சித்தர் பட்டினத்தார் அவர்களின் குரு யாராக இருக்கலாம் - ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
--------------------------------------------------------------------------------------------------
பொதுவாக சித்த மகாபுருஷர்களின் வரலாற்றை ஆராய்வதைவிட அவர்கள் நமக்கு தையை கூர்ந்து அருளிய வாழ்க்கை மற்றும் ஞான யோக மார்கங்களை ,முழுமையாக முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றுவது நன்று .
அதுவே முக்திக்கான வழியும் ஆகும் , இருப்பினும் சிறிது மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கீழ்வரும் பட்டினத்தார் பாடலை கூறி , அதற்க்கு பொருளும் கேட்டார் , எனக்கு புரியவும் இல்லை , பொருள் தெரியவும் இல்லை , அவரே முன்வந்து அந்த பாடலின் பொருளையும் சொன்னார் ( பிறகு தான் தெரிந்தது அது சரியான பொருள் அல்ல என்று ), சிறிது ஏற்றுக்கொள்ளும் படியும் இருந்தது , பிறகு அவர் சொன்ன தவ முறையும் பின்பற்றினேன் , அதுவே நான் சித்த மார்க்கத்தை நம்பவும் செய்தது , பிறகு அந்த பாடலே பட்டினத்தார் சித்தர் அவர்களின் குரு யார் என்பதையும் காட்டியது , சித்தர்களின் பாடல்களின் ஒவ்வொரு வரியுமே பலப்பல அர்த்தங்களையும் பலபல ரகசியங்கலயும் உணர்த்தும் .
அப்படி ஒரு பாடல் பின்வருகிறது .
பட்டினத்தார் பாடல் :
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவருக்கு
எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே ?
இதற்க்கு நேரடியான பொருள் அறிவது என்பது வெகு வெகு சிரமம் , இதற்கான பொருளை பாடலை பாடிய பட்டினத்து அடிகளோ அல்லது அவரின் குருவோ மொழியாவிட்டால் அல்லது அவர் குருவின் பாடலில் இதற்கான பொருள் இல்லாவிட்டால் அறிவது மிக மிக கடினம் , சரி பொருள் அவர் குருவின் பாடலில் இருக்குமென்றால் , அவர் குரு யார் , எப்படி அறிவது .
அய்யன் எம்பெருமான் முதல் சித்தர் குரு போக மகரிஷி அருளால் கிடைத்தது , ஒரு நாள் கோரக்கர் சித்தர் பாடலை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது மேல் சொன்ன அதே சொற்கள் கொண்ட பாடல் மற்றும் அதன் பொருளை மிக மிக தெளிவாக கோரக்க சித்த மகரிஷி அருளி இருந்தார் , தெளிந்துவிட்டது , தெரிந்துவிட்டது பட்டினத்தார் அவர்களின் குரு கோரக்க மகரிஷி என்று .
கோரக்க மகரிஷி பாடல்:
விந்து நிலை விமலைஅவள் பீடம் உச்சி
வெட்டாத சக்கரம்தான் கோசம் கோசம்
அந்தமுடன் இறைக்காத சலமே நாதம்
அன்புடனே பேசாத மந்திரம் சேர்க்கை
சுந்தரமாய் எட்டாத புஷ்பம் வாசி
சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம்
பந்தமறும் பரமனைய ஆன்ம சோதி
பகர்குருவப் பூசயுட்ரா ணுவங்கள் போமே
எல்லா பட்டினத்து சித்தர் பாடல் வரிக்கும் அவரது குருவான கோரக்க சித்தர் பொருள் உறைத்து விட்டார் , பொருளும் தெள்ளதெளிவாக உள்ளது , இதில் இருந்து நாம் கற்க வேண்டியது ,
1 .
மெளனமாக சுக்கிலத்தை விரயம் செய்யாமல் வாசி மூலமாக குருவை ( குரு = இறைவன் , அல்லது சிவன் ) பூசை ( பூரணத்துடன் முழுமையாக சஞ்சரிப்பது , இரண்டற கலப்பது )செய்யவேண்டும், செய்தால் பத்தாம் வாசலை திறந்து அவன் காட்சியைகாணலாம்.
2 .
சிறிது சிந்தித்தோமானால் , கோரக்க சித்தரின் ( சதுரகிரிக்கும் இவருக்கும் நிறைய தொடர்பு உள்ளது ) காலமே வேறு , பட்டினத்தார் காலமே வேறு , பட்டினத்து அடிகளார் நமக்கு நம் காலத்திற்கு வெகு அருகாமை இல் வாழ்ந்தவர் , அவருக்கு கோரக்க சித்தர் குரு மற்றும் வழி காட்டி என்றால் அவர் கண்டிப்பாக அவருக்கு நேரில் உபதேசம் செய்திருக்க வேண்டும் , எப்பொழுதெல்லாம் அவருக்கு யோக ஞான முறைகளில் தடையோ அல்லது பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் அவருக்கு நிவர்த்தி செய்திருக்க வேண்டும் , மேலும் அவர் வாழ்க்கை வரலாற்றில் வரும் இரு அதிசய நபர்கள் கோரக்க மகாரிஷியாகவே இருந்திருக்க வேண்டும் .
அப்படி இருக்க கோரக்க சித்தர் எம்பெருமான் போக மகரிஷிக்கும் முன்னால் வந்தவர் , அவர் பட்டினத்து அடிகளுக்கு உபதேசம் செய்தார் என்றால் இன்றளவும் அவர்கள் உலாவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் பொருளாகிறது .
ஆதலால் , யாருக்கும் சிறிது கூட சந்தேகம் வேண்டாம் , சித்த புருஷர்கள் அனைவரும் இன்றளவும் நமக்காக உதவ தயாராக உள்ளார்கள் , எப்படி பட்டினத்து அடிகளார் முழுமையாக அர்ப்பநித்தாரோ அப்படியே நாமும் அவர்களை முழு 101 % நம்பிக்கையுடன் துதித்தால் கண்டிப்பாக நமக்கும் தரிசனம் தருவார்கள் அதனுடன் முக்திக்கான வழியை அடைத்துக்கொண்டு இருக்கும் திரையையும் விளக்குவார்கள் .
அணைத்து சித்த புருஷர்களுக்கும் போற்றி போற்றி போற்றி .
முடிவு :
1 . பட்டினத்தார் குரு = கோரக்கர் சித்தர்
2 . இன்றளவும் உலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சித்த புருஷர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பாகள் , மக்களுக்காக , உண்மை நம்பிக்கை அர்ப்பணிப்புடன் உள்ளவர்களுக்கு வழி காட்டுவார்கள் .
போகர் பாதக்கமல சரணாய நமஸ்த்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
---------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
------------------------------------------------------
நிறைய நண்பர்கள் , பொருள் தவறு என்றும் , இது சரியான ஆராய்ச்சி அல்ல என்றும் , வரிக்கு வரி பொருள் வேண்டும் என்றும் பதில் எழுதி உள்ளார்கள் . அவர்களுக்காக தெரிந்தவரை பதிவு செய்கிறேன் .
அய்யன் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மகரிஷி அருள்வார் , அருள் செய்து கொண்டு இருக்கிறார்.
விந்து நிலை விமலைஅவள் பீடம் - இந்த வரிக்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறன் , காரணம் மிக மிக எளிதாக சித்தர் குரு போகரின் நண்பர் கோரக்கர் சொல்லி உள்ளார் , இருந்தும் சொல்கிறேன் , விந்து என்பது நாம் நினைப்பது அல்ல , விந்து என்பதின் பொருள் ஓளி , அதாவது யோக சாதனை செய்யும் பொழுது இருபுருவ மத்தியில் தோன்றும் ஓளி தான் விமலையான பராபரி சக்தி மாதேவி அன்னை வாலையின் பீடம் .
உச்சி வெட்டாத சக்கரம்தான் கோசம் கோசம் தலையின் உச்சியில் வெட்டாத சக்கரம் என்பது சஹஸ்ராரம் ஆகும் , ஆயிரம் இதழ் கொண்ட அந்த ஆதாரம் தான் கோசம் என்பது .
அந்தமுடன் இறைக்காத சலமே நாதம் இறையாத சலம் தான் நாதம்
அன்புடனே பேசாத மந்திரம் சேர்க்கை பேசாத மௌனமாம் மந்திரதினுடன் சேர்க்கை வேண்டும்
சுந்தரமாய் எட்டாத புஷ்பம் வாசி எட்டாத புஷ்பம் தான் வாசி , வாசியை எட்டிப்பிடிக்க முடியாது ஆனால் நுகரலாம் புஷ்பத்தை போன்று , அதனால் தான் வாசியை மலருடன் ஒப்பிட்டு உள்ளார் .
சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம் லிங்கம் என்பது சுக்கிலம் .
பந்தமறும் பரமனைய ஆன்ம சோதி பந்தம் அறுக்கும் பரமனே ஆன்ம ஜோதி.
பகர்குருவப் பூசயுட்ரா ணுவங்கள் போமே அவரே குரு , அவரை பூசை செய்தால் ஆணவங்கள் போகும் .
இப்பொழுது பட்டினத்தார் பாடலுக்கு வருவோம் , அவருடைய பாடலில் கடைசி வரியில் சொல்கிறார் , இவை எல்லாம் என் குரு நாதன் மொழிந்ததுவே .
இதை எல்லாம் அதே வார்த்தைகளுடன் சொன்னவர் கோரக்கர் பெருமான் , அதனால் அவர் குரு கோரக்கராக இருக்க வாய்ப்புகள் அதிகம் ,
இல்லை என்று வாதிடுபவர்களுக்கு , ஒரு சிறிய எடுத்துக்காட்டு , இன்று பலர் சொல்கிறார்கள் எனக்கு வள்ளலார் காட்சி கொடுத்தார் , அகத்தியர் பெருமானை நான் பார்த்தேன் , மேலும் மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹா சயருக்கு தீக்ஷை கிரியாவில் அளித்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள் .
௨௦௦௦ வருடங்கள் முன்பு வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பாபாஜி லாஹிரி மகா சயருக்கு தீக்ஷை அளித்தார் என்றால் நம்புகிறார்கள் , அவர் நம்ப காரணம் சொன்ன நபர் , சொன்ன விதம் , சொன்னவர்கள் கஷாயம் பூண்டு , நீட்டி , மழித்து இருந்தார்கள் , அதற்காக அவர் சொன்னதை நம்பினார்கள் .
இங்கு மழித்தல் , நீட்டல் இல்லாமல் , ஞானி என்ற போர்வை இல்லாமல் சொன்னால் , நம்ப ஆள் இல்லை .
சரி விஷயத்துக்கு வருவோம் , ௨௦௦௦ வருடங்கள் வித்தியாசத்தில் லாஹிரி மகாசயருக்கு பாபாஜி தீக்ஷை அளித்தது உண்மை என்றால் , ஏன் பட்டினத்து அடிகளுக்கு கோரக்கர் குருவாக இருக்க முடியாது , அவர் குரு இவர் தான் என்று இந்த ஒரு பாடல் சான்று போதாதா .
யார் யாரோ சொல்கிறார்கள் நான் தினமும் வள்ளலாரிடம் உரையாடுகின்றேன் என்று , இவர்களே இப்படி என்றால் , பட்டினத்து சுத்த முத்தி சித்தர் கோரக்க பெருமான் சீடராக இருக்க துளி கூட வாய்ப்பு இல்லையா .
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது , சிலர் சொன்னதை அவர்களுக்கே திருப்பி சொல்கிறேன் , நுனிப்புல் மேய்வது தவறு .
யார் குரு யார் என்று ஆராய்வது தேவை இல்லாத ஒன்று , ஆனால் அதை ஆராய்ந்ததின் முடிவு நன்றாகவே அமைந்தது , போலிகள் யார் என்று அனுபவ பாடம் கிடைத்தது , எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மஹா முனி மகரிஷிக்கு அரோகரா .
ஏதாவது தவறு இருந்தால் அது அடியேனையே சேரும் , எதாவது நன்மை இருந்தால் அது குரு சித்தர் போகர் பெருமானை சேரும் .
அய்யன் குரு முதல் சித்தர் எம்பெருமான் போகர் மகரிஷி பாத கமலாயா சரணம் சரணம் சரணம் , போற்றி போற்றி போற்றி.