இப்பொழுது முதன் முறையாக நான் கூட நெரிசல் அது இது என்று சொல்லிய பழனியம் பதியை மிகவும் ஈர்ப்பு வாய்ந்த ஒரு ஷக்தி மண்டலமாக பார்க்க ஆரம்பித்தேன் , அய்யன் குரு போகரின் அருள் மற்றும் அவரே அங்கு இன்னும் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது .
பழனி - ௨
இரண்டாவது முறையாக பழனிக்கு சென்றது , ஒரு மாலை வேலையில் , ஏறக்குறைய இருட்டி விட்டது , வின்ச் வழியாக செல்வதற்கு நின்ற பொழுது , ஒரு மூதாட்டி வந்து , தம்பி ஆணை அடி வழியா போங்க , அஞ்சு நிமிழத்துல மேல போய்ட்டு சாமி பாத்துட்டு , தங்க தேர் பாத்துட்டு எட்டு மணிக்கெல்லாம் கீழ வந்துடலாம்னு சொன்னாங்க , நானும் சரி விஞ்சுகான கூட்டம் நிறைய இருந்ததால படி வழியா ஏறலாம்னு ஏற ஆரம்பிச்சேன் .
வழி வெகு சுலபமாக இருந்தது , செல்லும் வழி எங்கும் நிறைய கேரளத்து மக்களை பார்க்க முடிந்தது , பொதுவாக கேரளத்து மக்கள் ஐயப்பன் வழிபாட்டை அதிகமாக விரும்பி செய்பவர்கள் , அதிக ஈடுபாடு ஐயப்பனிடம் கொண்ட மக்கள் இங்கு பழனிக்கும் வெகு பிரியத்துடன் வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு சம்மந்தம் இரு கோயில்களுக்கும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தேன் , இடை இடையே நிறைய சித்தர்களை சித்தரிக்கும் சிற்பங்களும் , புராண நிகழ்வுகளாக கருதப்படும் சில சம்பவங்களையும் நன்றாகவே சிலை வடித்து இருந்தார்கள் , இயற்கை அழகும் அதாவது லைட் வெளிச்சத்தில் பழனி நகர் நன்றாகவே இருந்தது , ஒரு பதினைந்து நிமிடத்திலேயே சந்நிதானம் இருக்கும் மேல் தளத்திற்கு சென்று விட்டாயிற்று .
ஆச்சரியமாக இருந்தது , விஞ்சிர்க்கு ஒரு மணிநேரம் காத்து இருந்து பிறகு அந்த இடுக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு செல்வதை விட இப்படி ஆணை அடி வழியாக செல்வது எவ்ளவோ மேல் , மனதிற்குள் நன்றியும் சொல்லிக்கொண்டேன் எம்பெருமானுக்கு முதன்முறையாக என்னை பழநியம்பதியியல் வெகு சுலபமாக ஏற வைத்ததற்கு .
