பறம் இந்த இடத்துல ஒருத்தருக்கு கண்டிப்பா நன்றி சொல்லணும் , கிருஷ்ணன் சாமி , இந்த முல்லைபெரியார் பிரச்சனையால கொஞ்சம் பயமா தான் இருந்தது கேரளா போறதுக்கு , கிருஷ்ணன் சாமிக்கு போன் பண்ணி கேட்டேன் , மனுஷர் பக்காவா தைரியம் குடுத்தாரு , ஒரு பிரச்னையும் இங்க இல்ல எல்லாம் ஊடகங்கள் பண்ற வேல , நீங்க தைரியமா வாங்கன்னு சொன்னாரு , அதுவும் இல்லாம மலை ஏறும் போது என்ன என்ன எப்படி எபடின்னு நல்ல அறிவுரையும் சொன்னனாறு , இங்க போறதுக்கு அவரோட வார்த்தைகளும் நல்ல தெம்பு குடுத்துச்சு , இந்த தொகுப்பை அவர் பார்க்க நேர்ந்தால் " சாமி ரொம்ப நன்றி , நன்றிகள் கோடி " .
திருவனந்தபுரத்துல ஜனவரி  25   கிட்டத்தட்ட 9 மணிக்கு அந்த forest ஆபீஸ் போயிட்டு காத்திருந்து வார்டன் வந்த பிறகு அவர பத்து பேசினோம் , மனிதர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு , ஒ.கே.சொல்லிடாபோல , permission   கிடைச்சு அந்த ரூமைவிட்டு வெளிய வந்தா , நம்ம அகத்தியர் வெள்ளை கலர்ல இருக்காரு , நான் கூட அத கவனிக்கல , நம்ம சிவாதான் காட்டினாரு . அப்பா அந்த செகண்ட்ல நண்பர் ராம்குமார் சொன்ன வார்த்தை தான் திரும்ப திரும்ப வந்தது , மனுஷன நம்பாதப்பா , அகத்தியர நம்பி போ பா . அப்படியே அகத்தியர் அங்கவே ஆசீர்வாதம் பண்ண மாதிரி இருந்துது .

Warden  Mr . Jaikumar Sharma ( Kerala wildlife & Forest )

அகத்தியர் @ கேரளா Forest office 

Forest ஆபீச்ல இருந்து வெளிய வரும்போது மணி 11 .30  ஆகிடிச்சு , எங்களுக்கு permission கிடைச்சது ஜனவரி 26 , ஒரு முழு நாள் கைல இருந்துது , சரின்னு பஸ் ஏறி விதுராங்கற இடத்துக்கு போயிட்டு lodge புக் பண்ணிட்டு complete rest .

அடுத்த நாள் காலைல எங்களுக்கு bonacad  போறதுக்கு  ஆறு மணிக்கு பஸ் , அத விட்டா அடுத்த வண்டி 10 மணிக்கு , நாங்க bonacad Forest செக் போஸ்ட்ல ஒன்பது மணிக்கு இருக்கணும் அப்படி இல்லனா 10  மணி அதிகபட்சம் , அதுக்கு அப்பறம் அவங்க மலை  மேல ஏற விட மாட்டாங்க ,ஏன்னா குறைஞ்ச பட்சம் போனகாடுல இருந்து அதிரமலை போறதுக்கு 14 கிலோமீட்டர் . அதிரமலைல தான் தங்கற இடமும் சாப்பாடும் கிடைக்கும் , இந்த பதினாலு கிலோமீட்டர் நடகர்துக்கு குறைஞ்ச பட்சம் ஏழு மணி நேரம் கணிச்சி வெச்சி இருக்காங்க , மாலை நாலு மணிக்கு மேல யானைங்க சாதாரணமா கீழவரர்தால அந்த நேரத்துல காட்டுல நடக்க அனுமதி இல்ல , மேட்டர் என்னனா கூட வந்தா ரெண்டு பேரும் அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிச்சு டைமுக்கு கிளம்பிட்டாங்க , நான் நல்லா தூங்கிட்டேன் , எந்திரிச்சதே ஆறு மணிக்கு தான் கீழ போய் பாத்தா பஸ் போய்டுச்சு , சிவாவும் இன்னொரு நண்பரும் என்ன திட்ட ஆரம்பிச்சாங்க பாருங்க நல்ல திட்டி முடிச்சிட்டு விதுரா பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு லாரிய பிடிச்சி போனோம் , சரி பஸ் போய்டுச்சு ஆட்டோ விசாரிக்கலாம்னு போனா யாரும் வர மாட்டேன்னு சொல்லிடாங்க , அப்படியே நொந்து போய் ஒரு மூணு மூளை ரோடுல போய் நின்னு பாத்தா , தவற விட்ட பஸ் திரும்ப வந்து நிக்குது , இந்த இடத்துல சத்தியமா சொல்றேன் அகத்தியரோட அருள நினச்சு பாக்காம இருக்க முடியல ,அந்த பஸ் மட்டும் திரும்ப வரலைனா அன்னைக்கு அந்த முழு யாத்திரையும் முடிஞ்சு போய் இருக்கும் .

