Tuesday, March 29, 2011

ஓதிமலை

ஓதிமலை-1

ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி 
 ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
 


ஓதியப்பர்

ஓதிமலை, புளியம்பட்டிக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஒரு அழகான அதி அற்ப்புதமான மலை ,, குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கினங்க , அங்கு ஆதி சித்தர் முருக பெருமானின் ஆலயம் அமைந்து உள்ளது .
இங்கு இருக்கும் முருகருக்கு ஆறு தலைக்கு பதிலாக ஐந்து தலையும் , எட்டு கரங்களும் அமைந்து உள்ளது சிறப்பு , காரணம்  முருகர் எம்பெருமான் குரு போக மகரிஷிக்கு வழி காட்ட சென்றதின் விளைவு , ஐந்து தலையுடன் இன்று அமர்ந்து கொண்டு அருள்பாளித்துக்கொண்டு இருக்கின்றார் .
மேலும் ஆதி சித்தர் முருகர் இம்மலைக்கு பின்னால் இரும்பறை என்னும் இடத்தில் பிரம்மாவை சிறைவைத்ததாகவும் , இந்த மலையில் அமர்ந்துகொண்டு சிவ பெருமானுக்கு முருகர் வேதங்களை உபதேசித்ததாகவும் புராணங்கள் உரைக்கிறது . 
அய்யன் குரு போக மகரிஷி இங்கு நெடுங்காலம் தபசில் இருந்துகொண்டும் , உலக நன்மைக்காக யாகங்களை செய்து கொண்டும் இருந்திருக்கிறார் , இதைக்கண்ட ஆதி சித்தர் அவரை பழனி மலைக்கு சென்று தன் உருவை நவபாஷான சிலையில் வடித்து உலக மக்களின் பிணி போக்க பணித்து உள்ளார் , ஐயனும் மலையில் இருந்து இறங்கி பழனி நோக்கி சென்று உள்ளார் , சிறிது தூரம் சென்ற ஐயனுக்கு வழி தெரியாமல் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது , உடனே என்ன முருகா நீ தானே என்னை உன் பணி செய்ய பணித்தாய் , வழி தெரிய வில்லயே , என்று கூறி உள்ளார் , கூப்பிட்ட குரலுக்கு வருபவர் அல்லவா நம் முருகப்பெருமான் ,ஓதி மலையில் இருந்து ஒரு முகமுடனும் , நான்கு கரங்களுடனும் , தற்போது குமாரபாளையம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்து பழனிக்கு வழி காட்டி உள்ளார் . தற்போது குமாரபாளையத்தில் ஒரு முகம் நான்கு கரங்களுடனும் , ஓதி மலையில் ஐந்து முகம் , எட்டு கரங்களுடனும் ஆதி சித்தர் அமர்ந்து இருக்கிறார் .
அடியேன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அடிக்கடி எப்பொழுது எல்லாம் ஓதிஅப்பர் அழைக்கிறாரோ அப்பொழுது எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றேன் , இன்று ஒரு புது விதமான மெய்சிலிர்க்கும் அனுபவத்தை அய்யன் கண் காண மனமுவந்து அருளினார் . 
மலை ஏறும் வழியில் அமைந்து இருக்கும் சுயம்பு மகாலிங்கம் 
அதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை , இன்று காலை சுமார் ஏழு மணிக்கு ஓதிமலை செல்ல புறப்பட்டு எட்டு முப்பதிற்கு மலை ஏற ஆரம்பித்தேன் , ஆயரத்து எட்நூறு படிகள் , நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் ஏறி கருவறையை சென்று அடைந்தேன் , உள்ளே ஐயர் மந்திர உச்சாடனம் செய்து கொண்டும் , மலர்களை ஓதியப்பரின் பாதங்களில் சமர்ப்பித்துக்கொண்டும் இருந்தார் , இரு பூசாரிகள் , நான் மற்றும் ஒருவர் , வெறும் நான்கு பேர் தான் அங்கு அமர்ந்து கொண்டு இருந்தோம் , எனக்கு முன்பு அங்கு அமர்ந்துகொண்டு இருந்தவர் விளக்குக்கு திரியை போட்டுக்கொண்டு இருந்தார் , நான் அமைதியாக உட்கார்ந்து ஓதியப்பரை பார்த்துக்கொண்டு மனதில் அய்யன் எம்பெருமான் குரு போகரின் நாமத்தை ஜபித்துக்கொண்டு இருந்தேன் .
சட்டென்று  பார்த்தால் முருகர் புலித்தோல் தரித்து சிவ பெருமானாக காட்சி அளித்துக்கொண்டு இருந்தார் , எனக்கு தலை சுற்றி மயக்கமே வருவது போல் ஆகிவிட்டது , சற்று நிதானித்து திரும்பவும் பார்த்தல் ஓதியப்பர் மெல்ல கண் திறந்து என்னைபார்த்து ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார் , ஆனால் இந்த மரமண்டைக்குத்தான் புரியவில்லை என்ன ஓதியப்பர் சொல்கிறார் என்று , கீழே உள்ள வீடியோவை கூர்ந்து கவனிக்கவும் , ஓதியப்பர் கண் திறப்பதும் , பேசுவதும் நன்றாகவே தெரியும் , இது எந்த வித கணிப்பொறி  வேலைப்பாடும் இல்லை , சோதித்து பார்த்தால் நன்றாகவே தெரியும் .
 அடுத்த இடுகையில் ஓதி மலையில் ஏற்பட்ட மற்ற அனுபவங்களையும் , ஓதி மலையில் இருக்கும் அய்யன் குரு போகர் அமர்ந்து தவம் செய்த பாறை மற்றும் ஓதிமலை அனைத்து புகைப்படங்களும் இடுகிறேன் , நேரம் போதாமையால் இந்த முறை முடியவில்லை மன்னிக்கவும் .
ஓதிமலை செல்ல , கோயபுத்தூர் - அன்னூர் - ஓதிமலை , பஸ்கள் குறைவாக செல்லக்கூடிய  இடம்  , அல்லது அவினாசி - புளியம்பட்டி - ஓதிமலை . ஏறும் வழியில் தண்ணீர் இல்லை , அதனால் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஏறுவது நலம் .
மற்ற கோயில்களை போல கூட்டம் அதிகமாக இருக்காது , நன்றாகவே அமைதியான இடமாக இருக்கும் , இரவில் இங்கு தங்க முடியாது , வேண்டுமானால் அதிகாலை சென்று இரவு சுமார் எட்டு மணிக்கு திரும்பி விடலாம் .  


ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி 
 ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

8 comments:

  1. அன்புள்ள போகர் ஐயா,

    தங்களின் பதிவு மிக அருமை.

    தாங்கள் கூறியதும் உண்மை.

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. sir
    thanks for uploading this video.
    ur native place ? are ur near to othiyapper.
    i am near pulliampatti.

    ReplyDelete
  3. thanks for sharing....

    http://spiritualcbe.blogspot.in

    ReplyDelete
  4. visit- othimalaimurugan.blogspot.in

    ReplyDelete
  5. othimalimurugan guru baitrium ,poosi ,yathiri paitrum, marimaran440@gmail.com bakeravum

    ReplyDelete
  6. நன்றி.. கேட்டதை தருபவன் என் அப்பன் முருகன்..முருகனின் புகழ் வையகமெல்லாம் பரவட்டும்..முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    ௐம் சரவணபவாய நம

    ReplyDelete