ஓதிமலை - 2
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓதிமலை புகைப்படங்கள் , நண்பர்கள் பார்வைக்காக ,
ஓதிமலை |
ஓதி மலை அடிவாரம் அமைதியான விநாயகருடன் தொடங்குகிறது |
ஓதி மலை அடிவாரம் , அமைதியான ஒரு நிசப்தமான சூழலுடன் அமைந்து உள்ளது , சுற்றிலும் ஆராவாரத்துக்கான எந்த அடையாளமும் இல்லை , அமைதி , நிசப்தம் இதை தவிர வேறு ஒன்றும் இல்லை , மனம் இங்கேயே அடங்கிவிட தொடங்கும் .
விநாயகர் கோவில் அருகில் சிமெண்ட் கல் , மணல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது , வரும் பக்தகோடிகள் முடிந்த அளவு மேலே தூக்கிக்கொண்டு சென்றார்கள் என்றால் அவர்களின் கைங்கரியம் என்றென்றும் ஓதியப்பரின் பாதங்களில் நிலைத்து நிற்கும்
இடையில் வரும் விநாயகர் ஆலயம் |
சுமார் எட்நூறு நெட்டான படிகள் ஏறிய பிறகு ஒரு அமைதியான வியாயகர் கோயில் ஒன்று வருகிறது , மிக அமைதியான இடம் , மனித சஞ்சாரத்தில் இருந்து சிறிது விலகி வந்ததை நன்றாகவே உணரலாம். இன்னும் கோயிலுக்கு உள்ளே சென்று அமர்ந்தால் , அப்பா வெளியில் மட்டும் அல்ல உள்ளேயும் ஒரு அமைதி ஏற்ப்படும் , பலவிதமான் தினசரி அலுவலக பிரச்சனைகள் , தோல்விகள் , வெற்றிகள் , பல குடும்ப பிரச்சனைகளில் இருக்கும் பொழுது எல்லாம் இங்கே சென்று அமர்ந்து வருவது மனதிற்கு பல முறை ரணத்திற்கு மருந்து போடுவது போன்று இதமாக இருந்து இருக்கிறது .
ஒருமுறை நண்பர் அனந்துவுடன் சென்ற பொழுது , நண்பரும் நானும் இந்த கோயிலில் இருந்து வலது புறம் செல்லும் பாதையில் சென்றால் அய்யன் தவம் செய்த குகை ஒன்று வரும் , அதை பார்க்க சென்ற எங்களுக்கு ஒரு உள்உணர்வு மேலும் மரங்களின் ஊடே முன்னேறி செல்ல தூண்டியது , நாங்களும் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று சிறிது தூரம் நடந்தோம் , ஒரு இடத்தில் தானாக நிறுத்தவும் பட்டோம் , ஏதோ ஒன்று இதற்க்கு மேல் செல்லக்கூடாது என்பதை போல் உணர்ந்தோம் , நின்ற இடத்தில் இடது புறம் பார்த்தால் ஒருவர் நன்றாக ஆசனத்தில் அமர்வது போன்ற ஒரு அளவான பாறை ஏறக்குறைய வட்ட வடிவமாக அழகாக இருந்தது , கிடைத்த வாய்ப்பை விடுவோமா என்ன? சிறிது நேரம் அதில் அமர்ந்து அமைதியாக உட்கார்ந்து இருந்து விட்டு திரும்பி செல்லலாம் என்று கிளம்பியபொழுது யாரோ பிரணவ மந்திரத்தை சொல்வது போல உணர்ந்தேன் , சரி நமக்குதான் பிரம்மை போல என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து , திரும்பி விநாயகர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் , நண்பர் அனந்து சிறிது உன்னிப்பாக எதையோ கேட்டு விட்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தார், திருபாவும் உன்னிப்பாக கேட்டு விட்டு , என்னிடம் திரும்பி , உங்களுக்கு என்ன கேட்துனு கேள்வி எழுப்பினார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஒன்னும் காதுல விழலன்னு சொன்னேன் , நண்பர் சொன்னார் , யாரோ ஒருவர் ஓம் என்று முதலில் கூறுகிறார் , பின் நிறைய நபர்கள் ஓம் என்று கூறுகிறார்கள் , ஏதோ பிரணவ மந்திரத்தை வகுப்பறையில் பாடம் எடுப்பதை போன்று இருக்கிறது அந்த சப்தம் என்று சொன்னார் , ம்ம்ம்ம் மனிதருக்கு பல விஷயங்களை கேட்க குடுத்து வைத்து இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மேலே இன்னும் மீதம் உள்ள ஆயிரம் படிகளை ஏற ஆரம்பித்தோம்.
விநாயகர் கோவிலை அடுத்து ஏறும் நெட்டான படிகள் |
செல்லும் வழியில் |
மேலே சென்றவுடன் வரும் நுழைவாயில் |
நுழைவாயிலை அடைந்தவுடன் இருக்கும் பிள்ளையார் |
உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் பரமேஸ்வரி தாய் |
கோவிலின் வெளி பிரகாரம் |
இடும்பர் ஆலயம் |
ஆலய மணி |
ஆதி சித்தரின் வாகனம் , மயில் |
ஓதியப்பர் |
ஐந்து முகம் எட்டு கரங்களுடன் அருள் பாலிக்கும் ஓதியப்பர் |
சின்ன பழனி என்று உணர்த்திய முகங்கள் |
அய்யன் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மகரிஷி அமர்ந்து தவம் செய்த பாறை |
பெயர் தான் பாறை ஆனால் பாறைக்கான எந்த அறிகுறியும் இல்லை , பூவை போன்று மென்மையான ஒன்று |
வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஷக்தி வாய்ந்த இடம் |
ஐயனின் ஆசனத்தில் இருந்து கோயில் கோபுரம் |
ஐயனின் ஆசனத்தில் இருந்து எதிரில் |
அன்று நடந்த இன்னும் சில நிகழ்சிகளுடன் அடுத்த இடுகயியல் சந்திப்போம் .
-------------------------------------------------------------------
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து
------------------------------------------------------------------