கிட்ட தட்ட 9 மணிக்கு bonacad பஸ் ஸ்டாண்ட் போய் இறங்கி , ரப்பர் மற்றும் தேய் இலை தோட்டம் வழியா நடக்க ஆரம்பிச்சோம் , ஒரு van போற அளவுக்கு பாதை இருக்கு , ரப்பர் மரத்துல ஊடு பயிரா மிளகு போட்டு இருக்காங்க ,நல்ல அருமையான climate , அப்படியே ரசிச்சிகிட்டே 4 கிலோமீட்டர் நடந்ததே தெரியல ,காரணம் என்கிட்டே ஒரே ஒரு குட்டி பை தான் இருந்தது எல்லா வைட்டும் மற்ற இரண்டு நண்பர்கள்கிட்ட .

rubber tree

on the way , bonacd bus stand to bonacad forest office




bonacad forst office entrance or agasthiyar koodam entrance

வன இலாக்கா அலுவலகத்துல recipt குடுத்தோம்ன , சரி பாத்துட்டு , நம்ம பைல பீடி , சிகிறட்டு , தேவை இல்லாத பிளாஸ்டிக் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு நம்மள உள்ள அனுப்புவாங்க , ரொம்ப நல்ல சிஸ்டம் .

அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சோம்ன ஒரு மணிநேரத்துல ஒரு அருவி , நல்ல சுத்தமான தண்ணி சில்லுனு இருக்கு , வழி பாத்தீங்கன்னா , மேடு நிறைய கிடையாது , சுலபமா ஏறலாம் , ஆனா அடர்ந்த வனம் பெரிய மரங்கள் விதவிதமான மூலிகை வாசனைகள் அதனுடன் வழிநெடுக யானை லத்திகள் , இதை பாத்தே தெரிஞ்சிக்கலாம் அங்க எந்த அளவுக்கு யானை நடமாட்டம் இருக்குன்னு , நம்ம சதுரகிரில தனிப்பாரை வழியா போகும் போது ஒன்னு ரெண்டு இடத்துல லத்திய பாத்தாலே பீதிய கிளப்பும் , இங்க வழி முழுக்கவே அதான்.  


அப்படியே கொஞ்சம் தூரம் நடந்தா கொஞ்சம் மரம் எல்லாம் ஒதுங்கி , அழகா ரொம்ப அற்புதமா ரொம்ப தூரத்துல அகத்தியர் இருக்கிற ஏக பொதிகை தெரியுது ,தென் கைலாயம்னு சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு கீழ இருக்கிற போட்டோவ பாத்தா உங்களுக்கே தெரியும் 




ஏக பொதிகை , நாக பொதிகை , ஐந்தல பொதிகை காட்சி ஒரே இடத்தில்

 கைலாயம் போன்ற தோற்றம் 

இன்னும் சிறிது நேரம் நடந்து கிட்ட தட்ட அட்டையார் கேம்ப்க்கு முன்னாடி ஒரு சிற்றருவி கிட்ட நாம சிவா கொஞ்சம் சாப்டிட்டு போகலாம்னு உட்கார்ந்தார் , அந்த அருவி பாக்கறதுக்கு ஏறக்குறைய சதுரகிரி சந்தன மகாலிங்கம் ஆகாய கங்கை போலவே இருக்கு , கொஞ்சம் உத்து கவனிசொம்ன அதுல ஒரு சுயம்பு லிங்கம் இருக்காரு , அவ்ளோ அருமையா , கொஞ்சம் closeup ல zoom  பண்ணோம்னா , ஆச்சரியம் சித்தர் போன்ற ஒரு முகம். பாக்கும் போதே ஒரு விதமான உணர்வு உள்ளுக்குள்ள வருது , எந்த சித்தர் சமாதியோ அல்லது எத்தனை சித்தர்கள் தினமும் வழிபாடு செய்து கொண்டு இருகிறார்களோ , யாருக்கு தெரியும் , நம்மால முடிஞ்சுது , கையெடுத்து கும்பிட்டுட்டு மேல ஏற ஆரம்பிச்சோம் . நல்ல தீவிர பக்தரா இருந்தா கண்டிப்பா இத விட்டு இருக்க மாட்டார் , ஒருமுறையாவது அருகில் சென்று பூஜை செய்து விட்டு வந்து இருப்பார் .


அருவி

அருவியின் மறு பக்கத்தில் லிங்க ரூபம் 


நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும் லிங்க உருவத்தில் உள்ள முகம் 
அப்படியே இன்னும் அடர்ந்த மரங்கள் திகிலூட்டும் பள்ளங்கள் , யானை லத்திகள் வழியாக ஒரு மணிநேரம் நடந்தால் வருகிறது அட்டையார் கேம்ப் , நல்ல ஒரு பெரிய நீர்வீழ்ச்சி , இது வரைக்கும் வந்த களைப்போ , உடல் சோர்வோ எதுவும் தெரியாது , இதுக்கு அப்பறம் ஒரு சின்ன ஏத்தம் வருது ஏறி பாத்தா முழுக்க புல் மேடு , நல்லா வெய்யில் தெரியுது , இங்க வந்த பிறகுதான் நாவறட்சியே எடுக்குது , கைல பாட்டில் இருக்கு ஆனா தண்ணி இல்ல ஒரு சின்ன ஓடைல தண்ணி புடிச்சா , அது முழுக்க ஒரு மாதிரியான பூச்சி , ஏன் இத இங்க சொல்றேன்னா , மலைல எல்லா தண்ணியும் குடிக்க ஏத்தது இல்ல , சரி என்ன பண்றது , அப்படியே நடனு நடந்தோம் , கொஞ்சம் கொஞ்சமா மேடு அதிகமாயட்டே போகுது , ஏற ஏற வெய்யிலும் ஏறுது , அப்பாடா ஒரு வழியா ஒரு சின்ன ஓடை குறுக்குல போகுது தண்ணியும் நல்லா சுத்தமா இருந்துது , அதா குடிக்கும் போது இருக்கிற feel இருக்கு பாருங்க , ஆஹா superb . அப்படியே ஒரு முப்பது நிமிஷம் யானை நட போட்டு போனோம்னா , திரும்ப நல்ல அடர்ந்த வனம் , இது எப்படி அடர்ந்த வனம்னா , நாங்க சாமி எல்லாம் பாத்துட்டு திரும்ப கீழ இறங்கும் போது சுமார் காலை ஏழு மணி , மதுரை நண்பர் எங்களுக்கு எல்லாம் முன்ன வரிஞ்சி கட்டிக்கிட்டு போய்ட்டு இருந்தாரு , அவருக்கு அடுத்து நான் எனக்கு பின் சிவா , அவருக்கு பின்னால் இரண்டொரு கேரளா நண்பர்கள் , அது அந்த மலை பிராந்தியத்தை பொறுத்தவரை நன்கு விடியாத நேரம் , ஆனால் சூரிய ஒளி இருக்கிறது , நாங்கள் முன்னாள் நடந்த களைப்பும் முழுமையாக போகாத நேரம் , பாதை நல்ல  இறக்கம் வேறு , திடீர் என்று சல சல வென இறைச்சல் , உயர்ந்து நெடிய மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு முறிவது போல் ஒரு சத்தம் , முன்னே சென்று கொண்டு இருந்த மதுரை நண்பர் தலையில் குளிருக்காக கட்டிக்கொண்டு இருந்த உருமாவை கழற்றி தூக்கி எரிந்து விட்டு திடு திடுவென எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்து விட்டார் ..... நாடு காடு என்ன செய்வது , முன்னாள் ஏறி இறங்கிய களைப்பு வேறு ... அச்சப்பட மட்டுமே முடிந்தது ......

புல் மேடு

புல் மேடு
    நாளைக்கு திரும்ப பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------



Friday, February 3, 2012

பொதிகை மலை - அகத்தியர்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


பொதிகை மலை , கிட்டத்தட்ட இரண்டு வருஷமா plan  பண்ணி பண்ணி போகமுடியாம போச்சு , மதுரைல இருந்து நான் நண்பர் ராம் அடிக்கடி plan போடுவோம் ஆனா போக முடியாது , முதல் காரணம் அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து  அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருகர்தால யார பாத்து எப்படி permission வாங்கரதுன்னு தெரியல .


இத எழுதும் போது அருள் பத்தி சின்ன ஞாபகம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கிட்ட ஒரு குடியானவன் கேட்டாராம் , ஸல் நீங்க எவ்ளவோ நல்ல காரியம் பண்றீங்க , அல்லாஹ் ( ஏக இறைவன் ) உங்களுக்கு சொர்கத்துல இடம் கண்டிப்பா குடுப்பார் தானேனு கேட்டாராம் , அதுக்கு ஸல் அவர்கள் இந்த காரியங்கள் எல்லாம் செய்யறதால அல்லாஹ் எனக்கு சொர்கத்துல இடம்குடுப்பார்னு இதை எல்லாம் நான் பண்ணல அப்படி கிடைக்கவும் கிடைக்காது , அதற்க்கு அல்லாஹ்வின் அருள் பார்வை என்மீது விழுந்தாள் போதும்னு பதில் சொன்னாராம் .
அத மாதிரி எங்களுக்கு அகத்தியரோட அருள் பார்வை இரண்டு வருஷத்துக்கு அப்பறம் கிடைச்சது .


அமெரிக்காவுல எனக்கு நண்பர் ராம்குமார்னு சுமார் ஒரு வருஷத்துக்கு முன்ன பழக்கமானார் , சிறந்த , தீவிர அகத்திய முனியின் பக்தர் , அவர் தான் எப்படி போகணும் யார பாத்து permision வாங்கனும்னு தெளிவா சொன்னார் , ராம்குமார் அவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .


முதல்ல எப்படி அங்க போறது யார் கிட்ட permission வாங்கரதுன்னு சொல்லிடறேன் , ஏன்னா நான் எல்லாம் இந்த information கிடைக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் பட்டேன் . கேக்கும்போதெல்லாம் இப்ப கிடையாது அப்போ போகணும் இவன பாக்கணும் அவன பாக்கணும் இவ்ளோ பணம் செலவாகும் அது இதுனு அழிச்சாட்டியம் பணிட்டாங்க .

இங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வன விலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளிய வரல , காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் proper permission கிடையாது . கேரளா வழியும் சும்மா இல்ல ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் .


சரி விஷயத்துக்கு வருவோம் , கேரளா திருவனந்தபுரம்ல , forest and wild  life அலுவலகம் P .T .P  நகர்ல ( வட்டியூர் காவு ) இருக்கு , அங்க போய்ட்டு , "அகஸ்தியர் கூடம் " போறதுக்கு permission வாங்கனும்னு சொன்னா போதும் , நேரா அந்த ஆபீஸ் உயர் அதிகாரியான வார்டன் ன பாக்க சொல்லுவாங்க , அங்க இப்போ இருக்கிற வார்டன் பேரு "திரு. ஜெயகுமார் ஷர்மா" , ரொம்ப நேர்மையான officer , சல்லி காசு லஞ்சம் வாங்கறது இல்ல , சீசன் நேரத்துல permission  கேட்டா , ஞாயமா இருந்ததுனா உடனே permission குடுத்திடுவாங்க .
ஒரு தலைக்கு ரூபாய் 350 /- . சீசன் நேரம் என்பது மகரஜோதி முதல் சிவராத்திரி வரை , ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அனுமதி உள்ளது , சில நேரங்களில் , அத்தியாவசியமாகின் அல்லது முன்னரே பதிவு செய்தவர்கள் யாரவது cancel செய்யும் பட்சத்தில் நாம் முன்பதிவு செய்யலைனா கிடைக்கும் , முன் பதிவு ஜனவரில முதல் வாரத்துல ஆரம்பிக்குது . சிவராத்திரிக்கு அப்பறம் ஏப்ரல் மாசம் வரைக்கும் package trip மாதிரி ஒன்னு இருக்கு , அதுக்கு ஒரு தலைக்கு ரூபாய் 750 /- ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 4 நபர்கள் ஆக ரூபாய் 3000 /- செலுத்தி செல்லலாம் . எந்த விதமான லஞ்சத்திற்கும் அங்கே இடம் இல்லை , தேவையும் இல்லை , அந்த அலுவலகத்துல எனக்கு பிடிச்ச ஒன்னு யாரும் லஞ்சம் கேக்கறது இல்லை .

போன் மூலமா பேசறத விட நேரா போன அனுமதி கண்டிப்பாக கிடைக்கும் , செல்லும்போது ஒரு photo I .D . எடுத்துட்டு போங்க , விண்ணப்பம் இலவசம் .

பொதிகை யாத்திரை செல்பவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னனா , மார்ச் மாசம் முதல் அல்லது இரண்டாம் வாரதுக்குள்ள போய்ட்டு வந்துடுங்க , அதுக்கு அப்பறம் நான் கேள்வி பட்டது வரைக்கும் யானை நடமாட்டம் வெகு சாதாரணமா இருக்கும் , அவ்ளோ தூரம் களைப்புல ஏறும்போது நம்மால ஓடி ஒளிய கூட முடியாது .

கேரளா வனத்துறை விலாசம் :

 forest and wildlife office 
 P .T .P NAGAR 
 VATTIYUR KAAVU  
PH : 0471 - 2360762   

அப்பறம் எப்படி பொதிகை ( அகஸ்தியர் கூடம் ) அடிவாரம் போறதுன்னு பாப்போம் .

அடிவாரம் வன இலாகா அலுவலகம் இருக்கும் இடம் பேர் போனக்காடு , திருவனந்தபுறத்துல இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ் பிடிக்கணும் , காலை 6  மணிக்கு முதல் வண்டி அடுத்து அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு வண்டி இருக்கு , அப்படி இல்லனா நாம நெடுமங்காடு போயிட்டு போகணும் , நேர் வண்டி கிடச்சதுனா 2 .30 மணி நேரத்துல அடிவாரம் போகலாம் , பஸ் நிக்கிற இடத்துல இருந்து 4  கிலோ மீட்டர் நடந்தா வன இலாகா அலுவலகம் வரும் .

நாளைக்கு எங்களுக்கு அங்க நேர்ந்த அனுபவங்கள பதிவு செய்றேன் , ரொம்பவே விறு விறுப்பாவும் , அருள் நிறைந்த ஒரு யாத்திரையாவும் இருந்தது , கொஞ்சம் திகிலாவும் இருந்தது . நிறைய புகைப்படங்களும் எடுக்கப்பட்டது அதையும் போடறேன் .

நாளைக்கு பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------