வழக்கம் போல் நூறு ரூபாய் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சிறப்பு தரிசனத்தில் நுழைந்தேன் , கூட்டம் அவளவாக இல்லை , இருந்தும் கருவறைக்கு செல்லும் பொழுது அர்ச்சகர்களின் கூட்டம் வந்து மொய்க்க ஆரம்பித்து விட்டது , அர்ச்சனை , அது , இது என்று பணத்தை வாங்குவதற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் , கவனம் முழுவதும் ஆதி சித்தரான அய்யன் படைப்பான முருகபெருமானின் மீதே இருந்தது , அந்த கர்ப்பக்ரகத்தின் முன் சென்று முருகரை தரிசனம் செய்ய ஒரு பத்து நிமிடம் கூட அனுமதிக்கப்படவில்லை , மனது சிறிது கஷ்டப்பட்டது , ஐயனிடமும் முறையிட்டு விட்டு , அய்யன் நிர்விகல்ப்ப சமாதியில் அமர்ந்த அமர்ந்து கொண்டு இருக்கின்ற இடம் நோக்கி மனமும் கால்களும் தானாக சென்றது , கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது , சுவர்களில் அங்கும் இங்கும் வரைந்து வைத்திருக்கும் சிற்ப்பங்களை பார்த்துக்கொண்டே சென்றேன் , அய்யன் அமர்ந்த இடத்தை அடைந்தவுடன் விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு நினைத்துக்கொண்டேன் அய்யன் அருள் முழுமையாக இந்த விபூதிஎன் வாயிலாக கிடைத்தது என்று , வெளியில் வரும் பொழுது அய்யன் நிவிகல்ப்ப சமாதியில் அமர்ந்து இருப்பது போன்று ஒரு சித்திரம் வரையப்பட்டு இருப்பது மிகவும் என்னை கவர்ந்தது , அப்படியே படத்தில் உள்ள அவர் பாதகமலங்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன் , ஏதோ ஒரு உணர்வு என்னை மீண்டும் அந்த படத்தை பார்க்க வைத்தது , பார்த்தல் ஆச்சரியம் மெத்த , அந்த படத்தின் மேல் இன்னொரு மனித வடிவில் சாதாரணமாக நாம் சித்தரித்து வைத்திருக்கும் சித்தர்களின் உருவத்தை போன்று ஒரு முகம் நீண்ட நாசிஉடனும் , நீண்ட தாடி , மீசை , தீர்க்கமான கண்களுடனும் காட்சி அளித்தது , எனக்கு மிக்க ஆச்சரியம் , நாயை விட கேவலமான எனக்கா இதைப்போல ஒரு காட்சி , என்ன தவம் செய்தோனோ இந்த காட்சி கிடைப்பதற்கு என்று கண்கள் தானாக குலங்களாக ஆரம்பித்து விட்டது , அதற்க்கு மேல் அந்த இடத்தை விட்டு நகர முடியுமா என்ன , அப்படியே அங்கேயே உட்கார்ந்து விட்டேன் . இதோ அந்த படம் கீழே. படம் பிடித்தது ஓரளவிற்கு விழுந்தது , என் மொபைலில் பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக இருக்கிறது .
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து இன்னொரு படத்தை பார்த்தால் அய்யன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ஏதோ பேசுவதைபோல் இருந்தது அந்தப்படம் , மிக்க ஆச்சரியம் இந்த குப்பைக்கும் இவ்வளவு கருணை காட்டுவார்களா என்று . அங்கேயே உடல் , ஆன்மா , ஆவி , அனைத்தையும் அய்யன் பதத்தில் சரண் அடித்துவிட்டேன் . இதோ அந்த படமும் கீழே .
பக்கத்தில் சிறிது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு கண்களை மூடி ஐயனை பிரார்த்தித்து விட்டு அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டேன் , நேரம் வெளியில் வெகு விரைவாக ஓடிக்கொண்டு இருந்தது போலும் , ஏதும் புரியவில்லை , மூளையில் வலப்புறம் ஒருவிதமான உணர்வு பெருகிக்கொண்டு இருந்தது , அது இதைப்போல என்று வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை , பிறகு மெல்ல கண்களை திறந்து , ஐயனை மீண்டும் தொழுது , நடக்க ஆரம்பித்தேன் , உடல் என்வசம் இல்லை , முழு உடல் எடையும் முற்றிலுமாக குறைந்தது போல் இருந்தது , நான் நடக்கிறேனா அல்லது மிதக்கிறேனா என்றே தெரியவில்லை , மிக புதுமையான விவரிக்கமுடியாத அனுபவம் அது , மனம் என்ற ஒன்றும் இல்லை , ஏன் நான் சுவச்சிகிறேனா இல்லையா என்றே தெரியவில்லை , அய்யன் அருள் முழுமையாக கிடைத்தது போல் ஒரு உணர்வு .
மெல்ல முன்னேறி நடந்து வந்தால் எதிரில் தங்க தேர் உலா , முகரின் அற்ப்புத ஓளிமயமான காட்சி கண்டு கீழ் இறங்கி வந்தேன் மீண்டும் என்முன்கர்மபலனை இந்த உலகில் அனுபவிக்க .
பழனி - 3
பழனிக்கு மூன்றாவது முறை சென்றது எந்த வித முன்னேற்பாடோ அல்லது பிளான் செய்தோ செல்லவில்லை , நண்பர் பட்டினத்தார் பரம்பரையில் தீக்ஷை பெற்ற விரிவுரையாளர் பிரதீப்புடன் திடீர் என்று சென்ற பயணம் , அன்று நாங்கள் சுருளி மலையில் சந்திப்பதாக இருந்தோம் ஒரு சில காரணங்களால் (பின்னர் மற்றுமொரு சுருளி மலை அனுபவத்தில் பகிர்ந்து கொள்கின்றேன் அங்கு ஏற்பட்ட அனுபவங்களை ) திடீர் என்று பழனி செல்லும் நிலை ஏற்பட்டது , சமார் நான்கு மணிக்கு நாம் கம்பம் பகுதியல் இருந்து பழனியை நோக்கி புறப்பட்டோம் , இரவு சுமார் ஒன்பது முப்பதுக்கு பழனியை சென்று அடைந்தோம் , இரவு கோயிலுக்கு செல்ல முடியவில்லை , சிறிதும் எதிர்பாரா விதமாக அங்கு தங்க வெடிய சூழ்நிலை , தங்கினோம் , காலை மணி சுமார் எட்டிற்கு மலை மேல் சென்று அடைந்தோம் .......
நேராக அய்யன் நிர்விகல்ப்ப சமாதிக்கு சென்றோம் , நாங்கள் உள் நுழையும் போது இருந்த கூட்டம் , அய்யன் சமாதிக்கு நேர் எதிருக்கு செல்ல செல்ல முற்றிலுமாக குறைந்து யாருமே இல்லாத சூழ்நிலை , அங்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் , நான் மற்றும் நண்பர் பிரதீப் , எங்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான அனுபவம் , உடல் முழுவதும் காந்தித்தல்லியது , ஒருவித உஷ்ணம் எப்படி விரவிப்பது என்று தெரியவில்லை , நண்பர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டார் , எனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை , வேறு விஷயத்தை நினைத்து பார்க்க முடியவில்லை , முழு அமைதி , அப்படியே இருவரும் நின்று விட்டோம் ,, நண்பர் பிரதீப் வாங்கிக்கொண்டு வந்த பூ அய்யன் சமாதிக்கு சாத்தப்பட்டது , சிறிது நின்று கொண்டு இருந்த எங்களுக்கு அந்த அர்ச்சகர் சென்று அபிஷேக பாலை கொண்டு வந்து கொடுத்தார் , பிறகு முதன்முதலாக அய்யன் பெயர் போட்ட அந்த பிரசாத கவரில் சமாதியில் வைத்து விபூதியும் , குங்குமமும் கிடைத்தது , மனதிற்கு முழு நிறைவாக இருந்தது , இதுவே போதும் போல் இருந்தது , வேறு எங்கும் நகர கூட விருப்பம் இல்லாமல் அய்யன் சமாதிக்கு உள் நுழையும் வழியில் நின்று விட்டேன் , சிறிது நேரம் கழித்து நண்பர் முருகரின் சன்னதிக்கு வருமாறு அழைத்து சென்றார் .
நண்பர் கோயில் ஊழியர் மூலமாக உள்ளே சுலபமாக முருகன் சன்னதிக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்தார் , நான் என்னமோ ஓரு நிமிட சிறப்பு தரிசனம் தான் என்று நினைத்து கொண்டு இருந்தால் , காலை அபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் முன்னே உட்கார வைக்கப்பட்டோம் ( அன்ற ஞாயிற்று கிழமை அதுவும் அன்று ஏதோ ஒரு மந்திரி கோயிலுக்கு வந்து இருந்தார் ), எனக்கு பயங்கர வியப்பு , சென்ற முறை சரியாக நின்று பார்க்க முடியவில்லயே என்று ஐயனிடம் வைத்த வேண்டுகோள் நன்றாகவே இந்த முறை நிறைவேற்றி வைத்துவிட்டார் யாரையும் கைவிடாத போக பெருமான் , அபிஷேகம் ஆரம்பித்தது , நவ பாஷான சிலையில் வைத்து விபூதி முதல் கொண்டு அனைத்தும் சுடச்சுட கிடைத்தது , நன்றி சொல்வதா அல்லது அவரின் கருணையை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை . முழு ஆசீர்வாதம் கிடைத்ததாக நினைத்துக்கொண்டு வெளியில் வந்தோம் .
கீழ் இறங்கி , தன்னாசி அப்பர் கோயில்லை விசாரிக்க ஆரம்பித்தோம் , ஓவ்வொருவரும் வேறுபட்ட வழியை சொன்னார்கள் , சிலர் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர் சிலர் , நாற்பது கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர் , என்ன என்று புரியாமல் திரும்பி சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்த பொழுது அவர் வெகு அருகில்; ஒரு இடத்தை காண்பித்து அங்கு சென்று பாருங்கள் அதுவாகத்தான் இருக்கும் என்றார் , , நண்பர் பிரதீப் காரிலேயே உட்கார்ந்துக்கொண்டு , என்னை அதுதான என்று பார்த்து அதுதான் என்றால் கூப்பிடவும் என்று கூறிவிட்டு காரில் இருந்தார் , நான் உள் சென்று பார்த்தேன் , எப்படி சொல்வது என்று தெரியவில்லை , அப்படி ஒரு மெய் சிலிர்ப்பு , வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்த இடம் , நண்பரை உள்ளே வர அழைத்தேன் , இருவரும் உள்ளே சென்று அய்யன் மற்றும் அகத்தியரின் முன்னாள் அமர்ந்தோம் , சிறிது கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு , போட்டோ எடுக்க ஆரம்பித்தோம் , எனக்கு மிக்க ஆச்சரியம் , போட்டோ எடுக்கும் பொழுது அகத்தியரின் சிலைக்கும் அருகில் இருந்த விளக்குக்கும் நேராக ஒரு ஓளி நீண்டது , அப்படியே போட்டோவும் எடுத்து ஆயிற்று . கிழே உள்ளது அந்த போட்டோ .
சிறிது நேரம் கழித்து அர்ச்சகர் வந்து எங்களை மட்டும் உள்ளே சென்று உட்ப்ரகாரத்தை சுற்றி வர அனுமதித்தார் , சிறிது நேரம் அவர்களுக்கு அருகாமையில் உட்கார்ந்து செல்லவும் சொன்னார் .
இந்த இடத்தில் தான் ஐயனுக்கு , அகத்தியமுனி நவபாஷான சிலை செய்வதற்கு ஒரு சில முக்கிய டிப்ஸ்களை கொடுத்தாராம் , இங்கே ஒரு சுரங்கம் இருப்பதாகவும் சொன்னார்கள் ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது ஐயனின் ஆட்சி இன்றும் அங்கு நீக்கமற நிறைந்து உள்ளது , வெளியில் வர மனதே இல்லை , யாரவது சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் குதிக்க ஆசைபடுவார்களா என்ன ? ஹ்ம்ம்ம் , நாங்கள் வந்தோம் அய்யன் இருக்கும் சொர்க்கத்தில் இருந்து இந்த வேறு ஒரு உலகத்திற்கு நம்பிக்கையுடன் , அவர் எங்களுடனே இருப்பதை உணர்ந்துக்கொண்டு .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவை உலகில் தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் படிக்க நேரிடும் , அப்படி படிப்பவர்கள் , பழனிக்கு நேரில் சென்று வர இயலாமலும் இருக்கலாம் , அப்படி முடியாதவர்கள் தயவு செய்து தங்களின் முழு விலாசத்தை இங்கு பதியவும் , அவர்களுக்கு கட்டாயமாக பழனி விபூதி பிரசாதம் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் .
என்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது அவ்வளவே .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எடுப்பதை விட கொடுப்பதில் ஆனந்தம் / திருப்தி அதிகம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி