Saturday, August 14, 2010

எம்பெருமான் குரு  போக முனிவர் திருவாய் மலர்ந்தருளிய சிவயோக ஞானம் - 12




 -------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------------
வாசி மற்றும் செய்ய வேண்டிய முறைகள் ஞான யோக மார்க்கம் தெளிவாகவும் , முழுமையாகவும் 12 பாடல்களில் சுருக்கி மக்கள் மேன்மை அடைவதற்காக அய்யன் எம்பெருமான் முதல் சித்தர் குரு போக சித்த மகரிஷி ஆண்டவர் அளித்துள்ளார் ,அனைவரும் படித்து முயற்சித்து சாதகம் செய்து கிடைக்க வேண்டிய மிகப் பெரிய பயனை பெறவும் ,
 ------------------------------------------------------------------------------------------------------------------
காணாமற் போகாது ஏங்கிடாதே
காலும் எதோ தலையும் எதோ  என்றுஎண்ணாதே
தோணாமற் தோணவைக்கும் கணேசன் மூலம்
துண்டத்தின் கீழ் நுனியல் ஒளியைக்கண்டால்
பூணாமற் பூணுகிற சுவாதிஷ்டானம்
புகழான அசபைஇலே ஒளியைப்பாரு
வீணான வீணல்ல சுழினைக்கண்டம்
வேதாந்த துரியமது மௌனிதானே

தானென்ற மௌனமணி பூரகந்தான்
சானகியும் மால் நிற்கும் ஒளியைப்பாரு
கானென்ற அனாகதமும் கடைக்கண் பாரு
கதிரான ருத்திரன் தன் ஒளியைப்பாரு
வானென்ற விசுத்திஇலே நுனியைப்பாரு
மகத்தான மயேஷ்வரன் தன் ஒளியைப்பாரு
மானென்ற ஆக்கினைஇல் சச்சிதானந்தி
மணிமேவும் சதாசிவன் தன் ஒளியை நோக்கே

நோக்குகிற தோர் வகை கேளு ஒரு போது உண்ணு
நோக்காமற் பிங்கலைஇல் ஓடும் போது
நாக்குருசி சுவைபாகம் ஆருங்க்கொள்ளல்
நலமான உமிநீரின் நீருங்க்கொள்ளல்
மூக்கினிலே பிங்கலைஇல் ஓடும் போது
மூட்டுவாய் இப்படியே முக்கால் சொன்னேன்
பாக்கு வெற்றிலை அருந்தி படியே கொள்ளல்
படுக்கும் போது இடக்கரத்தில் தலையை தாங்கே

தாங்குவாய் அனுபோகம் பிங்கலைஇற் கூடு
சையோகம் சிவயோகம் தானேயாகும்
தூங்குவாய் மௌனமாய் தூங்குதூங்கு
சுயம் பிரகாசமதில் நினைவாய்ப்பாரு
ஓங்குவாய் பிரணவத்தில் ஒடுக்கமாகும்
உயிர் பிழைக்க மேல் வாசல் ஊடு தூக்கு
வாங்குவது இடையுடு வாங்குவாங்கு
வளமான ரேசகந்தான் மேலே தாக்கே

தாக்கியப்பா மேல்வாசற் குள்ளே சென்று
சாக்கிரத்திற் கண்மூடி நிதமும் பாரு
நோக்கையா நொய்யாரும் நீர்த்தூளாகும்
நோக்காமற் பார்த்தபேர் கண்மூடாமல்
ஆக்கையா பொறி ஐந்தும் அடித்துத்தள்ளி
ஆனந்த மதியமுதம் சிந்தும் சிந்தும்
வாக்கையா பேசாதே சமாதி மூட்டு
மைந்தனே பூசையெல்லாம் வளங்கும் தானே

வளங்கொண்ட பரநேசம் நடு லாடத்தில்
வைத்துப்பார் விழி இரண்டும் மருவுங்க்காலம்
உலங்க்கொண்ட புரி என் பூரணமும் மேலாம்
உறுமைனால் ஒரு வழியால் ஓடி ஏறு
குளங்கண்டோர் நீருண்டு தாகந்தீர்த்துக்
கொண்டது போல் அண்டி அருகிருந்து பாரு
களங்கொண்ட ஆருட மௌன கங்கை
கை முறையாய் சமாதி இது உரைக்கும் தானே

தானென்ற தியானம் அஞ்சு முன்னே சொன்னேன்
தராதலமாம் நிராதாரம் அஞ்சின் உள்ளே
கானென்ற அவ்விடங்கள் ஒளிகள் காணக்
கருவான த்யானமது கண்டு சொன்னேன்
மானென்ற சத்தி ஐந்தும் சிவம் ஒன்றான
மந்திர பீஜாட்சரங்கள் வைத்துப்பாரு
தேனென்ற சடாதார யோகத்துக்கு
தியானமது கண்டு உரைத்து வாசி ஊதே

வாசிஇலே இடகலை பூரகந்தான் ரெண்டு
வளமான சுழினை இற்கும் பகந்தான் நாலு
தேசியென்ற பிங்கலை ரேசகந்தான் ஒன்று
திடமாக பௌரனையை தொட்டு நீயும்
ரேசி இந்த முறை அம்மா வாசி தொட்டு
நிசமாக வளர் பிறையை தாக்கிமாறு
மாசிஇலே பித்த நீர் பாயாவண்ணம்
மதி பார்த்து கண்ணாலே நோக்குவாயே

நோக்குவது நீராதாரம் ஆறும் பாரு
நுனியான தமர்வாசல் உள்ளே தாக்கு
தாக்குவது ரேசகமாங் கண்டம் பாயும்
சத்திஇடை பாயாமற் பிங்கலைக்கே ரேசி
போக்குவது மேல் வாசல் பூட்டி விட்டால்
பொறி ஏது மனத்தோடு பூதாதையா
ஆக்குவது வாசி தாரணை அதாச்சு
அப்பனே சுழிமுனைஇல் உறைத்து நில்லே

நில்லடா ஆக்கினை தாரணை இதாச்சு
நிஷ்களமாம் விந்து விட்டு நாதம் ஓங்கச்
செல்லடா திசைநாதம் கிளம்பும் போது
திட்டமாய் பூரணமாய் மதிஇன் உள்ளே
அல்லடா அமுதம் அங்கே கக்கல் கக்கல்
அடைவான அமுத தாரணை இதாச்சு
கல்லடா உன் தேகங் காலன் மாண்டான்
காலனென்ற பிங்கலையை ரவி தானுன்டே

உண்ட ரவியாலே மதி அமுதமாச்சு
ஊதியே அனல் கொழுத்தி நொய் நீர் வேர்வை
கண்ட தென அப்பு தாரணை இதாச்சு
கற் தேகமானது தாயம் பூமி
விண்டதொரு மேல் வாசல் திறந்த போது
விசும்பினுட தாரணையாம் வெளிச்சங்கானில்
அண்டமென்ன பிண்டமென்ன ரெண்டும் ஒன்றாய்
ஆனதுவே இரு வினையும் அத்தமாமே

ஆமிந்த வாசிரவி ஊடே சென்று
அத்ததுவே பிராணாய மையாசொன்னேன்
ஓமிந்த வாசிரவி மேலே ஏறி
உடைத்திட்டால் பிரத்தியாகாரமாச்சு
தாமிந்த வாசிரவி தன்னைக் கண்டோர்
சமாதி எங்கும் வியாபகமாய் நிற்க்குமப்பா
நாமிந்த பிர்மமதே பிரமந்தன்னை
நாடி நிற்கக் கெற்பம்பின் நடையான்முற்றே



 -------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

3 comments:

  1. வாசிஇலே இடகலை பூரகந்தான் ரெண்டு
    வளமான சுழினை இற்கும் பகந்தான் நாலு
    தேசியென்ற பிங்கலை ரேசகந்தான் ஒன்று
    திடமாக பௌரனையை தொட்டு நீயும்
    ரேசி இந்த முறை அம்மா வாசி தொட்டு
    நிசமாக வளர் பிறையை தாக்கிமாறு
    மாசிஇலே பித்த நீர் பாயாவண்ணம்
    மதி பார்த்து கண்ணாலே நோக்குவாயே
    Dear Sir,
    Could you please explain me this pranayama technique a bit?. What I understand is
    Inbreath= through left nostril for 2 times
    Retention= for 4 times
    exhalation = through right nostril for 1 time.
    Am I right?
    My question is do I need to repeat the same through other nostril? ie alternate breathing -----. This poem is bit difficult for me to grasp. Please help.
    Thanks
    Muthu

    ReplyDelete
    Replies
    1. Dear Muthu ,
      well , you have unerstood well , but you didn't completely understood the meaning , i will publish one post regarding the vaasi practice soon in this blog , hope that will be more usefull for you.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete